ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கட்டியவர் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
பி.சா. சுப்ரமண்ய சாஸ்திரி
பிறந்த தினம்
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில்
முதன்முதலில் மொழிபெயர்த்த,
சென்னை பல்கலைக்கழகத்தில்
தமிழில் முனைவர் பட்டம் பெற்ற
முதல் ஆய்வறிஞர்
பி.சா.சுப்ரமண்ய சாஸ்திரியின்
ஜூலை 29 ன் திகதிய பிறந்த தினம்!
கொல்லி மலைப்பகுதி
பாலகிருஷ்ணப்பட்டியில்
புரோகிதர் பணியாற்றும்
தந்தை சிறப்புற
29.07.1890 ல் பிறப்பு !
நேஷனல் உயர்நிலைப் பள்ளியில்
பள்ளிப் படிப்பு!
பிஷப் ஹீபர் கல்லூரியில்
கணிதத்தில் பட்டப்படிப்பு!
இலக்கணம்/தத்துவ
சாஸ்திரங்களில் நிபுணரான
நீலகண்ட சாஸ்திரியிடம்
சமஸ்கிருதம் பயிலல்!
அம்மொழியில் M.A.பட்டம் பெற்றார்!
ச.குப்புசாமி சாஸ்திரியிடம்
அலங்கார சாஸ்திரங்களையும்,
காசி இந்து பல்கலைக்கழக
பேராசிரியர் சின்னசாமியிடம்
மீமாம்சமும் பயின்றவர்!
பணிகள்.....
பிரசிடென்சி கல்லூரியில்
பேராசிரியர் பணி!
திருவையாறு அரசர்
கல்லூரியில் முதல்வர் பணி!
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
சமஸ்கிருத துறை தலைவராக பணி!
வித்தியா ரத்தினம்
வித்தியா நிதி
வித்யா பூஷணம்
பெயர்களில் பட்டங்களானது!
மகா மகிமோ பாத்தியாய
பட்டத்தினை சாகித்ய அகாடமி
சூட்டி பெருமிதப்பட்டது!
ஆய்வு.....
1930 ல் சென்னை பல்கலைக்கழகத்தில்
"தமிழ் இலக்கண கோட்பாடுகளின்
வரலாறும்/சமஸ்கிருத இலக்கியத்தோடு
அவற்றுக்கான தொடர்பும்"
என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார்!
தொல்காப்பியம் முழுவதும் ஆராய்ந்து
தமிழிலும்/ஆங்கிலத்திலும்
உரை எழுதினார்!
விளக்க முறை இலக்கணம்
வரலாற்று இலக்கணம்
ஒப்பீட்டு இலக்கணம்
இம் மூன்றுக்குமான
இலக்கணம் எழுதியவர்
இவர் ஒருவர் மட்டுமே!
புறநானூறினை ஆய்வு செய்து
ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு!
வடமொழி இலக்கிய வரலாறு
வடமொழி வரலாற்று நூல்களை
எழுதிய பெருமை வாய்ந்தவர்!
1. An enquiry into the relationship of
Tamil & Sanskrit .
2. History of grammatical theories
In Tamil.
3. Comparative Grammar of Tamil.
4. சங்க நூல்களும் வைதீக மார்க்கமும்.
5. இக்கால தமிழ் இலக்கணம்.
6. இந்து மத வினா-விடை
7. A critical study of Valmiki Ramayana.
8. Synopsis of Indian systems of
Philosophy.
9. கைர்வாணி கிராந்தானு சரிதம்.
10. காஞ்சி மகா பெரியவர் கேட்க...
பாணினிக்கு பதஞ்சலி எழுதிய
உரையான மகாபாஷ்யத்தை...
ஆங்கிலத்தில்...Lectures on
Pathanjali ...என 4000 பக்கங்களில்
14 பகுதிகள் கொண்ட மாபெரும்
நூலாக மொழிபெயர்ப்பு! இதற்கென
காஞ்சி பெரியவர் வழங்கிய பட்டமே
"வாணி திரிவேதி பிரயாக்"!
11. திருக்குறளுக்கு உரை ஊழுதி
அதிலே பல அதிகாரங்களுக்கு
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்!
40 க்கும் மேற்பட்ட நூல்களை
எழுதியபி.சா.சுப்ரமணிய சாஸ்திரியை
அமெரிக்க மொழியியலின் தந்தை
என போற்றப்படும் லெனார்ட்...
"தொல்காப்பியத்தின் பெருமை
ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம்
உலகெங்கும் பரவச் செய்தவர்"
எனும் பாராட்டினைக் கொடுத்தார்!
வாழ்நாள் முழுவதும்
தமிழ்மொழி ஆராய்ச்சிக்கென
செலவிட்டவரின் புலமையை
வெளிநாட்டு
ஸ்டெங்கனோ/ஹோல்கர்/
பெடர்சன் கீத் ...பாராட்டினர்!
தமிழ்/ஆங்கிலம்/சமஸ்கிருதம்/
பிரெஞ்சு/கன்னடம்/தெலுங்கு/
மலையாளம்/ஜெர்மன்...முதலிய
அனைத்து மொழிகளும் அறிந்த
பி.சா. சுப்ரமணிய சாஸ்திரியை
நம் நாட்டு உவே.சா./சி.பி.ராமசாமி
ஐயர்/வையாபுரி பிள்ளை
போன்றோர் புகழ்ந்து பாராட்டினார்கள்!
டென்னிஸ் ஆட்டத்தில் வல்லவர்,
இலக்கண-இலக்கிய வல்லுநர்,
ஏழை மாணவர்களின்
கல்விக் கட்டணத்தை கட்டியவர்,
நான்கு வேதங்களை
மாணவர்களுக்கு நடத்தியவர்,
திருவையாறில் திருக்குறள்
வகுப்பு நடத்திய
எளிய மாமனிதர்
பி.சா சுப்ரமண்யத்தின்
130 வது பிறந்த நாளினுக்கு
மனம் நிறைந்த
வாழ்த்துகளை வழங்கிடுவோம்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அரசினர் பெண்கள் மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.
Comments
Post a Comment