அடுப்படியில் மகளின் உதவி பெறுகையில்...நான் மகிழ்ச்சி அடைந்தேன் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

மகிழ்ச்சி அடைந்தேன்

ஆதவன் வானிலெழும் உதயத்தில்,
பிரார்த்தனையின் போது கேட்கும் 
                                      மணியோசையில்,
மனச்சாட்சியுள்ள மனிதம் புரிதலில்,
தோழியிடம் தாய்மை உணர்தலில்,
செடியின் இளங்கீற்று விரிதலில்,
மகனின் கைப்பேசி அன்பு விசாரிப்பில்,
பக்கத்து வீட்டம்மா நலம் விழவுதலில்,
கோவிட்..19 தன்னார்வலர் பணியில்,
அடுப்படியில் மகளின் உதவி 
                                          பெறுகையில்,
கால்களை வருடும் கடலலை 
                                           தழுவலில்...
நான் மகிழ்ச்சி அடைந்தேன்!


தீபாவளி பலகாரம் தரும் சகோதரன்
                                                  பாசத்தில்,
ஷேமலாபம் விசாரிக்கும் சகோதரியின்
                                                   நேசத்தில்,
மன உத்வேகமூட்டும் பழைய 
                                          பாடல்களில்,
மாணவர்களின் சரியான "ழ"கர 
                                              உச்சரிப்பில்,
முதல் கவிதைப் புத்தகம் ஸ்பரிசித்த
                                                  நேரத்தில்,
எரிந்து விழாமல் பேசும் கணவனின்
                                                செயலில்,
கற்பனைக்கு வித்தாகும் நிலவின் 
                                                     அழகில்,
சன்னல் திறக்க தழுவும் காற்றின் 
                                        ஸ்பரிசித்தலில்,
வெற்றி காண உதவிடும் தோழமை
                                               பாசத்தில்,
என் அத்தனை சிறப்பிற்குடனான
                      இறைவனின் ஆசிகளில்...
நான் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன்!



மகிழ்ந்து மலரும்
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
முதுநிலை ஆசிரியை,
அ. ம. மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை..632513.
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.