வேலூர் சி.எம்.சி க்கு ஆந்திர முதல் அமைச்சர் பாராட்டு...
டாக்டர் பி. வி. ரமேஷ் - தமிழக அரசு மற்றும் வேலூர் சி.எம்.சிக்கு பாராட்டு
தமிழக அரசும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும் (சி.எம்.சி) கோவிட் -19 நோயாளிகளுக்கு அளித்துவரும் சிகிச்சை முறையை குறித்து, ஆந்திர முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஷ் அவர்கள் பாராட்டுகளைப் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை டி.என்.எம் THE NEWS MINUTE செய்தி நிறுவனத்தோடு நடத்தப்பட்ட ஆன்லைன் கூட்டத்தில், மருத்துவரான டாக்டர் ரமேஷ், கோவிட் -19 நோயாளிகளிடையே மரணம் ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் 'சைட்டோகைன் ஸ்டார்ம்' என்ற நிலையம் 'பரவளாக இரத்த குழாய்களில் இரத்தம் உறைதல்' (டி.ஐ.சி). சைட்டோகைன் ஸ்டார்ம் எனப்படுவது, ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்ற அந்நோயாளியின் நோயெதிர்ப்பு தன்மையால் அதிக காய்ச்சல், சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும் நிலை.
“வைரஸ் மிகவும் வீரியமாக இருக்கும் பட்சத்தில், உடலின் லிம்போசைட்டுகள் (நோயெதிர்ப்பு உயிரணுக்கள் ) நுரையீரலில் வெள்ளம் போல பாய்ந்து நிரம்பிவிடும். பொதுவாக இது நடப்பதில்லை. பொதுவாக வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒரு சிறிய அளவு ஆன்டிபாடி உருவாவது தான் வழக்கம். COVID-19 தொற்றை பொறுத்தவரை திடீரென லிம்போசைட்டுகள் நுரைஈரலை நிறைத்துவிடுகின்றன. இது இயல்பாக வைரஸை நம்முடைய உடல் எதிர்க்கும் முறையாகும். மேலும் இது நுரையீரலை அடைத்து, மூச்சுத்திணறச் செய்கிறது. "ஒருவரின் சொந்த உடல் திரவத்தில் அவரது நுரையீரல் மூழ்கிவிடும் நிலை ஏற்படுகிறது”என்று டாக்டர் ரமேஷ் விளக்கினார்.
இறப்புக்கான மற்றொரு காரணத்தையும் டாக்டர் ரமேஷ் சுட்டிக்காட்டினார். இதுதான் டி.ஐ.சி ஆகும், இது இரத்த உறைதலை அதிகரித்துவிடும். இரத்த குழாய்களில் இரத்தம் அதிவேகமாக பொழிந்து உறைந்துவிடுகிறது என்று அவர் கூறினார்.
COVID-19 நோயின் தீவிர நிலையில், இன்டூபேஷன் மற்றும் வென்டிலேட்டர்கள் வேலை செய்யவதில்லை என்பதைக் சுட்டிக்காட்டிய டாக்டர் ரமேஷ், தமிழக அரசும் வேலூர் சி.எம்.சியும் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் காட்டிவரும் அணுகுமுறையை பாராட்டினார்.
"தமிழ்நாடு மற்றும் சி.எம்.சி வேலூர் ஆகியோர் சிகிச்சைக்கான ஒரு விவேகமான நெறிமுறையை கடைபிடிப்பதாக டாக்டர் ரமேஷ் கூறினார். இப்போது ஆந்திராவில் இந்த முறையை தான் நாங்கள் கடைப்பிடிக்க பரிந்துரைத்துள்ளோம் என்று கூறினார். இந்த சிகிச்சை முறை, ஸ்டெராய்டுகள் மற்றும் குறைந்த அளவிலான இரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகளை பயன்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதாகும் என்று அவர் கூறினார். என்னை பொறுத்தவரை, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் கொடுப்பதால் ஒரு யானையையே கொல்லக்கூடியது. இந்த மருந்துக்கு ஒரு மனிதன் என்ன ஆவான் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நோய்த்தொற்று செயல்படும் முறையை பார்க்கும்போது, சி.எம்.சியின் சிகிச்சை முறையை நடைமுறைப்படுத்தப்படுவதே பொருத்தமான போக்காகும் என்றார். ஆந்திர பிரதேசம் என்று எடுத்துக்கொண்டால் பல சிக்கலான காரியங்கள் உண்டு. ஆந்திர அரசாங்கம் இந்த நெறிமுறையை பின்பற்ற பரிந்துரைத்திருக்கிறேன் என்று டாக்டர் ரமேஷ் டி.என்.எம் செய்தி நிறுவனத்திடம் கூறினார். இருப்பினும், ஐ.சி.எம்.ஆர் பல மருந்துகளை பரிந்துரைத்துள்ளது மற்றும் இன்னும் பல மருந்துகள் விற்பனையில் உள்ளது. இவையெல்லாம் இருந்தாலும், கடைசியாக சிகிச்சையளிக்கும் மருத்துவர் தான் முடிவெடுக்கவேண்டும்.
TNM உடன் பேசிய வேலூர் CMC மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜே.வி. பீட்டர், ஒவ்வொரு வாரமும் SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் நோய் குறித்த தற்போதைய கருத்துக்கள் மற்றும் மருத்துவ பத்திரிகை தகவல்கள் அனைத்தையும் ஒரு மருத்துவ குழு ஆய்வு செய்கிறது என்று கூறினார். இதன் அடிப்படையில், COVID-19 குழு நோயாளிகளுக்கு அவர்களின் அறிகுறிகளின் அடிப்படையில், அதாவது, லேசான, மிதமான மற்றும் கடுமையான சிகிச்சையளிப்பதற்கான வழிமுறைகள் நிர்ணயிக்கபடுகிறது.
உலக அளவில் பயன்படுத்தப்படும் ஸ்டெராய்டுகள் தான் தட்சமயம் உபயோகிக்க படுகிறது என்று கூறினார்.
அசித்ரோமைசின் மருந்தொடு HCQ கலந்து, குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று டாக்டர் பீட்டர் கூறினார். “இது நோயாளியின் பொதுவான உடல்நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சையளிக்கும் மருத்துவர் எடுக்கும் முடிவாகும். தற்போது கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பெரும்பாலான நிறுவனங்கள் HCQ மருந்தை பயன்படுத்துவதில்லை.
Comments
Post a Comment