திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திட்ட பணிகளை அமைச்சர்கள் வீரமணி ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திட்ட பணிகளை அமைச்சர்கள் வீரமணி, நீலோபர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் சாலை செக்குமேடு பகுதியில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் மற்றும் வேப்பமர சாலை பகுதியில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அரசு தொழிற்பயிர்ச்சி நிலையம் கட்டிட பணிகளை வணிக வரித்துறை அமைசசர் கே.சி.வீரமண, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரசு தொழிற்பயிர்ச்சி நிலையம் கட்டிட பணியில் ஒப்பந்ததாரர் சுவர் எழுப்ப முழு செங்கலுக்கு பதிலாக பொடி செங்கல்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால் சுவர் பலமாக இருக்காது என்று சிலர் புகார் கூறினர். இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்த பெண் அதிகாரியிடம் பொதுமக்களின் புகார் குறித்து விசாரித்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் ஒப்பந்ததாரிடம் கேட்ட போது கோவம் அடைந்தார். மேலும் கட்டிடம் எவ்வாறு கட்டுவது என்று சொல்லி தாருங்கள் என்று பதிலளித்தார்.
அரசு தொழிற்பயிர்ச்சி நிலையத்தின் கட்டிடம் தரமாக கட்ட வேண்டும், மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் பல்லாண்டு கட்டிடம் நிலைத்து நிற்க வேண்டும், இதற்காக மாவட்ட ஆட்சியர் கட்டிட பணி முடியும் வரை அவப்போது ஆய்வு பணி மேற்கொள்ள வேண்டும் என்று பகுதிமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆய்வு பனியின் போது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், வட்டாட்சியர் சிவபிரகாசம், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) பாபு, அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..(9150223444)
Comments
Post a Comment