ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.
நல்லது சொல்வோம் 35.
நாலடி பயில்வோர் நூறடி உயர்வோம்!
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!
இது ஒரு புகழ்பெற்ற பழமொழி! இன்றைய இளைய தலைமுறைக்கு இதன் அர்த்தம் புரிவது சிரமம் தான்!
ஆலமரம் வேலமரக் குச்சிகளைக் கொண்டு பல் விளக்குவது இன்றும் கிராமத்தில் பலரின் பழக்கமாக இருக்கிறது!
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று அனுபவித்தவர்கள் சொல்லி வைத்தார்கள்!
அதேபோல நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பது நாலடிகளை உடைய நாலடியாரும் இரண்டு அடிகளை உடைய திருக்குறளும் வாழ்க்கைக்கு உறுதி தருகிற உயர்ந்த இலக்கியங்கள் என்பதை சொல்லி வைத்தார்கள்!
நாலடி நான்மணி நானாற்பது, ஐந்திணை, முப்பால் கடுகாம், கோவை பழமொழி, மாமூலம், இந்நிலையை காஞ்சியோடு ஏலாது என்பது கைந் நிலையும் ஆம் கீழ்கணக்கு என்பது பழைய பாடல்!
இது சங்கம் மருவிய காலத்தில் வரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து சொல்லப்படுகிற பாடல்!
சங்கப்பாடல்கள் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்கம் மருவிய காலம் கிபி மூன்றாம் நூற்றாண்டு இந்த 18 நூல்களில் மிக உயர்ந்த லட்சியங்களை வாழ்க்கைக்கு வேண்டிய உறுதிகளை சொல்லிக் கொடுப்பது நாலடியார் ஆகும்!
திருக்குறளை போல அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என முப்பால் உடையது! அறத்துப்பாலில் பதிமூன்று அதிகாரங்கள் 130 பாடல்கள்! பொருட்பாலில் 24 அதிகாரம் 240 பாடல்கள்!
காமத்துப்பாலில் 3அதிகாரம் 30 பாடல்கள் என 400 பாடல்களைக் கொண்டது! ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகள் கொண்டது!
இரண்டு பாடல்களை பார்க்கலாம்! உன்னான் ஒளி நிறான் ஓங்குபுகழ் செய்யான் துன்னரும் கேளிர் துயர் களையான் பொன்னே வழங்கான் பொருள் காத்திருப்பான் ஆனேல் அ ஆ இழந்தான் என்று எண்ணப்படும்!
இதில் வேறொன்றுமில்லை ஒருவன் தானும் உண்ண மாட்டான் பிறருக்கும் கொடுக்கமாட்டான்! மதிப்புகளை வளர்த்துக் கொள்ள மாட்டான்! தனக்கு புகழ்வருமாறு நல்ல செயல்களைச் செய்யமாட்டான்!
சொந்தக்காரர்களுக்கு உதவமாட்டான்! இரப்பவர்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டான்!
தன்னிடம் இருக்கின்ற பொருளை பூதம் காத்திருப்பது போல காத்து வைத்திருப்பான்! கடைசியில் ஒன்றும் இல்லை என்று போய் சேர்ந்து விடுவான்!
பொருள் தன்னிடமிருந்து உதவாவிட்டால் அதனால் எந்த பயனும் இல்லை என்பது இந்தப் பாடலின் கருத்து!
இன்னொரு பாடல் உடா அதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும் கெடா அத நல்லறமும் வைத்தீட்டி நாரி இழப்பர் வான்தோய் மலைநாட என்பது பாட்டு! இதிலும் வேறு ஒன்றும் இல்லை நன்றாக உண்ணமாட்டான்!
உடை உடுக்க மாட்டான் தன் உடம்பு வருந்துகின்ற மாதிரி இருந்தாலும் அடுத்தவர்களுக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டான்!
அறம் எதுவும் செய்வதற்கு விரும்ப மாட்டான்! நிறைய செல்வத்தை உன்னும் பொருட்களை தன் வீட்டில் குவித்து வைத்து இருப்பான்! ஆனால் யாருக்கும் கொடுக்காமல் பூட்டி வைத்து இருப்பான்!
கடைசியில் அந்த சொத்து சுகமும் என்ன ஆகும் தெரியுமா? தேனடையில் தேனீக்களால் கொண்டு வந்து சேர்க்கும் தேனை யாரோ கடைசியில் வந்து கொண்டு சென்றுவிடுவார்கள்!
அதே நிலைதான் இப்படிப்பட்ட மனிதருக்கு வந்து சேரும்! வான் மேகத்தை தொடுகிற மலைகளை உடைய மன்னவனே இதுதான் நீதி என்கிறார் ஆசிரியர்!
நாலடியாரை எழுதியவர்கள் நானுறு சமண முனிவர்கள் ஆவார்கள்!சான்றோர்கள் தம் வாழ்வில் அனுபவித்து அறிந்த உண்மைகளை உலகிற்கு சொல்கிறார்கள் அதுதான்அறம் அல்லது நீதி எனப்படுகிறது!
நாலடியாரில் வருகிற 400 பாடல்களும் இந்த சமூகத்தை நல்வழிப்படுத்த உதவுகின்றன!
நம் சிந்தனைகளை மெருகேற்றும் பன் புடையவை நாலடியாரை படித்தால் நம் சொல்லும் செயலும் உறுதியாய் இருக்கும்!
வாழ்வில் உயர்வு வந்து நம்வாசல் கதவை தட்டும்! நம்பிக்கை வளர்க்கும்!
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்!
நம்மை வாழ விடாதவர் நம் வாசலில் வந்து வணங்கிட வைத்துவிடும்!
மலை போல் வந்த சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்! செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்! என்பதை நாம் புரிந்து கொண்டு நல்ல அறஙகளை செய்ய முயற்சிப்போம்!
நாளை ஆனி மாதம் மகம் நட்சத்திரம் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் தில்லையில் சிவனோடு நேரடியாய் கலந்த நன்னாள்!
இன்று ஜூன் 25 நாளைய மக நட்சத்திற்கு முன்னால் வரும் இரவு சைவ சமய மக்களுக்கு மிக முக்கியமான நாளாகும்!
தில்லையிலே நடராசப் பெருமான் மாணிக்க வாசகருக்கு நேரடி காட்சி தந்து திருவாசகத்தை தன் கைப்பட படி எடுத்துக்கொண்டார் என்கிற அருள் நிகழ்ச்சி நடந்த நாள் ஆகும் !
திருவாசகம் தந்த மாணிக்கவாசகரை வணங்கி நிற்போம்! நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளும் தேசனை சிவலோகனை வணங்கி வரவேற்க காத்திருப்போம்!!
இப்படிக்கு வாரியார் தாசன் கவிஞர் ச.லக்குமிபதி வேலூர்- 9
Comments
Post a Comment