ஸ்ரீ நாராயணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சி.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் ஆசியுடன் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 29 மாணவர்கள் 31 மாணவிகள் என மொத்தம் 60 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதிய 60 பேரும் தேர்ச்சி பெற்றார்கள். தொடர்ந்து 3 ஆண்டுகளாக 100 சதவிகித தேர்ச்சியை பதினொன்றாம் வகுப்பில் இப்பள்ளி பெற்றுள்ளது. நிஷா.பா என்ற மாணவி 551 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சுகந்த்.ச என்ற மாணவன் 505 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், அபிநயா.ம என்ற மாணவி 484 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் அனைவரையும் பள்ளியின் தாளாளர் முனைவர் மீ. சுரேஷ்பாபு, முதன்மை முதல்வர் திரு சீ. முரளிதர் மற்றும் முதல்வர் பாலமுருகன் ஆகியோர் இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.
Comments
Post a Comment