ஒரு உலகம் ஒரு நம்பிக்கை - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
தேசிய எச்ஐவி பரிசோதனை தினம்
தொடர் காய்ச்சல்
இடைவிடாத இருமல்
தலைவலி
தசை வலி
வாய்/பிறப்புறுப்பில் புண்
மூட்டு வலி
களைப்புடன் சோர்வு
உடல் எடை இழப்பு
வயிற்றுப் போக்கு
மூச்சடைப்பு
நாக்கு/வாயில் நீடித்த வெண்புள்ளி
தோல் அரிப்பு/தோல் சொரசொரப்பு
மங்கலான பார்வை
நகம் வண்ணமிழத்தல்
நிமோனியா
பூஞ்சை நோய்
காச நோய்
மூளை சவ்வு வீக்கம்....போன்ற
இத்தனை அறிகுறிகளின்
குத்தகைதார நோயே
எச்ஐவி எனும் பால்வினை நோய்!
இந்நோய்க்கான
பரிசோதனை தினமாக....
அமெரிக்கா முதலில் கடைப்பிடிக்க
அனைத்து நாடுகளும்
வருடந்தோறும் ஜூன் 27 ந் திகதி
தேசிய HIV பரிசோதனை தினமாக
அனுஷ்டிக்க தொடங்கியது!
நோக்கம்
HIV மற்றும் அதன் விளைவுகள்
குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்துதல்!
போதை மருந்தில்
பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய மாறுதலில்
தானமாக பெறும் இரத்தத்தில்
சுத்திகரிப்பில்லா ஊசியில்...நுழையும்
எயிட்ஸ் எனும் பால்வினை நோய் தரும்
HIV உலகின் பொது சுகாதாரப் பிரச்சினை!
வரலாறு
05.06.1981 ல் அமெரிக்கா
நோய் கட்டுப்பாடு&தடுப்பு மையம்
ஆண் ஓரின சேர்க்கை
ஐந்து நபருக்கு
அரிய வகை நிமோனியா கண்டு
ஓரின சேர்க்கை புற்றுநோயென
முதல் ஆவணம் வெளியிட்டது!
1983..ல் ந்நோய்க்கான வைரஸ் ...
Lymphadenopathy தொடர்புடைய
வைரஸ் என கண்டறிந்தவர்....
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி
லூக் மொண்டிக்கயர்!
1984...ல் அமெரிக்காவின்
தேசிய புற்றுநோய் நிறுவனம்
அந்நோய்க்கு காரணம்
HIV வைரஸ்...வகை III என
சான்றுகளுடன் நிரூபித்தது!
1986...ல் ...பெறப்பட்ட நோய்த்
தடுப்பாற்றல் குறைபாடு..AIDS
(Acquired Immuno Deficiency syndrome)
மேற்கு ஐரோப்பா நாடுகளில்
கண்டறியப்பட்டு
HIV..I மற்றும் HIV..II
எனும் பெயர் ஏற்கப்பட்டது!
HIV விழிப்புணர்வு கருத்துருக்கள்
1.. பாதுகாப்பற்ற உடலுறவு
2..சுத்திகரிக்கப்படாத ஊசி
3..பரிசோதிக்கப்படாதரிசோதிக்கப்படாத இரத்தம்
4. கருவுற்ற HIV தொற்று தாய்
வழி பிறக்கும் சிசுவிற்கு ....
என 4 வழிகளில் பரவும்
எயிட்ஸ் நோய் தடுப்பிற்கான
விழிப்பூட்டும் கருவாக....
1988...தொடர்பாடல்
1989...AIDS ம் இளைஞர்களும்
1990...AIDS ம் பெண்களும்
1991...சவாலை பகிர்ந்து கொள்
1992...சமூகத்தின் ஈடுபாடு
1993...செயலாற்றுதல்
1994...AIDS ம் குடும்பமும்
1995...உரிமைகளை/பொறுப்புகளை
பகிர்.
1996...ஒரு உலகம் ஒரு நம்பிக்கை
1997...AIDS உடன் வாழும் குழந்தைகள்
1998...மாற்றத்துக்கான சக்தி
1999...செவி கொடு/கற்றுக் கொள்/வாழ்
2000...AIDS...மாற்றம் செய்யும் மனிதம்
2001...நான் பாதுகாப்புடன் ...நீ?
2002.&2003...தழும்புகளும்
சாதக..பாதகமும்.
