வெற்றி என்பது நிரந்தரமல்ல...தோல்வி என்பது இறுதியானதல்ல - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

பில்கேட்ஸ் பிறந்த தினம்




வெற்றி என்பது நிரந்தரமல்ல.
தோல்வி என்பது இறுதியானதல்ல!
வெற்றி ஒரு மோசமான ஆசிரியர்.
அது புத்திசாலிகளையும் மயக்கி
தோல்வியே நமக்கு இல்லையென்று
நினைக்க வைத்து விடும்!........இந்த
அற்புதமான பொன்மொழியை தந்த
உலக கோடீஸ்வரனும்,
மைக்ரோசாப்ட் இயக்குனரும்,
அதன் தொழில்நுட்ப ஆலோசருமான ..
வில்லியம் ஹென்றி கேட்ஸ் எனும்
பில்கேட்ஸின் பிறந்த தினம்!


அமெரிக்காவின் சியாட்டில்
வாஷிங்டன் நகரில்..
பிரபல வழக்கறிஞர்
வில்லியம் கேட்ஸ்/
வங்கி இயக்குனர் வாரிய
பணியாளர்
மேரி மேக்ஸ்வெல்
தம்பதிகளுக்கு /இரு 
சகோதரிகளுக்கு சகோதரனாக
28.10.1955. ல் பிறந்தவர்!


வாழ்க்கை வரலாறு

1.பில்கேட்ஸ் 13 ஆண்டுகள்
    தொடர்ந்து உலக பணக்காரர்கள்
  பட்டியலில் முதலிடம் தக்க வைத்து/
  பாரிஜாத நினைவுகளென
  வாழ்க்கை ரதம் செலுத்தும் சாரதி!
2. சின்னக் குழந்தை கூட
    கேட்டவுடன் சொல்லி விடுமளவு
    புகழ் தேங்கி நிற்கும் இடமெல்லாம்
    இறவாப் புகழின் அடையாளமானவர்!
3. லட்சுமி மிட்டல்/ சிலிம் ஹேலு/
     வாரன் பப்பட் ஆகிய
    உலக பணக்கார ஜாம்பவான்களில்
    ஒருவராக/ வான விதானத்தில்
    ஊழிக்காலத்திற்கும்
    வர்ணஜாலம் காட்டும் 
     உழைப்பாளி எனும் 
    மந்திரச்சொல்லிற்கு உரிமையாளர்!
4. கேட்ஸ்...மெலிண்டா எனும்
     அறக்கட்டளை மூலம்....
     எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழை
      எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேமி
      எவ்வளவு முடியுமோ அவ்வளவு
      தானம் செய்....எனும் தத்துவ
      தாரக மந்திரத்தை கடைப்பிடிப்பவர்!
5. 900 கோடி வித்தியாசத்தில்
     ஸ்லிம் ஹேலே முன்னிடம் பிடிக்க
      இரண்டாவது உலக பணக்காரராகி
      வங்கி கணக்கில் 20000 கோடி
      ரிங்கிட் எப்போதும் வைத்திருப்பவர்!
6.  நிர்வகிக்க நிதியமைச்சர்/
      3 துணை அமைச்சர்/பல நூறு
      கணக்கில் பொருளாதார நிபுணர்
      கொண்ட கணித மேதைகளை
      கைப்பிடிக்குள் வைத்திருப்பவர்!
7.  அறக்கட்டளை மூலம்
       இந்தியா உட்பட பல நாடுகளுக்கு
       மருத்துவம் மற்றும் குழந்தைகள்
       நலனுக்கான ஊட்டச்சத்துகளை
       அளிக்கும் அழகான வாழ்வியல்
      பணிகளோடு தூய்மை சேவையில்
       கரம் கோர்த்து உதவுபவர்!
8. பள்ளிப் படிப்பு காலத்தில்
     கணிதம்/ அறிவியல் பாடங்களில்
     அதிக நாட்டம் கொண்டவர்!
9.  கூச்ச சுபாவம் கொண்டதால்
     தனிமை விரும்பியாக/
     ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்து/
     சக மாணவர்கள் திரைப்படம்
     பற்றிப் பேச/எண்கள் பற்றியே
     சிந்தித்துக் கொண்டு இருந்தவர்!
10. தன் 13 வது வயதில்   
       லேக் சைட் பள்ளியில்
       கணினி ஆர்வம் கொண்ட/
       அப்பள்ளியின் கணினியை
      இயக்கி/ஆசிரியர்களின் செல்லப்
       பிள்ளையாக இருந்தவர்!


