இளம் வயதிலேயே மல்யுத்தம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
தீரன் சின்னமலை நினைவு தினம் இந்திய போராட்ட வீரர், கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து/ கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர், கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்ட, ரத்தினசாமி கவுண்டர்/ பெரியாத்தாவிற்கு மகனாக 17.04.1756 ல் பிறந்து, 31.07.1805 ல் மண்ணுலகம் விட்டு மறைந்த தீரன் சின்னமலையின் நினைவு தினம்! பிறப்பு ...ஈரோடு மேலப்பாளையத்தில் இறப்பு...சங்ககிரியில் அடக்கம்....ஓடாநிலையில். ஈரோடு மாவட்டம் காங்கேயம் வட்டம் சென்னிமலை அருகில் மேலப்பாளையம் சிற்றூரில் பிறந்தவர்! இயற்பெயர் ...தீர்த்தகிரி கவுண்டர்! பழையகோட்டை பட்டைக்காரர் மரபு சார்ந்தவர்! தீர்த்தகிரி சர்க்கரை எனும் பெயரானவர்! இளம் வயதிலேயே மல்யுத்தம்/தடி வரிசை/ வில்பயிற்சி/ வாள் பயிற்சி/சிலம்பாட்டம்...போன்ற போர்ப்பயிற்சியினை சிவந்தாரையர் பார்வழி வந்தாரிடம் கற்றுக் கொண்டவர்! கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு செல்வதை அறிந்து, அப்பணத்தினை கவர்ந்து ஏழைகளுக்கு விநியோகித்தார்! வரி தண்டல்காரர்களிடம்... "சென்னிமலை சிவன்மலைக்கிடையில் சின்னமலை பறித்தது" ...என சொல்லச் சொன்னவர்! அன்றிலிருந்து சின்னமலை என அழைக்கப்...