மலையாளம் பள்ளியில் கற்பித்த சூழலில் - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை பிறந்த தினம்

கன்னியாகுமரி மாவட்டம்
தேரூரில்
27.07.1876 ல் 
சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி
தம்பதிகளுக்கு
 இரு பெண் குழந்தைகளுக்கு
அடுத்து மகனாகப் பிறக்க
வணங்கும் கடவுள்
தேசிக விநாயகர் பெயர்
வைக்கப்பட்டவர்!


புகழ் பெற்ற கவிஞர்!
பக்திப் பாடல்கள்
இலக்கியப் பாடல்கள்
வரலாற்று நோக்குடைய கவிதைகள்
குழந்தைப் பாடல்கள்
வாழ்வியல் போராட்ட கவிதைகள்
இயற்கைப் பாடல்கள்
தேசியப் பாடல்கள்
வாழ்த்துப் பாக்கள்
கையறு நிலைக் கவிதைகள்
பல்சுவைப் பாக்கள்
என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்!


9 வயதில் தந்தை இழப்பு,
M.A.படிப்பு,
ஆசிரியர் பயிற்சி,
படித்த பள்ளியிலேயே ஆசிரியப்பணி,
24 வயதில் உமையம்மையுடன் திருமணம்!
தாயி என மனைவியை 
மரியாதை தொனிக்க அழைத்தல்!
குழந்தைப் பேறில்லாமல் போக
அக்காள் மகன் சிவதாணுவை
சுவீகாரம் செய்தல்
என வாழ்வியல் நிகழ்வு கண்டவர்!


குழந்தை கவிஞர்

தமிழில் குழந்தைகளுக்காக
1938 ல் 25 பாடல்களை எழுதி
மலரும் மாலையும் தொகுதியில்
வெளியீடு செய்தவர்!


"தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
ஆங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்றது வெள்ளை பசு
உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி"
இன்றளவும் பிரபலமான பாடல்!


"காக்காய் காக்காய் பறந்து வா
கண்ணுக்கு மை கொண்டு வா!
கோழி கோழி கூவி வா
குழந்தைக்கு பூ கொண்டு வா!"
அனைவரும் முணுமுணுக்கும் பாடலானது!


இனிமைக் கவிஞர்

"உள்ளத்தில் உள்ளது கவிதை
இன்பம் உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெரிந்த தமிழில்
உண்மை தெரிந்து உரைப்பது கவிதை"
என கவிதைக்கே இனிமை சேர்த்தவர்!


சமுதாயக் கவிஞர்

"கண்ணப்பன் பூஜை செய்யும் கடவுள்
திருக்கோயிலிலே நண்ணக் கூடாதா?
நாங்கள் நடையில் வரல் ஆகாதோ?"


"உள்ளத்தில் உள்ளானடி-அது நீ
உணர வேண்டுமடி!
உள்ளத்தில் காண்பாயெனில்
கோயில் உள்ளேயும் காண்பாயடி"!
என சமுதாய விழிப்புணர்வு தந்தவர்!


விடுதலைக் கவிஞர்

"நேரும் கொடுமையெல்லாம்
நினைக்க நெஞ்சம் துடிக்குதையா!"
என உணர்ச்சியை வெளிப்படுத்தியவர்!


ஆசிரியப்பணி

1. நாகர்கோவில் கோட்டார் ஆரம்பப் பள்ளி
2.நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சி பள்ளி
3.திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில்
   (ஆங்கிலப் புலமை & ஆழ்ந்த
        தமிழ்ப்புலமை பெற்றிருக்க
ஆசிரியப் பணியில்
36 ஆண்டுகள் ஆசிரியப் பணி!


மொழி பெயர்ப்பாளர் பணி

1. Edwin Arnaldன் ஆசிய சோதியை
    தமிழில் தழுவி எழுதினார்.
2. பாரசீக கவிஞர் உமர் கயாம் 
    பாடல்களை தழுவி தமிழில் எழுதினார்.


ஆராய்ச்சியாளர் பணி

1. மனோன்மணியம் மறுபிறப்பு
     என்ற திறனாய்வு கட்டுரையை 1922 ல்
     எழுதினார்.
2. சென்னை பல்கலைக்கழகத்தின்
      தமிழ் பேரகராதி உருவாக்கத்தில்
      மதிப்பியல் உதவியாளர் பணி!
3. கம்பராமாயணம் திவாகரம்
4. நவநீதப் பட்டியல் முதலிய
     எனும் ஏட்டுப் பிரதிகளை 
      தொகுத்திருக்கிறார்!
5. காந்தளூர்ச்சாலை பற்றிய
     ஆய்வுநூலை எழுதினார்!


எழுதிய நூல்கள்

அழகம்மை ஆசிரிய விருத்தம்
ஆசிய சோதி (1941)
மலரும் மாலையும்(1938)
மருமக்கள் வழி மான்மியம்(1942)
தேவியின் கீர்த்தனங்கள்
குழந்தை செல்வம்
கவிமணியின் உரைமணிகள்


மலையாளம் பள்ளியில் கற்பித்த
சூழலில்.....
தமிழ்மொழியை சாந்தலிங்க
தம்பிரான் என்ற துறவியிடம் கற்றார்!
அவர் அறிவுறுத்த வடிவமைத்தது...
ஆசிரியர் விருத்தம் என்ற தலைப்பில்
பொருள் நிறைந்த சைவ அடியார்கள்
பாடல்கள் போன்ற கவிதை !


மலரும் மாலையும்

எளிமை/இனிமை நிறைந்த
அமுதாய் இனிக்கும் தமிழ் பாடல்
கவிதைத் தொகுப்பு!
அப்பம் திருடின எலி/பசுவும் கன்றும்/
பொம்மை கல்யாணம்...போன்றவை
இளம் பிள்ளைகளுக்கு மகிழ்வைத்
தருவதோடு/உலக நடைமுறைகளை
மனதில் புகட்டி/நல்லன நோக்கி
குழந்தைகள் நடக்க வழி தரும்
கவிதைக் கொத்துகளாகியது!


கடல் தெய்வம்

"கல்லும் மலையும் குதித்து வந்தேன்
பெருங்காடும் செடியும் கடந்து வந்தேன்
எல்லை விரிந்த சமவெளி எங்கும்
இறங்கி தவழ்ந்து தவழ்ந்து வாழ்ந்தேன்!"
...என கடல் சூழ் பூமித்தாயின்
பொலிவை சொல்லுகிறார்!


சாதிப்பிரிவு

"கீரியும் பாம்புமாய் சண்டையிட்டு
சாதி கீழென்று சொல்லி விட்டு
பாரத தாய் பெற்ற மக்களென்று
நிதம் பல்லவி பாடும் பொருளெதுவோ?"
...என சத்தமின்றி சாடியிருப்பார்!


ஆசிய சோதி

புத்தர் பாலுள்ள
நேசத்தில் போதனைகள் பிறந்தது!
"ஆயிரம் பாவங்கள்
 செய்ததெல்லாம்
ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?"
என அழகுற கவிதை தந்தவர்!


கல் உண்ணாமை/அகிம்சை
ஆகிய அறநெறிகளை
கவிதைகளாக தந்தவர்!
அண்ணாமலை பல்கலைக்கழகம்
பேராசிரியர் பணி தர முன்வர
அன்போடு மறுத்தவர்!


ராஜாஜியுடன் உறவு

நாகர்கோவில் வந்து
கவிமணியை அரசவைக் கவிஞர்
பணி ஏற்க பணிக்க/கவிமணியோ 
நாசுக்காக மறுத்து/நாமக்கல் கவிஞரை
அப்பதவியில் அமர்த்த பரிந்துரைத்து
தான் பிறர் நலம் பேணும் பெருமான்
எனவும்/பொன் பொருள் நாடாத
தன்மையவர் என்றும் புலப்படுத்தியவர்!


பிற சிறப்புகள்

1.நாட்டின் பண்டைய வரலாற்றை
    அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்
    கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடுபாடு!
2.சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு
   ஆதரவாக கவிதை எழுத "விடுதலை 
   கவிஞர்" எனப்பட்டார்!
3. தேவியின் கீர்த்தனங்கள்...இசைப்பாடல்
     மேடைகளில் இசைக்கலைஞர்கள்
     விரும்பி பாடினர்!
4. இவரது சொற்பொழிவுகள் அத்தனையும்
     கவிமணியின் உரைமணிகள் 
     எனும் நூலாக வெளி வந்தது!


திரைப்படங்களில் பாடல்கள்

பைத்தியக்காரன்/மணமகள்/
தாயுள்ளம்/கண்ணின் மணிகள்/
கள்வனின் காதலி/நன் நம்பிக்கை
...போன்ற படங்களில் இவர்
பாடல்கள் வலம் வந்தது!


நாமக்கல் கவிஞரின் பாராட்டு

"கவிமணியின் கவிப்பெருமை
 தினமும் கேட்பது என் செவிப்பெருமை"
என புகழ்ந்து பேசும் அளவிற்கு
சிறப்பு மிக்கவர்!


கடவுளைக் காண இயலா பாடல்

"கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரமேறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான்
எங்கு தேடியும் கண்டிலனே!"
என விரக்தியாகவும் பாடியுள்ளார்!


வ.உ.சிதம்பரம் பற்றி கவிமணி

"கை நோவ/கால் நோவ
கல்லுடைத்து/செக்கிழுத்து
மெய் சோர்ந்து/ஊக்கம் விடாது
நின்ற ஐயன் சிதம்பரம்
அன்று சிறை சென்றிலனேல்
இன்று சுதந்திரம் காண்பாயோ?"
என. வ.உ.சி.யினை புகழ்ந்திருப்பார்!


இத்தகு பெருமைமிகு 
தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞரின்
ஜூலை 27 ஆம் திகதிய
பிறந்த நாளுக்கு
வாழ்த்துகளை மனம் நிறைய
வழங்கிடுவோம்!



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.