பிறந்தநாள் வாழ்த்தினையும் மனம் நெகிழ வழங்கிடுவோம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
தேசிய புள்ளியியல் தினம்
புள்ளியியல் துறை,
புள்ளியியல் அமைப்பு,
பொருளாதாரத் திட்டமிடலில் பங்கு....
1933ல் ...இந்தியாவில் "சங்க்யா"
புள்ளியியல் பத்திரிக்கை தொடங்கிய...
இந்தியப் புள்ளியியல் நிறுவனம் தந்த...
மாதிரி ஆய்வுகளை வடிவமைத்த...
இந்திய இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட
கணித விளக்கங்களைக் கொடுத்த...
C.R.Rao எனப்படும்
பி.சி.மஹோலனாபிஸ் பிறந்த தினமே
ஐக்கிய நாட்டு சபை அங்கீகரித்து
வருடந்தோறும் ஜூன் 29 ல்
புள்ளியியல் துறை கொண்டாடும்
தேசிய புள்ளியியல் தினமாகும்!
சமூக பொருளாதாரத் திட்டமிடுதல்,
திட்டம் இயற்றுதல்,
புள்ளியியலின் முக்கியத்துவம்...பற்றிய
விழிப்புணர்வினை
மக்களிடையே ஏற்படுத்த
இத்தினம் அனுஷ்டிக்கப் படுகிறது!
கனரக தொழிற்சாலைகள் மேம்படுத்தும்
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
நேரு மகிலநோபிஸ் மாதிரி எனப்படுகிறது!
புள்ளியியல் என்பது...
தரவுகள் சேகரிப்பு
ஒழுங்கமைப்பு
பகுப்பாய்வு
விளக்கம் ....என்பது குறித்த
பாடத்துறை!
புள்ளியியலாளர் என்பவர்....
புள்ளியியலில்
உரிய பயிற்சி பெற்று,
அத்துறை சார் பணிகளில்
ஈடுபடுபவர்கள்!
1663 ல்...
புள்ளியியல் தோன்றியது!
17 ஆம் நூற்றாண்டில்
பாங்கள் & பெர்மாத்
அத்துறையை மேம்படுத்தினர்!
19 ஆம் நூற்றாண்டில்
புள்ளியியல் நோக்கின்
எல்லை விரிவடைந்தது!
புள்ளிவிவரம் என்பது
எண்களால் வரையப்பட்ட கோலம்!
வரைபவர் கைப்பக்குவம்
உபயோகப்படுத்தும் வண்ணங்கள்
சார்ந்த அழகான சேகரிப்புக் கலை!
1663..ல் ஜான்சி கிராண்ட்
Natural & political observations
Upon the bills of mortality
என்ற கட்டுரையை வடிவமைத்து
இன்றளவும் பேசப் படுகிறார்!
1794 ல்....
குறைந்த வர்த்தக முறையை
Carl Friedrich Gauss விவரித்தார்!
புள்ளியியலின்
மகத்தான வல்லுநர்களாக
American Stastical Association...
Fisher / Deming/C.R.Rao
போன்றோரை அறிவித்தது!
புள்ளியியல் துறை
கையாள்வது....
கள ஆய்வுகள்/சோதனைகள்
ஆகியவற்றின் வடிவமைப்பு
தொடர்பிலான...
தரவு சேமிப்பு திட்டமிடல்!
புள்ளியியல்
கணிதத்தின் கிளையல்ல!
தனிப்பட்ட கணித அறிவியலே!
புள்ளியியல் பயன்கள்
1. அரசு/தொழில்/வணிகம்/
இயற்கை அறிவியல்/சழூக
அறிவியல் துறைகளில் பங்களிப்பு!
2. தரவுகளை சேகரித்து,
அத்தரவுகளை ஆராய்கிறது!
3. மிகப் பெரிய தரவுகளை சுருக்கி
எளிமைப்படுத்தல்!
4. ஒப்பீடுகள் செய்வதை
சுலபப்படுத்துகிறது!
5. தரவுகளை சரியாக புரிந்து
கொள்ள உதவுகிறது!
6. சரியான முடிவுகளை எடுக்க
உதவுகிறது!
புள்ளியியல் விதிகள்
1. தரவுகள் அனைத்தும்
எண்ணிக்கையில்
இருக்க வேண்டும்!
2. தரவுகளை சரியாக திட்டமிட்டு
முறைப்படி சேகரிக்க வேண்டும்!
3. ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளே
அலசி ஆராய உதவும்!
