வேலூரில் பிளஸ்-2 பாடங்கள் அடங்கிய வீடியோக்கள் பதிவிறக்கம் - முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு.

முதன்மை கல்வி அலுவலகத்தில் பிளஸ்-2 பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து, அதனை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் பணி நடந்தது.



தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு காரணமாக அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தே படிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து அவற்றின் மூலமாகவும் பாடங்கள் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. பிளஸ்-2 மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று மடிக்கணினியில் பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று இணையதளம் மூலம் மடிக்கணினியில் வீடியோ தொகுப்பை பதிவிறக்கம் செய்ய முயன்றனர். ஆனால் அதில் பல்வேறு சிரமங்கள் காணப்பட்டன. குறிப்பாக ஒரு மடிக்கணினியில் வீடியோ தொகுப்புகள் பதிவிறக்கம் செய்வதற்கு பல மணி நேரமானது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலகத்தில் பிளஸ்-2 பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து, அதனை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் பணி நேற்று நடந்தது. இதனை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த வீடியோ தொகுப்புகளை பள்ளி ஆசிரியர்கள் ‘பென்டிரைவ்’ மூலம் காப்பி செய்து, அவற்றை மாணவர்களின் மடிக்கணினியில் சேமித்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அதிகரிகள் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.