கார்கில் போரில் உயிர் துறந்தவர்களை நினைவு கூறும் தினம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

கார்கில் போர் முடிந்த தினம்
கார்கில் விஜய் திவாஸ்..



மலையில்/மழையில்
வெயிலில்/குளிரில்
புதரில்/குழியில்
தங்கியே /போராடி
தன்னுயிர் தந்து
நாட்டின் மானம் காத்த
கார்கில் போரில்
உயிர் துறந்தவர்களை
நினைவு கூறும் தினம்!



வருடத்தில்
ஆறு மாதம் மூடியிருக்கும்பாதை!
செங்குத்து மலைசரிவு
மேலேற...போர்கருவி/மருந்து பொருள்/
மலையேறும் கருவி/உணவு பொருளென
20 கிலோ சுமத்தல்/எதிரி தாக்க வர/
ஓடி ஒளிய இடமில்லாத நிலை!
உறைகடி பனியும் மரணம் கிட்டும் நிலை!
இத்தனையையும் மீறி
தாய்நாட்டுக்கு உழைத்த
தங்க மகன்களுக்கான நினைவு தினம்!


1999- மே முதல் ஜூலை வரை
இந்தியா - பாகிஸ்தானுக்கிடையில் 
நடந்த தொடர் 84 நாட்கள் நடந்த போர்!
ஜம்மு/காஷ்மீர் மாநிலம்
கார்கில் நகரம்
டைகர் மலையில் நடந்த போர்!
கார்கிலை மீட்க 
இந்திய அரசு மேற்கொண்ட
விஜய் நடவடிக்கை கண்ட போர்!
பாகிஸ்தான் படை பின்வாங்க
இந்தியா கார்கிலை கைப்பற்றிய போர்!


பாகிஸ்தான் இராணுவமும்
காஷ்மீர் போராளிகளும்
கட்டுப்பாட்டுக்  கோட்டை தாண்டி
இந்தியாவிற்குள் நுழைந்ததே
போருக்கு காரணமாயின!
காஷ்மீர் போராளிகள் மீது பழி போட
கிடைத்த ஆவணங்கள்
பாகிஸ்தான் தளபதி அஷ்ரஃப் ரஷீத்
தலைமையிலான திட்டமிடலென
நிரூபித்த தகவலான போர்!


527 இந்திய இராணுவ வீரர்கள்
4000 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்
இறப்பினை...
1363 இந்திய வீரர்கள் படுகாயம்
665 பாகிஸ்தான் வீரர்களின் காயம்...
இந்தியாவின் ....ஒரு போர் விமானம்
ஒரு உலங்கு வானூர்தி 
சுட்டு வீழ்த்தல் கண்ட போர்!
இராணுவத்திற்கு துணிவூட்டி
எதிரியை மண்ணை கவ்வ வைத்த
சரித்திரத்தில் இடம் பிடித்த
சாதனை நாயகன் 
பிரதமர் அடல் பிஹாரியின்
சாதூர்ய வியூகம் கண்ட போர்!


அணு ஆயுத சக்தியுடைய 
இரு நாடுகளுக்கிடையே நிகழ்ந்த
நேரடி மோதல் போர்!
1971...சிம்லா உடன்படிக்கை ....
இந்தியா - பாகிஸ்தான் 
கட்டுப்பாட்டு எல்லை தாண்டி
இராணுவ மோதல்களில் 
ஈடுபடக் கூடாதெனும் ஒப்பந்தம்
பாகிஸ்தான் மீற ...நிகழ்ந்த போர்!


மிதமான வானிலை,
கோடை குளுமை/நீண்ட குளிர்,
-48டிகிரி வெப்பநிலை,
காலியான நிலையிலிருந்த
இராணுவ கண்காணிப்பு தளங்கள்,
பாகிஸ்தான் கட்டுப்பாட்டின் 
ஸ்கார்டூ நகரம்...கார்கிலின் 173கிமீ
தொலைவில்/தேவையான 
ஆயுத வினியோகித்தலில்...
இத்தனையும் பாகிஸ்தான்
அத்துமீறலின் காரணங்களாகின!