புள்ளியியலின் கருப்பொருள்
2016....வேளாண்மையும், வேளாண்
குடிமக்களின் நல்வாழ்வும்!
2019...நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு!
2020....STG...3 (ஆரோக்கியமான வாழ்வு
உறுதி செய்து/நலனை
மேம்படுத்துதல்)
STG...5 (பாலின சமத்துவம்
தீவிரப்படுத்துதல்).
புள்ளியியல் தந்தையான
மகிலனாபிஸ் வரலாறு
1.மேற்கு வங்க மாநிலத்தில்
29.06.1893 ல் கல்கத்தாவில் பிறந்தார்!
2. இயற்பியல் அறிஞர்
ஜெகதீஸ் சந்திரபோஸ் குருவானவர்!
3. 1932 ல் கல்கத்தா பிரசிடென்சி
கல்லூரியில் பணி!
4. 1860 பதிவு சட்டம் படி
இந்திய புள்ளியியல் நிறுவனம்
தொடங்கினார்!
5. அன்றைய தின கல்லூரி முதலாண்டு
செலவை ரூ.238 என முதல்
புள்ளியிட்ட கணக்கை தந்தவர்!
6. அரசின் பல்வேறு திட்டங்களை
வடிவமைக்க/கொள்கை
முடிவுகளை எடுக்க/சிறந்த
ஆலோசனை மையமாக
புள்ளியியல் நிறுவனம் திகழ்கிறது!
7. அமெரிக்க பாடத் திட்டத்தில்
மூன்றாம் வருட BBA மாணவர்கள்
புள்ளியியல் பாடம் படித்தலை
சிறப்பு சேர்த்தவர்!
8. பல துறைகளில் பயன்படும்
27 கையேடுகள் தயாரித்தவர்!
9. ஆய்வேடுகள்...201
அமெரிக்கா சென்ற போது
அங்கு எழுதிய ஆய்வேடு...274
புத்தகங்கள்...14 எழுதியவர்!
விருதுகளும் சிறப்புகளும்
1. 1963...ல் ...பட்நாகர் விருது.
2. 1968...இந்திய பத்மபூஷன் விருது.
3.1968...பிரிட்டன் வெள்ளிப் பதக்கம்.
4.. 1969...இந்தியா...மேகநாத்
சஹா விருது.
5. 1974...LSCT...கேம்பிரிட்ஜ் பல்கலை
கௌரவ முனைவர் பட்டம்.
6. 2001...இந்தியாவின் சிறந்த
. பத்மவிபுஷண் விருது.
7. 2002...அமெரிக்காவின் தேசிய
அறிவியல் பதக்கம்.
ஐ.நா.சபையின்
புள்ளியியல் துறை குழுவின்
தலைவரான இவர்....
18 நாடுகளின்
31 கௌரவ டாக்டர் பெற்றவர்!
புள்ளியியல் மேதை மட்டுமல்ல
பொருளாதாரம்
மரபியல்
மானுடவியல்
நிலவியல்
மருந்தியல்
உயிர் புள்ளியியல் துறைகளில்
கரை கண்ட பன்முக வித்தகர்!
மனைவி பேராசிரியர்
மகன்கள் இருவரும்
அமெரிக்க விஞ்ஞானிகளாகவும்
பெற்ற இவர் பெயரில்
இந்தியா/அமெரிக்காவில்
ஆராய்ச்சி பரிசுகள்
வழங்கப்படுகிறது!
பல கல்வி நிறுவனங்கள்
இவர் பெயரை வைத்து
கௌரவப்படுத்துமளவு சிறப்பானவர்!
புள்ளியியல் துறையின் பிரச்சினை
1.புள்ளியியல் அடிப்படை கருத்துகள்
அறியாதவர்களால்...
புள்ளியியல் அறிக்கைகள்
தவறாகப் புரிந்து/தவறான
முடிவுகள் எடுக்கப்படும்!
2. இறுதி அறிக்கைகள்
சராசரியான முடிவுகளைக்
காட்டுவதால்/ ஒரு தனிப்பட்ட
தரவுகள் ஒப்பிட்டுப் பார்ப்பது
சரியானதாக அமையாது!
தரவு சேமிப்பு மென்பொருள்
1. Minitab
2. SPSS & E...views
3. MS Excel
பிளாரான்ஸ் நைட்டிங்கேளும்
புள்ளியியலும்
1. கை விளக்கேந்திய காரிகை
எனப்படும் பிளாரன்ஸ்...
புள்ளியியல் பகுப்பாய்வின்
முன்னோடி!
