ஒவ்வொரு ஆண்டும்  சிறப்பு சான்றிதழ் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி
பிறந்த தினம்

சமூகப் போராளி,
சமூக முன்னேற்றத்தின் 
ஊன்றுகோல்,
தன்னார்வலர்,
எழுத்தாளர்,
கல்வியாளர்,
தமிழ் ஆர்வலர் எனும் 
பன்முகப் பரிமாணம் கொண்ட
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியின்
134வது பிறந்த தினம்! 


அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு
என்றிருந்த காலத்தில்
பழைய பஞ்சாங்கத்தினை எதிர்த்து
எதிர்நீச்சல் போட்டு
4 வயதில் திண்ணைப் பள்ளியில்
தொடங்கி/தந்தையின் ஊக்கமிருக்க/
உள்ளூர் கல்லூரியில் பெண்களை
சேர்க்காத காரணத்தினால்
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில்
சேர தைரியமாக விண்ணப்பித்த
30.07.1886 ல் பிறந்த 
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியின்
பிறந்த தினம்!


வழக்கறிஞர் நாராயணசாமி/
பாடகி சந்திரம்மாளின்
மூத்த மகளாக,
இசை வேளாளர் சமூகம் சார்ந்த,
சந்திராம்மாள்/நல்லமுத்து
எனும் இரு தங்கைகளோடு,
இராமையா எனும் தம்பியோடு
அறிவு ஜீவியாகப் பிறந்தவர்!


கல்லூரிப் படிப்பிற்கு 
அன்றைய சமஸ்தான ஆட்சியிலிருந்த
பழமைவாதி அதிகாரிகள் எதிர்ப்பு!
பெண் கல்வியில் பெரும் ஆர்வம்/
முற்போக்கு சிந்தனைவாதியான மன்னர்
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
அதிகாரிகளின் எதிர்ப்புகளை
தூக்கி எறிந்து/கல்லூரியில்
முத்துலட்சுமி படிக்க அனுமதித்தார்!


தாயார் நோயால் சிரமப்பட்டு இறக்க,
முத்துலட்சுமியும் உடல்நிலை
பாதிப்பு காண ...படிப்பில் தடை!
மருத்துவராகும் வைராக்கியம்
மனதினில் நிலைக்க,
1907 ல் சென்னை மருத்துவக் 
கல்லூரியில் /நாட்டின் முதல் பெண்ணாக
சேர்ந்து படித்து/படிப்பில் 
சிறந்து விளங்கினார்!


ஒவ்வொரு ஆண்டும் 
சிறப்பு சான்றிதழ்/தங்கப் பதக்கம் பெற்று
1912 ல் மாநிலத்தில் முதல் மாணவியாக
நாட்டின் முதல் பெண் மருத்துவர்
எனும் பெருமை பெற்றவரானார்!


சமூகப் பணி/படிப்பில் ஆர்வமிருக்க
திருமணத்தில் நாட்டமில்லை!
தங்கை/தம்பிகளின் எதிர்காலம்
மனதில் கொண்டு/சம்மதிக்க/
பிரம்மஞான சபையினை அடையாறில்
நடத்தி வந்த திரு.டி. சுந்தர ரெட்டியை
1924 ல் அர்த்தமற்ற சடங்குகளின்றி
திருமணம் செய்து கொண்டார்!
முதல் மகன் திட்டக் குழுவின் இயக்குநர்/
2 வது மகன் 80000 நோயாளிகளின்
சிகிச்சை காணும் அடையாறு 
மருத்துவமனையின் மருத்துவர்!


தமிழ்ப் பணிகள்....
1.இந்தி மொழிக் கிளர்ச்சியில்
    பங்கேற்பு!
2.தமிழிசை இயக்கம்/தமிழ் வளர்ச்சி/
    தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வு
    போராட்டங்களில் பங்கேற்றார்!
3.மாதர் இந்திய சங்கம் நடத்திய 
   பெண்களுக்கான ஸ்திரி தர்மம்
   எனும் மாத இதழின் ஆசிரியரானார்!