2004....பெண்கள்/HIV/AIDS
2005...2010....எயிட்ஸ் நிறுத்து
சத்தியத்தை காப்பாற்று
2015...செயல்படும் நேரம்...ஆரம்மம்.
2018&2019....சமுதாயம்...வித்தியாசம்
2020....அறிதல்.
கருத்துரு வினால்
தொடர் விழிப்புணர்வு
சரியான சிகிச்சை முறைகள்
நோயாளிகளின் வாழ்நாள்
அதிகரிக்க/ஆயுள் கூடும்!
HIV பரிசோதனை செய்ய
தன்னிலை அறிந்து கொள்வதில்
2020 ன் அறிதல்...கருத்துரு...
1. கவனம் செலுத்துகிறது!
2. புதிய வழிகளை அங்கீகரிக்கிறது!
3. HIV நோய் தொற்றை முடிவுக்கு
கொண்டு வரும் வேகம் தருகிறது!
அறிதல் என்பது...
1.சிகிச்சை விபரங்களைப் பற்றி அறிவது.
2. ரெடிசெட் திட்டம் மூலம் கிடைக்கும்
ப்ரெப் உள்ளிட்ட தடுப்பு விவரங்களை
புரிந்து கொள்வது.
எயிட்ஸ்
HIV வைரஸ் கிருமி உடலுக்குள்
வந்ததும்/தனது இனப்பெருக்கம்
செய்து/உடல் முழுதும் ஆக்கிரமித்து/
இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள்/
நோயெதிர்ப்பு சக்தியை சிறிது சிறிதாக
அழித்து விடும் நிலையே எயிட்ஸ்!
எயிட்ஸ் வராத நிலைகள்
1.கட்டி அணைத்தல்/முத்தமிடல்/
கை குலுக்குதலால்
2. ஒரே காற்றை சுவாசிக்க
3. சாப்பிடும் தட்டுகள் பகிர
4. அருவிகளில் ஒன்றாக குளிக்க
5. ஜிம் உடன்பயிற்சி கருவிகளை
பயன்படுத்த
6. கழிவறை இருக்கை/கதவின்
குமிழ்/கைப்பிடி தொட
7.தனிப்பட்ட பொருட்களை பகிர்தல்
போன்ற காரணங்கள் எயிட்ஸ்
பரவும் வழிகளல்ல!
தவறான அபிப்பிராயங்களும் பதில்களும்
1.சஹாரா பாலைவனத்தில்/தாய்லாந்து
பகுதிகளில் பரவிய செய்தி...
கன்னிப்பெண்களோடு உடலுறவு
கொள்ள எயிட்ஸ் வருவது தவிர்க்கலாம்.
பதில்....இது தவறான கருத்து!
2.இரத்தம் மூலம் எயிட்ஸ் பரவுகிறது
எனில் இரத்தம் உறிஞ்சும் பூச்சிகள்
மூலம் பரவுகிறது.
பதில்....பூச்சிகளிடம் செல்லும்
HIV வைரஸ் சில நொடிகளில்
இறந்து விடும்!
3. கருத்தடை சாதனங்கள் ...பாலுறவு
மூலம் எயிட்ஸ் பரவுதலை தடுக்கும்.
பதில்....நோய் தொற்றை மட்டுப்
படுத்தும்...கருத்தடை உறை
சேதப்பட பாதிப்பு நிச்சயம்!
எயிட்ஸ்....
முறையில்லா உறவால்
தடுமாறிய மனதால்
தடம் மாறிய பாதையால்
உன்னத வாழ்க்கையை
உருத்தெரியாமல் அழித்திடும்!
புள்ளி விவரம்
1.உலக சுகாதார நிறுவனம்
எயிட்ஸ் நோயால் 35 மில்லியன்
உயிரிழப்பு என அறிவித்தது!
ஒரு மணி நேரத்திற்கு
600 பேர் பாதிப்பு.
ஒரு நிமிடத்துக்கு ஒரு
குழந்தை இறப்பு என நிரூபித்தது.
2 .1980 ல் பரவத் தொடங்கியது.
3. 1986..ல் சென்னை மருத்துவமனை
13 விலைமாதர் பெண்களுக்கு
எயிட்ஸ் இருந்ததை கண்டறிந்தனர்.
4. 2006 ல் மரணம் உலகளவில்
குழந்தைகள்....333000
39.5. மில்லியன் பாதிப்பு.
புதிதாக தொற்று...4.3 மில்லியன்.
5. 2007..ல் 68% இறப்பு.