பிரதமர் வாஜ்பாயின் 
இருபதாம் தேதி பிப்ரவரி
லாகூர் பயணம்...
இரு நாடுகளுக்குமிடையே
சமரச போக்குவரத்து நிகழ!
மே மாதம் 3 ஆம் தேதி
மேய்ப்பர்கள் மூலம்
பாகிஸ்தான் ஊடுருவல் அறிதல்!
மே 5 ல் இந்திய இராணுவம் 
ரோந்து குழுவில் நோட்டமிடல்!
அதில் 5 இந்திய வீரர்கள்
பாகிஸ்தான் வீரர்களால் பிடிபட்டு
சித்ரவதை செய்து கொல்லப்படுதல்!
மே 9...பாகிஸ்தானின் குண்டுவீச்சில்
கார்கில் ஆயுதக்கிடங்கு சேதமடைதல்!


மே 10 ல் பாகிஸ்தானின் ஊடுருவல்
திரஸ்/கச்சர்/முங்கோ பகுதிகளில்!
மே 15 ல்இந்திய இராணுவப்படையின்
கார்கில் நோக்கிய பயணம்!
மே 26 ல் வான் வழி தாக்குதல் துவக்கம்!
மிக்.21 & மிக் 27 ..இரு போர் 
விமானங்கள் பாகிஸ்தான் சுடுதலில்
இந்தியாவின் இழப்பானது!
லெப்டினன்ட் நசிகேதா பாகிஸ்தான்
பிணைக் கைதியாக கொண்டு செல்லல்!


மே 28 ல் இந்திய போர்விமானம்
எம்.ஐ.17...சுடப்பட 
4 இந்திய வீரர்களின் உயிரிழப்பு!
ஜூன் 1 இந்தியாவின் NH lA 
தேசிய நெடுஞ்சாலையை
பாகிஸ்தான் குண்டு வீசி தாக்குதல்!
ஜூன் 5ல்...அத்துமீறிய ஊடுருவலில்
பாகிஸ்தானின் உள்நோக்கம் அறிதல்!
ஜூன் 6 ல்...கார்கிலில் 
பெரும் தாக்குதல் துவக்கமாகுதல்!
ஜூன் 9 ல்..இந்தியா
படாலிக் பகுதி இரு நிலைகளை
இந்தியா முனைப்புடன் கைப்பற்றுதல்!


ஜூன் 13 ல்...திரஸிலுள்ள
தோலோபிஸ் பகுதியை 
இந்திய இராணுவம் கைப்பற்றுதல்!
ஜூன் 15...அமெரிக்க அதிபர் கிளிண்டன்
பாகிஸ்தான் அதிபரை
படைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்!
ஜூன் 29...இரு முக்கிய நிலை
புள்ளி 5060 & 5100 இந்தியா வியூகம் அமைத்து கைப்பற்றுதல்!
ஜூலை 2...கார்கிலில் 
இந்திய இராணுவத்தின் ஆக்ரோஷ
மும்முனை தாக்குதல்!
ஜூலை 4..தொடர் 11 மணி 
நேரப் போராட்டம்...பயனாக
டைகர் ஹில் பகுதி மீட்பு!
ஜூலை 5 ...கிளிண்டனுடன்
நவாஸ் ஷெரிப் சந்திப்பு...
தன் படைகளை திரும்ப பெற
சம்மதம் தெரிவித்தல்!
ஜூலை 7...படாலிக் பகுதியின்
ஜூபார் இடம் இந்தியா கைப்பற்றுதல்!


ஜூலை 11..பாகிஸ்தான் இராணுவம்
பின்வாங்க/இந்திய இராணுவம்
படாலிக் பகுதியில்
 முக்கிய இடங்களை கைப்பற்றுதல்!
ஜூலை 14..இந்திய பிரதமர்
விஜய் நடவடிக்கை ..
வெற்றியென அறிவித்தல்!
ஜூலை 26...இந்தியாவின்
போபர்ஸ் பீரங்கி கார்கில் போரை
முடிவினுக்கு கொண்டு வந்து...
அத்துமீறி நுழைந்தவர்களை
புறமுதுகிட்டு ஓட வைத்து....
அதிகார பூர்வமாக
போர் வெற்றி தெரிவித்த தினம்!