11. தந்தையைப் போல் வழக்கறிஞராக
       உறவினர்கள் வற்புறுத்த/
       அப்படிப்பில் சேர்ந்து/ 
      ஆர்வமின்மையால் தொடராதவர்!
12. கணினி கல்வியில் தீராத தாகம்
       இருக்க/ கணினி தொழிற்பாடு
       நூல்களை வாங்கி படித்து/இரவு
      பகல் பாராமல் /கடும் பயிற்சியை
      நண்பன் பால் ஆலனுடன்
      புரோகிராம் பற்றி அறிதலில்
      செலவிட்டு/ புதுமை படைத்து
      அச்செயலில் புகுந்து விளையாடினார்!
13. பலருக்கும் இன்ஸ்பிரேசனாக/
       பணியாளர்களுக்கு கடுமையான
       மேலாளராக/திறமையான 
      முடிவுகளை தடாலடியாக எடுத்து/
       வகுப்புகளில் பெண்களுடன்
      நட்பும் கண்டவர்!
14. நார்வே/ஜப்பான்/தைவான்/
       பிரான்ஸ் நாடுகள்...
       அரிச்சந்திர ரகசியமான 
       பணக்காரரான சூட்சுமம் அறிந்து
       வழக்குகள் போட/கோடிக்கணக்கில்
        நஷ்ட ஈடு தந்தவர்!
15.  Auto desk எனும் மென்பொருள்
        உரிமையாளர்கள் வழக்கில்
      160 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
       நஷ்டஈடு தந்தவர்! அவர் பிறந்த
       தாய் மண்ணே அவரின் Microsoft
      Windows க்கு எதிரிகளாகி Virus
      கண்டுபிடித்து உலா விடுமளவு
      எதிரிகளை கொண்டவர்!
16. உலகின் 80% கணினி இவரின்
        .Windows செயல்பாட்டினால்
      எனும் நிலைக்கு கணினி உலக
      சாம்ராஜ்ய மன்னரான இவர்
      கணினி உலகில் அதிகம் விரும்பப்    
      படுபவரும்/அதிகம் வெறுக்கப்
      படுபவருமானவர்!
17.அனைவரும் தன் Microsoft
      நிறுவன கட்டுப்பாட்டுக்குள் வர
      வேண்டுமென்ற பேராசை கலந்த
      வெறியுணர்வால் விரோதிகளை
      சம்பாதித்தவர்!
18. சாதாரண மத்திய தரக் குடும்பம்
       கண்ட இவர் 25 வருட உழைப்பில்
      உச்சாணிக் கொம்பு வாழ்க்கையில்!
      தன் நண்பர்கள் துணையோடு
      சின்னச் சின்னதாக/Program 
      எனும் மென்பொருளைஎழுதியவர்!
19. உள்ளூர் கம்பெனிக்கு  சம்பள 
      பட்டுவாடா எழுதி தந்த பணம்
       இவருக்கு தர முடியாமல் /குழுவை
        விட்டு வெளியே அனுப்ப முயல/
      "இப்ப போறேன். மீண்டும் அழைக்க
      சந்தர்ப்பத்தில் குழுவின் நிரந்தர
      தலைவனாக தானிருப்பேன்" என
      சொல்ல /வெளியே அனுப்பும்
      முடிவை குழு கைவிட்டது!
20. வேறு தொழிலில் அலை பாயாத
       மனம்/தன்னம்பிக்கை...இவ்விரண்டும்
      முதல் நிலை கோடீஸ்வரனாக்கியது!