இதில் குழந்தைகளும், பெண்களும்
61% ஆகும்.
6. 2010 ல் 8மில்லியன் மக்கள்
புதிதாக பாதிப்பு.
7. 2016..ல் பிரிட்டனில் அதிகமாக
பரவலானது.
8. 2017..ல் 21.7 மில்லியன் மக்கள்
இந்நோய் பாதிப்புக்கு சிகிச்சை
பெற்றதாக WHO அறிவிப்பு.
9. 2018. ல் 749 லட்சம் மக்கள்
இந்நோயால் பாதிப்பு.
380 லட்சம் பேர் இறப்பு.
புதிதாக 17 லட்சம் பேர் பாதிப்பு.
10. 2019 ல் உலக அளவில்
ஒரு மில்லியன் உயிரிழப்பு.
37 மில்லியன் தொற்றோடு
வாழ்கிறார்கள்.
2020 ல் தொடர் விழிப்புணர்வால்
80% புதிதாக நோய் தொற்றாமல்
உலக சுகாதார நிறுவனம்
ஆவண நடவடிக்கை எடுத்துள்ளது!
சோதனைகள்
1. எலைசா சோதனை....
HIV இனம் காணல்.
2. வெஸ்டர்ன் பிளாட் சோதனை...
HIV உறுதி செய்தல்.
PCR முறை சோதனை
ARS சோதனையும் தேவைப்பட
மேற்கொள்ளப்படுகிறது.
மூலோபாயத் திட்டம்
எயிட்ஸ் நோய் தடுக்க/
சிகிச்சை அளிக்க/
குணப்படுத்த...இத்திட்டம்
முன்னுரிமை அளிக்கிறது!
AIDS கட்டுப்பாடு சங்கம்
1.1992 ல் இந்தியாவில் ஆரம்பித்தது.
2. 1994 ல் தமிழ்நாடு எயிட்ஸ்
காட்டுப்பாடு சங்கம் என பதிவானது.
3. 1996 ல் உயிர் கொல்லி நோய்க்கான
விழிப்புணர்வு தர பாடுபட்டது.
எயிட்ஸ் பாதித்த நாடுகள்
முதலிடம்....சஹாரா
இரண்டாமிடம்....நைஜீரியா
மூன்றாமிடம்....இந்தியா
Aids பரவுதல்
1.இரத்தம்/விந்து/பெண்ணுறுப்பில்
உருவாகும் திரவம்/தாய்ப்பால்....
போன்ற திரவங்கள் மூலம் பரவுதல்.
2. பாதுகாப்பற்ற உடலுறவால்
25 ..30 வயதுள்ளவர்கள்
80% பாதிப்படைதல்.
3.பொது இடத்தில் சவரம் செய்யும்
ஆண்கள்/புது சவர கருவி
பயன்பாடு இல்லையெனில் பாதிப்பு.
4. கொனேரியா/சிபிலிஸ்/ஹெர்பிஸ்
போன்ற பாதிப்புள்ளவர்கள்
இந்நோயால் உடனடி பாதிப்பு.
5. எயிட்ஸ் பாதிக்கப்பட்ட தாயால்...
கர்ப்ப காலம்/பேறு காலம்/
தாய்ப்பால் புகட்டும் காலங்களில்
HIV தொற்று குழந்தைக்கு பரவுதல்.
6. தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு
முதல் மூன்று மாதம் மூட்டு வலி.
10 வருடம் வெளியே தெரியாமல்
இருக்கவும் வாய்ப்புண்டு.
யூனிசெப் கையேடு
வெளியிட்ட அறிக்கை....
" எப்படிப்பட்டவராக
எங்கே வாழ்பவராக
இருந்தாலும்...
HIV நோய் பற்றிய
விழிப்புணர்வுடன்
செயல்படுங்கள்"!
HIV வைரஸ்...
கண்ணுக்குத் தெரியாத
காம கிருமி!
மெல்லிய இடை தேடி
இன்பம் நாடி
முறையில்லா உறவுக்காக
மோகம் வதைக்க செல்ல
உல்லாச நோயது
உயிரினை வாங்கிடுமே!
விற்பனை பெண்களோடு
வேண்டாம் விளையாட்டு!
வாழ்க்கைத் துணையோடு
தொடரும் உறவினை நினைத்திடு!
மையலினை மனைவியிடம் வைக்க
மைல் தூரம் சென்றிடும்
எந்நோயும் உன்னை விட்டு!