8000 மிதிவெடிகள்/கையெறி 
குண்டுகள்/குண்டெறியும் துப்பாக்கி/
விமான எதிர்ப்பு துப்பாக்கிகள்/
காஷ்மீரி கொரில்லா/ஆப்கான்
கூலிப்படை உதவிகளென
 பாகிஸ்தானின் வியூகங்கள்
அத்தனையும் எதிர்கொண்டு
இரவின் இருளில்
கடும் குளிரில் ...தாக்குதல் நடத்தி
போர் முற்றிலும் முடிவுக்கு வந்த தினம்!


கிளிண்டனின் உரை...
"பாகிஸ்தான் அதிபர் செயல்பாடு
அதிருப்தி தருகிறது. லாகூர் வந்து
அமைதி காண ஒப்புதல் தந்த இரு
மாதத்தில் பாகிஸ்தான் நடத்திய
ஆக்ரமிப்பு ....பேச்சுவார்த்தையை
அர்த்தமற்றதாக்கியது. பெரும்போர்
நிகழாமல் விட்டது இந்தியாவின்
பெருந்தன்மையைக் காட்டுகிறது"!


வீர விருதுகள்

1.பரம் வீர் சக்ரா விருது

1.கிரேனடியர் யோகேந்திர சிங்
2. லெப்டினன்ட் மனோஜ்குமார் பாண்டே
3. கேப்டன் விக்ரம் பத்ரா
4. ரைஃபில்மேன் சஞ்சய்குமார்


2.மகாவீர் சக்ரா விருது

1.கேப்டன் அனுஜ்நாயர்
2.மேஜர் சரவணன்


3. வீர்சக்ரா விருது

சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜா


ஊடகம் பங்கு

1.நேரடியாக ஒலிபரப்பி மக்களிடையே
     நாட்டுப்பற்று வளர்த்தது.
2.பாகிஸ்தான் பிடிவி
    டான்...பாகிஸ்தான் நாளிதழ் 
    தடையானது!
3. தனியார் ஊடகங்கள் போரின்
    வெளிப்படை தன்மையைக் காட்டி
     நிறைவு பணியாற்றியது!


கார்கில் போர் விளைவு

1.நாட்டு மக்களிடையே தேசப்பற்று
    அதிகரிப்பு!
2. வான்படை விமானி கொல்லப்படல்.
3. பாகிஸ்தான் உடனான அனைத்து
     உறவுகளையும் முறித்தல்.
4.போருக்கு பீரங்கி/செயற்கைகோள்
    புகைப்படம்/ஆளில்லா விமானங்கள்/
    குண்டுகள்...எனும் உதவிகள்
     புரிந்த இஸ்ரேலுடன் உறவு பலமானது!
5. சுப்ரமணியம் அறிக்கையால்...
     கவனக் குறைவு/போருக்கு 
     ஆயத்தமற்ற தன்மை/அணு ஆயுதம்
     பெற்றுள்ள தைரியம்  ...போருக்கு
     வியூகமான காரணங்களென 
      அறிய நேரிட்டது!
6. இந்திய இராணுவம் தன்னிடம்
     பிடிபட்ட 8 பாகிஸ்தான் இராணுவ
     வீரர்களை 13.08.1999ல் விடுவிப்பு!
7. கார்கில் சின்னம்...
     திரஸ் பகுதியில்..தோலோலிஸ்
    மலையடிவாரத்தில் அமைத்தது!
8. அமிதாப் பச்சன் தந்தை
     ஹரிவன்ஸ் பச்சன் 
     கார்கில் நுழைவு வாயிலில்
     கவிதை எழுதியது!
9.  அருங்காட்சியகத்தில்...கார்கில்
      போர்வீரர்கள் படங்கள்/போரின்
      ஆவணங்கள்/பதிவேடுகள்/
     பாகிஸ்தானின் ஆயுதங்கள்
      வைக்கப்பட்டுள்ளது!
10. போர் வெற்றி நினைவாக...
      13வது ஆண்டு விழாவில்
       15கிலோ எடையுள்ள இந்திய
       தேசியக்கொடி நினைவுச்
       சின்னமாக ஏற்றப்பட்டது!
11.படங்கள்...(கார்கில் சம்பந்தப்பட்ட)
அ). 1999..பிரைஸ் ஆப் புல்லட்ஸ் பாடல்.
ஆ).2002...சைனிகா..கன்னட படம்
இ)2003..L.O.C.கார்கில்..இந்தி படம்.
      2003...தூப் ..இந்தி படம்.
 ஈ) 2004..லட்சியா...இந்தி படம்
உ).மிஷன் பஃதே...தொலைக்காட்சி
       தொடர்.
ஊ).50 டே வார்....திரைப்படம்.
எ). 2008...குருஷேத்ரா...மலையாள படம்
ஏ).லாக்....பாகிஸ்தானிய திரைப்படம்.
ஐ)டேங்கோ கார்லி...இந்தி படம்.
ஒ). கீர்த்தி சக்ரா...திரைப்படம்.