21. 1974 ல் இன்டெல் நிறுவனம்
       புதிய Micro processor அறிமுகம்
      செய்யும் பணிக்கு பில்கேட்ஸ்
      உதவி நாட/நண்பர் Paul உடன்
       பணி முடித்து/அச்சந்தர்ப்பத்தில்
      Fortran/pascal/ cobal. எனும் 
      கணினி மொழிகளில் தேர்ச்சி
     பெற்று/ Program எழுத துவங்கி/
      இன்று உலகமே போற்ற உயர்ந்தவர்!
22.  The Road Ahead,
        Business @ the speed of thought...
       எனும் இரு புத்தகங்களை எழுதியவர்!
23. தன்னைப் பற்றிய சுயசரிதை 
       எழுதாதவர்! காரணம் கேட்க...
      இறந்த காலம் எவருக்குமே
      கசப்பானது! எதிர்காலம் எழுத
       ஆசை!" என்று சொன்னவர்!
24. மற்றவர்கள் இவரைப் பற்றி
       6000 புத்தகங்கள் எழுதி உள்ளனர்!
       ஆய்வு செய்து 100 பேர் Doctor
       பட்டம் பெற்றனர்! ஆய்வு செய்த
       நல் உள்ளங்களை அழைத்து/
      1000 அமெரிக்கன் டாலர் பணம்/   
      விருந்து/பரிசு தந்து கௌரவித்து
       அனுப்பிய நல்லெண்ணமுள்ளவர்!
25.  இவரின் Microsoft நிறுவனத்தில்
       52000 பேர் வேலையிலிருப்பவர்கள்.
       28000 பேர் இந்தியாவிலிருந்து
       போனவர்கள்/இதிலும் 26000 பேர்
       தமிழர்கள் என்பதில் பெருமைப்
       பட வேண்டியவர்களாகிறோம்!
26. முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவிடம்
        இவரின் போட்டியயாளர்கள்...
       பில்கேட்ஸ் வேலை தருவது 90% 
       இந்தியர்களுக்கு. ஆகவே நாடு
       கடத்தவும் என கேட்க/ பதிலை   
      அமெரிக்க பல்கலைக்கழகத்திடம்
      கேட்க/பதிலாக பேராசிரியை 
       "இந்தியாவில் அன்பு கலந்த
       ஒழுக்கப் பாடம் கற்றுத் தருவதால்
       உழைப்பில் நேர்மை யிருக்க
       அவர்களை பணியில் அமர்த்துவதே
       பில்கேட்ஸின் சாமார்த்தியம்"
       என சொல்ல ஒபாமா அதிர்ச்சியில்
       உறைந்தார்!
27. தன் டேபிளில் 3 கணினியுடன்...
       1 கணினி....வரும் இமெயிலுக்கு
        2 வது கணினி...விஷயங்கள் படிக்க
        3வது கணினி...இன்டர்நெட்
       பணிகளுக்காக வைத்திருப்பவர்!
28. AIDS நிவாரணம்/கல்வி/மலேரியா
        ஒழிப்புக்காக Gates foundation
       மூலம் 850 கோடி ரிங்கிட் நன்கொடை
       வழங்கிய நல்லிதயம் கொண்டவர்!
29. தன்னிடம் 5.  வருடம்பணி பார்த்த 
       மெலிண்டாவின் ஆர்ப்பரிப்பில்லா
       தன்மை/அறிவு பார்த்து/மனைவி
       ஆக 01.01.1994 ல் ஹவாய் தீவு
       ஒன்றை வாடகை எடுத்து/பல
        மில்லியன் டாலர் செலவில்
       மணம்புரிந்து/ இரு பெண்கள்..
      ஒரு ஆண் என 3 பிள்ளைகளின்
       தகப்பன் ஆனவர்!