சமூகப் பணிகள்....
1.பிரான்சு நாட்டு தலைநகர் பாரிசில்
   1926 ல் 46 நாடுகளின் பிரதிநிதிகள்
    கலந்து கொண்ட அகில உலக
    பெண்கள் மாநாட்டில் இந்தியாவின்
   சார்பில் கலந்து கொண்டு நிகழ்த்திய
    உரையில்...பெண்களை அடிமைகளாக
   நடத்தும் வழக்கம் அழிந்து/ஆண்களுக்கு
    நிகராக பெண்கள் முன்னேற முன்
    வர வேண்டுமென வலியுறுத்தினார்!
2. இந்தியப் பெண்கள் சங்கத்தின்
    முதல் தலைவர்!
3. சென்னை மாநகாராட்சியின்
     முதல் பெண் துணை மேயர்!
4. 1925 ல் அன்றைய சென்னை மாகாண
    சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
    துணைத் தலைவரான
     முதல் பெண்மணி!
5. சட்டசபையின் 5 ஆண்டு பணிக்
     காலத்தில் ....
     தேவதாசி முறை ஒழிப்பு,
     இரு தார தடைச்சட்டம்,
     பால்ய திருமணங்களுக்கு தடை,
    பெண்களுக்கு சொத்துரிமை
     வழங்கும் சட்டம்...போன்ற
    புரட்சி சட்டங்களை நிறைவேற்றினார்!
6.அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை    
   வளர்க்க அடையாரில் அவ்வை
    இல்லம் உருவாக்கினார்!
7. சென்னையில் புற்றுநோய் மருத்துவ
    மனையினை அமைக்க பல விதங்களில்
   நிதி திரட்டி அக்டோபர் 1952 ல்
    அன்றைய பிரதமர் நேருவின் மூலம்
    அடிக்கல் நாட்டினார்!
8. அரசு மருத்துவமனையில் பணி
     செய்த முதல் பெண் மருத்துவர்!


கிட்டப் பார்வை,
பிறக்கும் போதே ஆரோக்கியமின்மை,
கடுமையான வயிற்றுப்போக்கு,
மெலிந்த நோஞ்சான் உடம்பு,
கடுமையான சளி உபாதை,
இரத்த சோகை நோய்,
ஆஸ்துமா/கடுமையான இந்நோயால்
செத்து செத்து பிழைத்தல்,
எனும் அத்தனை வியாதிகளுக்கும்
குத்தகைகாரியானவர்!


விருதுகள்.....
1.சேவைகளுக்கான மத்திய அரசு
    1956 ல் அளித்த பத்மபூஷண் விருது!
2. தமிழக அரசு இவர் பெயரில் நடத்தி
    வரும் மகப்பேறு நிதியுதவி திட்டம்!


டாக்டர் முத்துலட்சுமியின்
முதல் குழந்தை...
கக்குவான் இருமல்
வலிப்பு நோய்
நினைவாற்றல் மறைய/தீவிர
சிகிச்சை கண்டு நினைவு திரும்புதல்!
2 வது குழந்தை....
கண் வீங்கி
குடல் மந்தம்
மலச் சிக்கல்
எடை கூடாத நிலை!


முதல் தங்கை ...
வயிற்றுப் போக்கு
அம்மை நோய் பாதிப்பு!
2 வது தங்கை....
புற்று நோயால் இறப்பு!
இத்தனை பாதிப்புகளும்
நாட்டு மக்களுக்கான மருத்துவ 
சேவையில் பாடுபட வைத்தது!


அன்றைய நீதிக்கட்சி சுகாதார
அமைச்சர் பனகல் ராஜா...
குழந்தைகளை பாதிக்கும் வியாதிகள்
பற்றி  படிக்க இங்கிலாந்து அனுப்பினார்!
இவர் நினைவாற்றலை பாராட்டிய
தமிழக அரசு...பெண்களுக்கான
சிகிச்சை பயில உபகார சம்பளத்தோடு
பயிற்சியும் தந்தது!


ஒரு தெய்வம் நேரில் வந்தது
என சொல்லத் தக்க வகையில்....
எந்தக் கட்சியும் நடத்தாமல்,
உடல் ஆரோக்கியமும் இல்லாமல்,
பல்வேறு நோய்த் தாக்குதலுக்குள்ளாகி,
பண பலமேதும் இல்லாமல்,
தன் தங்கை நல்லமுத்துவை படிக்க
வைத்து/ராணி மேரிக் கல்லூரியின்
முதல் பெண் முதல்வராக்கி,
குடும்ப /சமூக ..சேவைகளை
செவ்வனே ஆற்றியவர்!


பொது சுகாதாரம்
பாலின வேறுபாடு பாகுபாடு
இளம் சிறுமிகளின் வாழ்க்கை...எனும்
போராட்டங்களில் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டவர்!


எதையும் தடைக்கற்களாக
எடுத்துக் கொள்ளாமல்,
படிக்கற்களாக நினைத்துக்
கொண்டு முன்னேறியவர்!


1925 ல் லண்டன் செல்சியா 
மருத்துவமனையில் 
தாய்..சேய் மருத்துவ ஆராய்ச்சியும்
ராயல் புற்றுநோய் மருத்துவமனையில்
புற்றுநோய் ஆராய்ச்சிகளையும்
திறம்பட மேற்கொண்டவர்!
1936 ல் முழுநேர மருத்துவ பணியோடு
நூல்கள் பல எழுதியதோடு
மீனவக் குழந்தைகளின் கல்விக்கு
பாடுபட்ட நன்னெஞ்சம் கொண்டவரின்
ஜூலை 30 ஆம் தேதிய
பிறந்த தினத்தில்
மனம் நிறைந்த பிறந்த தின
வாழ்த்துகளை அளித்திடுவோம்!



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.