2. கணிதம் கற்பதில் ஆர்வமானவர்!
3. கணித மேதை யூக்ளிட் எழுதிய
The Elements என்ற Geometry
புத்தகம் விரும்பி படித்தவர்!
4. சிறு வயதில் தோட்டத்தில்
விளைந்த காய்கறிகள்/பழங்கள்
குறித்த தரவுகளின் அட்டவணை
புள்ளியியல் மீதான ஆர்வம் காட்டும்!
5. நர்சானப் பணியில்...
மருத்துவ தகவல்களை
விவரமாக முன் வைத்தல்/
முடிவுகளை ஆவணப்படுத்தல்
கண்ட வில்லியம் ஃபார்...
புள்ளியியல் சொசைட்டியின்
கூட்டாளராக நியமித்தார்!
6. செவிலியரின் சிகிச்சை முறை
பற்றி புள்ளி விவரத்தோடு
இரு புத்தகங்கள் எழுதினார்!
7. புள்ளியியல் தரவுகளை
வரைபடம்(Graph) மூலம் புரிய
வைப்பதை கையாண்டார்.
8. இராணுவ முகாம்
இராணுவ வீரர்கள் இறப்பினை
காரணங்களுடன்/வட்டமிட்டு/
அட்டவணைப்படுத்தினார்!
9. காரணங்களை வட்டத்தினூடே
புள்ளி விவரமாக்கினார்!
நீலம்...சுகாரமின்மை இறப்பு
சிவப்பு...காயங்களினால் இறப்பு
பச்சை....வேறு காரணங்களால் இறப்பு
இந்த வரைபடம்
தரவுகளை சித்தரித்ததால்...
Nightigale Rose என பெயரானது!
புள்ளியியலும் பாடல்களும்
1. நிகழ்தகவு
சீரற்ற செயல்முறைகள்
உருமாற்றங்கள்
பகுதி வேறுபாடுகள்
சமன்பாடுகள் ....என மனிதனின்
வாழ்க்கையோடு அனுதினமும்
விளையாடி
குறை/ நிறை காட்டும்
புள்ளியியல் கணக்காக!
2. ஓடிய நீளந்தன்னை
ஓரெட்டுக் கூறதாக்கி
கூறிலே ஒன்று தள்ளி
குன்றத்தில் பாதி சேர்த்தால்
வருவது கர்ணந்தானே!
3. புரியாத சின்னங்கள்
கணித சமன்பாடுகள்!
வாங்க இயலாத உரைகள்
முழுமை பெறாத வரைபடங்கள்
நிரம்பி வழியும் மனித வாழ்வில்
ஒன்றாம் தேதி வரவு தொடங்கி
முப்பதாம் தேதி செலவு முடிய!
4. திருவிளையாடல்
ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
எத்திக்கும் திசைகளில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன்..நெஞ்சின் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப்பெற்றானவன்
5. ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி
கோடி எண்மடங்கு கொண்டது சங்கம்
சங்கம் எண்மடங்கு கொண்டது வித்தம்
வித்தம் எண்மடங்கு கொண்டது குமுதம்
குமுதம் எண்மடங்கு கொண்டது பதுமம்
பதுமம் எண்மடங்கு கொண்டது நாடு
நாடு எண்மடங்கு கொண்டது சமுத்திரம்
சமுத்திரம் எண்மடங்கு கொண்டது
வெள்ளம்!
6.திருக்குறளில்...
எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப
இவ்விரண்டும்
கண்ணெண்ப வாழும் உயிர்க்கு.
7. பலாவின் சுவையறிய
வேண்டிதிரேல் ஆங்கு காம்பருக
சிறு முள்ளுக்கெண்ணி வருவதை
ஆறிறி பெருக்கியே
ஐந்தனுக்கீந்திடவே
வேறென்ன வேண்டாம் சுளை!
8. திருமுருகாற்றுப்படையின்
எண்ணலங்காரம்...அத்தனையும்
புள்ளியியல் எனும்
கணக்கு சார்ந்ததே!
வாழ்க்கைத் தரவுகளை
முறைப்படி சிந்தித்து
வாழ்க்கைப் பயணத்தை
புள்ளிக் கோலமாக வாழ்வோம்!
தேசிய புள்ளியியல் தினமதில்
புள்ளியியல் மேதை C.R.Raoக்கு
பிறந்தநாள் வாழ்த்தினையும்
மனம் நெகிழ வழங்கிடுவோம்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.
Comments
Post a Comment