30.. அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்ட
       சிறிய அளவில் கணினி வாங்கி,
       அவற்றுக்குத் தேவையான
      மென்பொருள்களை எழுதி விற்க,
      தேவையான அளவு பணம் கிடைக்க,
      அறிவுப் பசியும்/பணப் பசியும்
      ஒரு சேர சேர்த்துக் கொண்டவர்!l
   31..1973 ல் மேல்படிப்பிற்காக
      ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில்
      இடம் கிடைக்கப் பெற்றார்!
       படித்து வேலைக்குப் போகும்
       ஆசை அறவே அற்றவர்!
       நிறைய பணம் சம்பாதிக்கும்
       குறிக்கோள் மட்டுமே கொண்டவர்!
32.  1975 ல் தனக்கொரு அடையாளமாக
        நண்பனுடன் சேர்ந்து...
        Micro computer software சுருக்கமான
        Microsoft நிறுவனம் தொடங்கினார்!
33.  பணியாற்ற இளைஞர்களை
       நிறுவனத்தில் அமர்த்தி, தன்
      திறமையால் தயாரிப்புகளை விற்றார்!
      பட்டி தொட்டிகள் எல்லாம்
      இவர் கணினிகள் உலா வந்தன!
      பணியாற்றிய இளைஞர்கள்
     இன்றைய கோடீஸ்வர பணக்கார
     பட்டியலில் முதல் 10 இடங்களில்!
34. 1980 ல் கணினி உலகில் புரட்சி..
       International business machines
       (IBM) நிறுவனம்....Microsoft
        நிறுவனத்துடன் மென்பொருள்
       தயாரிப்புக்காக கை கோர்த்தது!
35. Xerox மற்றும் Apple நிறுவன
       பொருள்களைத் திருடி /Copy
       எடுத்து/அதன் மூலம் Windows
       மென்பொருள் தயாரித்து/
       விற்றதாக குற்றச்சாட்டும்/
       நாளிதழ் விமரிசனங்களும்
       கடுமையாக எழ/ சமாளித்தவர்!
36.. அறக்கட்டளையை 2000 ல்
       நிறுவி/ 7பில்லியன் டாலருக்கு
       அறப்பணி செய்தவர்....அந்த
       அறப் பணிகளை தன் microsoft
       நிறுவன தயாரிப்பு வாங்கும்
       நாட்டிற்கு மட்டும் ஆர்வம் காட்டி
       முதலிடமாக ஆப்ரிக்காவிற்கு
       செய்வதாக குற்றச்சாட்டும் எழுந்தது!
37. பள்ளி இறுதி தேர்வில் A grade
       எடுத்தவர் ...20 வது வயதில்
       30 வருடமாக தீர்க்கப்படாமலிருந்த
       Pan cake sorting ன் விடை
      கண்டறிந்த அதி புத்திசாலி!
38. காரினை அதி வேகமாக
       ஓட்டி அபராதம் கட்டியவர்.
       போர்ஷ் 911 கார்/அல்புர்யூர்க்
       பாலைவனப் பகுதியில்
       அதிவேகப் பயணம் கண்டவர்.
       தன் நண்பனின் 928 காரை
       அதிவேகமாக ஓட்டி/கட்டுப்பாடு
      இழந்து/தலைகீழாக ஓடி/அதை
       சரி செய்ய /ஒரு வருடமாக்கியவர்!
39. பிடித்த game...மைன்ஸ் வீப்பர் கேம்.
       1990 ல் microsoft வளர்ச்சி உச்சம்!
       ஊழியர்களோடு விமானப் பயணம்!
       1997 ல் தனக்கென 21 மில்லியன்
       அமெரிக்கன் டாலரில் ஜெட் 
        விமானம் வாங்கியவர்!
40. ஒரு முறை பத்திரிக்கையாளன்
       குதர்க்கமாக கேள்வி கேட்க/
       கழிவறையில் சென்று/ கதவை
      மூடி/ அவன் மன்னிப்பு கேட்ட பின்
       வெளியே வந்தவர்!
41. உணவு சமைப்பதை விரும்பும்
       இவர்/ இரவில் உணவு முடிந்ததும்
        பாத்திரம் கழுவ விரும்புவார்!
42..பணம் வரும் போதும்/புகழ்      
      வரும் போதும் மனிதன் பணிவாக/
       எளிமையாக வாழ உதாரணமானவர்!