மனதை அலைபாய விடும்
இளைஞர்களுக்கு
அறிவூட்டி...பாதிப்பு விளக்கி
நெறியூட்டு!
மருத்துவ சிகிச்சைகள்
1.முற்றுப்புள்ளி வைக்க மருந்து
ஏதும் கண்டறியவில்லை.
2. பரவும் வேகம் குறைத்திட/
பரவுதலை கட்டுப்படுத்திட
மருத்துவர் ஆலோசனையுடன்
பயனாகும் மருந்துகள்.....
A). Nucleoside analogues
B). Non Nucleoside Reverse
Transcriptase Inhibitors.
C). Protease Inhibitors.
தமிழக அரசின் இலவச மருத்துவசிகிச்சை
1.இரண்டு முதல் மூன்று ஆண்டுகள்
தொடர் சிகிச்சை.
2. இலவச இரத்த பரிசோதனை.
3. தேவைப்படின் உள்நோயாளியாக
அனுமதி.
ரூ. 2000 - 3000 க்கு மருந்து இலவசம்.
கிடைக்கும் இடங்கள்
1.தாம்பரம் TB மருத்துவமனை.
2. தண்டையார்பேட்டை அரசு
மருத்துவமனை.
3. நாமக்கல் அரசு மருத்துவமனை.
ART சிகிச்சை(Anti Retro Virus Therapy)
1..இச் சிகிச்சை மேற்கொள்ள
நோயினை கட்டுக்குள்
வைக்க முடியும்.
2. உலகில் 63% இச்சிகிச்சையை
மேற்கொள்கிறார்கள்.
3. இரத்தத்தில் கலந்துள்ள
HIV வைரஸ் எண்ணிக்கையை
குறைக்கும்.
4. ஒவ்வாமை சிலருக்கு ஏற்படுத்தும்.
முக்கூட்டு சிகிச்சை
அரசு மருத்துவமனையில்
மூன்று வகையான எதிர்ப்பு
மருந்துகளை HIV தொற்று
நோயாளிக்கு தரும் நோய்
கட்டுப்படுத்தும் சிகிச்சை!
HIV விழிப்புணர்வு
1.HIV தொற்று பற்றி சரியான
புரிதலை மக்களிடம் சேர்த்தல்.
2. உடலுறவில் காப்புறை அவசியம்
புரிய வைத்தல்.
3. ஒருவருக்கு பயன்படுத்திய
ஊசி/சிரின்ஜ் பயன்பாடு தவிர்த்தல்.
4. ஆணுறுப்பு நுனித்தோல்
அறுவை சிகிச்சை மூலம்
அகற்றுதல்.
5. அதிகாரப்பூர்வ மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட இரத்த
வங்கிகள் மூலமே இரத்தம்
பெறுதல்.
6.மருத்துவரிடம் உரிய ஆலோசனை
பெறுதல்.
7. பாலியல் தொழிலாளி/கன ரக
வாகன ஓட்டுநர்/கைதிகள்/
நரம்பு வழி போதை காண்பவர்கள்
ஆறு மாதத்திற்கு ஒரு முறை
பரிசோதனை மேற்கொள்ளுதல்
அவசியமான செயலாகும்.
8. ABC...A...Abstain...தவிர்த்தல்.
B...be faithful...உண்மையாயிரு.
C. .Condomise...காப்புறை பயன்.
9.பள்ளிக்கல்வித்துறை
1.HIV பற்றி பாடங்களில் செய்தி.
2. விழிப்புணர்வு போட்டி வைத்தல்.
3. நோயாளியிடம் வேறுபாடு
காட்டாமல் பழக அறிவுறுத்தல்.
10. AIDS. சிகிச்சை பற்றிய
அரசின் உதவி எண்....1097.
தனி மனித ஒழுக்கம் பேணுவோம்!
AIDS தொற்று வந்தால்....
மனம் தளராமல்
தன்னம்பிக்கையோடு
அமைதியாக வாழ பழகி
மிகுந்த ஓய்வெடுத்து
சத்துணவு உண்டு
மருந்துகளை உட்கொண்டு..
ஆயுளை நீட்டிக்க
HIV விழிப்புணர்வாக
தேசிய HIV பரிசோதனை தினமதில்
உரக்க சொல்லிடுவோம்!
AIDS இல்லா உலகம் படைக்க
ஒவ்வொருவரும் கரம் கோர்ப்போம்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513.
9940739728.
Comments
Post a Comment