பிரதமர் வாஜ்பாய்
கார்கில் சென்று....
"என்னை இவ்வுயரங்களில் தங்க
  விடாதே! இவ்வுயரங்களின் மேல்
   மரங்கள்/புற்கள் கூட வர மறுக்கும்!
   இப்பனிப் பிரதேசங்கள் நிறமற்றவை!
    பனி மற்றும் மரணம் கூட 
    வெண்மையே!" என கவிதை எழுதினார்!


பாகிஸ்தான் இராணுவ
வீரர்களை எதிர்த்து...
தம்முயிரை துச்சமென நினைத்து
வீரத்தோடு போரிட்டு
வெற்றியை நாட்டுக்குப்
பரிசளித்த தியாகிகளை
கார்கில் இராணுவ வீரர்களை
நினைவு கூறும் தினம்!


அமெரிக்கா/இங்கிலாந்து/
ஜப்பான்/ஜெர்மன்/ பிரான்ஸ்/
இஸ்ரேல்...தொலைக்காட்சிகள்
நேரடி ஒளிபரப்பிய போர்!
சாபெட் சாகர் பெயரில்
வான்வழி ஆபரேஷனில்
30 வீரர்களை பலி தந்த போர்!
கார்கில் விஜய் திவாஸ் பெயரில்
 கொண்டாட்டம் காணும் போர்!
அசாத்திய துணிச்சல்
அற்புதமான வியூகம்
பிரதமர் வீரர்களுக்கு தந்த போர்!
32000 அடி உயர மலை
தாக்குதலை அனாயசமாக
எதிர்கொண்ட வீரதீர சாகசப்போர்!


இராணுவம்/கலவரம்/போர்/துணிவு
என்றாலே கார்கில் என
முத்திரை கண்ட போர்!
காஷ்மீர் எங்கள் பூஞ்சோலை
கை வைத்தால் வரும் சாவோலை
என வீர முழக்கம் சொன்ன போர்!


தாய்நாட்டின் தகைமை காக்க
தாய்/தாரம்/குழந்தைகள் மறந்து
தன் உதிரத்தால்
நாட்டின் சரித்திரம் எழுதிய
கார்கில் வீரர்களுக்கு
விழிநீர் வழிய
தேசபக்தியுடன் வீரவணக்கம்
செலுத்தி வணங்குவோம்!
ஒவ்வொரு வருடமும்
ஜூலை 26 ல்...
அத்தியாகிகளை நினைவேந்தி 
பெருமை படுத்துவோம்!


வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!!


நெஞ்சார்ந்த வணக்கத்துடன்...



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.