43. கொரோனா ஒழிப்பு பணிக்காக
       காணொலியில் பிரதமருடன்
       16.05.2020. ல் பேசி/பரவல் தடுப்பு
       மற்றும் மருந்து கண்டுபிடிப்புக்கு
       உதவியாக/அறக்கட்டளை மூலம்
       செய்வதாக சொன்னதோடு முதலில்
       50 மில்லியன் அமெரிக்கன்
       டாலர் மனமுவந்து வழங்கினார்!
       பிலடெல்பியா மாகாணத்தில்
        INO 4800 எனும் தடுப்பூசி போட
        பரிசோதனைக்கு 40 பேர் தேர்வு/
        4 வார இடைவெளியில் தடுப்பூசி
         பணி வெற்றியடைய/10 லட்சம்
         தடுப்பூசி தயாரித்து உலக சுகாதார
         மையத்திற்கு அனுப்ப முடிவாகி/
         100 மில்லியன் டாலர் இதுவரை
         தந்து தன் மனிதநேயம் காட்டியவர்!
44.  1977 ல் ஆல்புகர்க் நகரின் 8 வது
        மாடியில் சிறிய அறையில்
        துவங்கிய கணினி பயணம்
        நாளொரு மேனி பொழுதொரு
        வண்ணமாக வளரக் காரணமான
         ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற
         பதவி உயர்வு/பரிசு/சம்பளம்/
         போனஸ் தந்து ஊக்கப்படுத்துபவர்!
45. தொழிலாளர்/நிர்வாகி/முதலாளி
      எனும் ஒரு முகமும்/மனிதாபிமானம்
      இன்னொரு முகமும்/என இருமுகம்
      கொண்டு வாழ்க்கையை வாழும்
       பில்கேட்ஸ் தோற்றது...
      தான் பலமுறை கேட்டும் Netcafes
       மென்பொருளை விற்க மறுத்த
       ஆன்டர்சனிடம் மட்டுமே!
46.  வசிக்கும் வீட்டின் மதிப்பு
        6300 கோடி! IBM நிறுவனத்திடம்
      தொடங்கிய "சரி" எனும் 
      ஒப்புதலுடனான தொழில் Software
      ராஜ்ஜிய சக்ரவர்த்தி ஆக்கியது!
47.பில்கேட்ஸ் வலைதளம் ..அவருக்குப்
      பிடித்த புத்தகம் மத்தேயு வாக்கர்
      எழுதிய "why we sleep?"...இளைஞர்
     சமுதாயம் தூக்கமின்மையால் 
      பாதிக்கலாகாது என விழிப்புணர்வு
      தருகிறார்!
48. வெற்றியாளர்கள் இருவகை.
       எதிர்கால பாதை கணித்து/ஓடி
       இடம் பிடிப்பவர் முதல் வகை.
     தானே தன்  திசை தேர்ந்தெடுத்து/
      ஒட்டு மொத்த உலகமும் தன்
     பின்னே ஓடி வரச் செய்யும்
      பில்கேட்ஸ் போன்றோர் 2ஆம் ரகம்!
49. பில்கேட்ஸ் தன் படிப்பு தாகம்
       தீர்க்க...ஒரு கணினி சென்டரில்
      அவர்கள் கணினி குறைபாடுகளை
      தீர்த்து/பதிலாக அந்த கணினி பயன்
      படுத்த ஒப்புதல் வாங்கினார்!
50.  17 வயதில் வாகனப் போக்குவரத்து
      விவரம் ஒரு காகித சுருளில்...
       Data entry போடும் பணி செய்தார்!
       Data entry சாதன மென்பொருள்
       கண்டுபிடித்து பாராட்டு பெற்றவர்!


