திருமண பரிசாக அம்மா தந்த வைர மோதிரங்கள்: வனிதா உருக்கம்.
இயக்குனர் பீட்டர் பால் என்பவரை நாளை(ஜுன் 27) 3வது திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், இவர்களது திருமணம் மிக எளிமையாக வீட்டில் வைத்து நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வாழ்க்கை ஒரு புத்தகம் போன்றது. சில அத்தியாயங்கள் சோகமாக இருக்கும், சில மகிழ்ச்சியாக இருக்கும், சில உற்சாகமாக இருக்கும். ஆனால் நீங்கள் அடுத்த பக்கத்தை திருப்பி பார்க்கவில்லை என்றால், அந்த அத்தியாயத்தில் உங்களுக்காக என்ன காத்திருக்கிறது என்பது தெரியாமலே போய்விடும்", என குறிப்பிட்டு தனது பாலோயர்களுக்கு காலை வணக்கம் கூறியிருக்கிறார் வனிதா.
வனிதாவுக்கு ஏற்கனவே நடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் தான் முடிந்தன. பீட்டர் பாலை தற்போது மூன்றாவதாக தான் வனிதா திருமணம் செய்ய உள்ளார். எனவே இந்த வாழ்க்கையில் தனக்கு எந்த மாதிரியான அத்தியாயம் காத்திருக்கிறது எனும் எதிர்பார்ப்பு தன்னுள் எழுந்துள்ளதை தான் வனிதா சூசகமாக பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
முன்னதாக தனது அம்மாவிடம் இருந்து வைர மோதிரங்கள் திருமண பரிசாக கிடைத்துள்ளது என வனிதா பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய அம்மாவின் நண்பர் இரண்டு வைர மோதிரங்களை பரிசளித்துள்ளதை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment