சுவாரசியமான விண்வெளியின் சிறுகோள் விளையாட்டு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

சர்வதேச சிறுகோள் தினம்

30.06.1908 ல்
ரஷ்யாவின் தூரத்து பிரதேசம்
ஆளில்லா அத்துவானக் காடு
ஒரு நெருப்பு பந்து
வானில் கடக்கிறது!
சில நொடிகளில்
வானில் பெரிய வெடிப்பு!
80 மில்லியன் மரங்களை
தரைமட்டமாக்கிய நிகழ்வு!
வெப்பத்தின் உக்கிரகம்
பூமியில் மனித இழப்பேதுமின்றி!
பூமியின் மேற்பரப்பின்
10 கி.மீ. உயரத்தில் வெடித்த
சிறுகோள் வெடிப்பு 
"Tunguska " நிகழ்வு பெயரானது!
ஐக்கிய நாடுகள் சபை
இத்தினத்தை நினைவாக்க,
சர்வதேச சிறுகோள் தினம்
என அதிகாரபூர்வ அறிவிப்பாக்கியது!


நோக்கம்

1. சிறுகோள்கள் பற்றிய
     விழிப்புணர்வு!
2. பூமி/அதன் குடும்பங்கள்/
     சமூகங்கள்/எதிர்கால
     சந்ததியினரை பேரழிவிலிருந்து
     பாதுகாத்தல்!


03.12.2014 ல்,
200 க்கும் மேற்பட்டோர் 
கையெழுத்திட
அதிகாரப்பூர்வமாக
இத்தினம் கொண்டாடப்பட்டது!


பிப்ரவரி 2014 ல்
சிறுகோள் தாக்கத்தின் கதையை
கற்பனையாக 
திரைக்கதையாக வடிவமைத்து
அக்டோபர் 2014 ல்
லண்டன்/கலிபோர்னியா/
 நியூயார்க்கில் ஒளிபரப்பப்பட்டது!


2017 ல் சிறுகோள் நாள் என
சிறிய கிரகம் 248750 கண்டுபிடித்த
M. டாசன் என்பவர் முன்னிலைப்படுத்த
சர்வதேச வானியல் ஒன்றியத்தால்
அனைவரும் சம்மதிக்க பெயரிடப்பட்டது!


100 எக்ஸ் பிரகடனம்

1. பூமியை விண்கற்களிலிருந்து
     காப்பாற்றும் யோசனையை
    ஆதரிப்பவருக்கு வேண்டுகோள்
    முன் வைத்தல்!
2.  22000 க்கும் மேற்பட்டோர்
      இப்பிரகடனத்தில் கையெழுத்திடல்!
3.  அதிக சிறுகோள்கள் பூமியை
      பாதிக்கும் ஆற்றல் கொண்டது!


பிரையன்மே

சிறுகோள் எப்போது தாக்கும்/
எப்படி அதிலிருந்து பாதுகாப்பு
பெறுவது என்ற அறிவை
அதிகரிக்க ஆதரவு பெறுவதே
இத்தினத்தின் சிறப்பாகும்!


குறிக்கோள்

1. அரசு/தனியார்/சேவை நிறுவனம்
    மூலம் மனிதர்களை அச்சுறுத்தும்
    சிறுகோள்களைக் கண்டறிந்து/
     கண்காணிக்கும் தொழில்நுட்பம்
     பயன்படுத்துதல்!
2.  சிறுகோள்களை அடுத்த 
    10 ஆண்டுக்குள் கண்டறிந்து/
     பூமியின் மீது விழாமல் முடக்குதல்!
3.  இத்தினத்தை உலகளவில்
      ஏற்பது/ இதன் ஆபத்து குறித்து
      விழிப்புணர்வு தருவது/
      பாதிப்புகளை தடுக்கும் முயற்சிகள்
      ஐக்கிய நாட்டு சபை அங்கீகாரத்துடன்
      முன்னிறுத்தல்!


சிறுகோள்  என்பது
சூரிய குடும்பத்தின்
உட்புறப் பகுதியில்
சூரியனை சுற்றி வரும் கோள்!


சிறுகோள்
செவ்வாய்...வியாழனுக்கிடையில்
நீள்வட்ட வட்டணையிலுள்ளது!


சிறுகோள்களுக்கு
சிறுகோள் நிலாக்களும்
அமைவதுண்டு!


சிறுகோள்
பாறை அளவு (அ)
அதினினும் சிறிய அளவுடையது!


சிறுகோளின் பெயர்கள்

1. விண்மீன் போல
    புள்ளி புள்ளியாகத் தெரிய
    Asteroid!
2.  கோள்களை ஒத்து
      காணப்பட
      Planetoid(வான்கோள்).
3.  சில சமயம் புவியில் புகும்
     காற்றுடன் உராய்ந்து
     சூடாகி எரிவதால்
     Meteors (விண்கொள்ளி).
4.  தரையில் விழுவதால்
      Meteorite (விண் தாது).
5.   வளிமண்டலத்தில் 
       நுழையாமல்
       விண்வெளியிலேயே
      இருந்தால்
      Meteroid (விண்கல்).


சீரேசு

1801 ல் வானியலார்
 கியூசெப்பே பியாசி
கண்டறிந்து ...
ரோமானிய வேளாண் 
கடவுள் பெயரான
சிரேசு என்று
சிறுகோள்களில் சற்று
பெரிதான கோள் பெயர் கண்டது!


நாசா அறிவிப்பு

1. சிறுகோள்கள் பற்றி ஆராய
    நாசா விண்கலம்
    2016 ல் அனுப்பியது!
2. ராட்சத சிறுகோள்
   அக்டோபர் மாதம்
   பூமியைத் தாக்குமென
   சிறுகோள் ஆய்வாளர்கள்
   அறிவித்துள்ளனர்!
3. 2019 முதல் 2116 வரை
     165 சிறுகோள்கள் 
    பூமியை சந்திக்கும்!
4. Asteroid FT3 
    பாறையால் ஆனது!
5. Neo எனும் சிறுகோள்
    பூமிக்கு அருகிலுள்ளது!
6. OR2 எனும் சிறுகோள்
     பூமியை 2020 ல் கடக்கவுள்ளது!
7.  பென்னு....
      இச்சிறுகோள் பூமி
      மீது மோதும் வாய்ப்பு குறைவு!
8. சிறுகோள் 2700 எண்ணிக்கையில்
     பூமிமீது மோதும் வாய்ப்பு
     ஒரு கோளுக்கு மட்டுமே உண்டு!


Covid ..19 காரணமாக
இன்றைய சிறுகோள் தினம்
மெய் நிகர் முறையில் 
நடத்தப் படுகிறது!


வானசாஸ்திரம் கற்றவர்கள்
சந்திரகுப்த மௌரியர் காலம்,
இன்றைய ஆர்யபட்டர்
வரை உள்னர்!


பாரதி சொன்னது....
விண்டுரைக்க அறிய/அரிதாய்
விரிந்த வானவெளி என நின்றனை!
அண்டகோடிகள் வானில் அமைத்தனை!
அதனில் எண்ணற்ற வேகம் சமைத்தனை!


நம்முள்ளே
ஈர்க்கவும்/எரிக்கவும்
 விசைகளாக!
நெருங்கி/விலகி
மகிழ்வித்து/பயயமுறுத்தி
சுவாரசியமான
விண்வெளியின்
சிறுகோள் விளையாட்டு!


சிறுகோள்கள் பற்றிய
விழிப்புணர்வினை
இன்றைய ஜுன் 30 திகதியில்
சர்வதேச சிறுகோள் தினமதில்
மனதில் நினைப்போம்!



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.