51. ஆச்சரிய தகவல்கள்....
      டிக் டாக் டோ எனும் விளையாட்டு...
      மனிதர்கள் கருவியுடன் 
     விளையாடுவது. அதற்கான 
     Program பள்ளிப் படிப்பின்
     போது கண்டறிந்தவர்!
52. பள்ளிப் படிப்பின் போது
       மாணவர்கள்/மாணவிகளுக்கு
     தனித்தனியாக Coding எழுதியவர்!
53.தன் teen age பருவத்திலேயே
      World book encyclopedia வை
      முழுதும் படித்தவர்!
54. S.T.A. தேர்வில்1590/1600
        மதிப்பெண் எடுத்தவர்!
55. 1975 ல் ஹார்வார்டு பல்கலையில்
       இருந்து படிப்பை இடைநிறுத்தி 
       வெளியில் வந்தவர்!
56. லைசென்ஸ் இல்லாமல் வண்டி
       ஓட்டியதற்கும்/சிவப்பு சிக்னல் 
      எரியும் போது சாலை கடந்ததற்கும்
      அபராதம் கட்டியவர்!
57. போர்ச்சி கார் பிரியர். 13 வருடம்
       முன்பே போர்ச்சி 959 மாடல்
       கார் வாங்கியவர்!
58. விமான பயணம்/வீசர் குழுவினர்
      பாடும் ராக் பாடல்களை ரசிப்பவர்!
      விமானத்தில் 1994 ல் ஏலத்தில்
      30.8 மில்லியன் டாலர்க்கு வாங்கிய
      டாவின்ஸி எழுதிய புத்தகங்களை
      படிக்கும் பழக்கமுள்ளவர்!ஆண்டுக்கு
      50 புத்தகங்களாவது படிக்கும்
      புத்தகப்புழு!புதிய விஷயங்களை
      அறிந்து கொள்ள/ தனது அறிவை
      வளர்க்க புத்தகம் அவசியம் 
      என்று கூறுபவர்!
59. தாய் மொழி தவிர வேறு மொழி
       தெரியாததை குறையாக 
      நினைப்பவர்!
60. Microsoft நிறுவனத்தை விட
       ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்
       பற்றி ஆய்வு செய்ய விருப்பமுள்ளவர்!
61. ஊழியர்களின் வருகை/போகுதல்
       குறித்து முதலில் நேரம் துல்லியமாக
      கருவி மூலம் பதிவு செய்த முதல் 
      மாமனிதர்!
62. தன் பிரத்யேக ஏஜென்ட்களிடம்
      எங்கு/என்ன/யாருக்கு உதவி
      தேவை என கேட்கும் குணமுள்ளவர்!
63. மகாத்மாவின் பிறந்த நாளன்று
       பிரதமர் துவக்கி வைத்த தூய்மை
      இந்தியா திட்டத்திற்கு உறுதுணை
      ஆகவுள்ள பிரதமர் மோடிக்கு
      தன் அறக்கட்டளை மூலம்
      விருது தர எண்ணமிட்டுள்ளார்!
64. 15 தலைமுறைக்கு சொத்து
        (81.1 மில்லியன்) இருப்பினும்
       தன் பிள்ளைகளுக்கு$10 மட்டும்
       தரும் பழக்கமுள்ளவர்! பணம்
      மட்டுமே வாழ்க்கையல்ல என
      மகள்கள்/மகனுக்கு புரிய     
        வைப்பவர்!  
65...உழைக்கத் தயங்காதே!
         ஒரு கட்டத்துக்கு மேல்
        உண்மையாக உழைப்பவனுடைய் 
       உழைப்பை தனதாக்கி 
       கொள்ள தயங்காதே!


நீ என்ன செய்வாயென கேட்ட 
காலம் மலையேறிப் போனது!
என்ன செய்ய மாட்டாயென
கணினியை பெருமிதமாக
கேட்கும் காலமிது!
மிட்டாய் கடை இனிப்பு எழுதக் கூட
கணினி தேவை!
கலப்பை இருந்த இடமெல்லாம்
கணிப்பொறி!
வரப்பு இருந்த இடமெல்லாம்
வன்பொருள்!


தேவையறிந்து 
தேடியதும் விடை தரும் நண்பனாக..
இலக்கணம்/இலக்கியம்/கவிதைகள்
புதைந்திருக்கும் புலவனாக....
விளக்கமாக விவரித்து
பிழைகளை சுட்டிக் காட்டி
தெளிவாக பதிலுரைக்கும் ஆசானாக..
வரலாறு/அறிவியல்/அண்டம்
அனைத்தும் கொண்ட அறிஞனாக...
ரத்தமும்/சதையுமாகக் கலந்து
விரலுக்கும்/விழிகளுக்கும்
இடைவிடாமல் வேலை தரும்
கணினியை பட்டி தொட்டியெல்லாம்
உலவ விட்ட பில்கேட்ஸின்
65 வது பிறந்த நாளில் அவரைப் பற்றிய
 65 பண்புகளை மனதில் நிறுத்தி
வாழ்த்துவோம்!



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.