Posts

Showing posts from June, 2020

அடுப்படியில் மகளின் உதவி பெறுகையில்...நான் மகிழ்ச்சி அடைந்தேன் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
மகிழ்ச்சி அடைந்தேன் ஆதவன் வானிலெழும் உதயத்தில், பிரார்த்தனையின் போது கேட்கும்                                        மணியோசையில், மனச்சாட்சியுள்ள மனிதம் புரிதலில், தோழியிடம் தாய்மை உணர்தலில், செடியின் இளங்கீற்று விரிதலில், மகனின் கைப்பேசி அன்பு விசாரிப்பில், பக்கத்து வீட்டம்மா நலம் விழவுதலில், கோவிட்..19 தன்னார்வலர் பணியில், அடுப்படியில் மகளின் உதவி                                            பெறுகையில், கால்களை வருடும் கடலலை                                             தழுவலில்... நான் மகிழ்ச்சி அடைந்தேன்! தீபாவளி பலகாரம் தரும் சகோதரன்                                       ...

சுவாரசியமான விண்வெளியின் சிறுகோள் விளையாட்டு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
சர்வதேச சிறுகோள் தினம் 30.06.1908 ல் ரஷ்யாவின் தூரத்து பிரதேசம் ஆளில்லா அத்துவானக் காடு ஒரு நெருப்பு பந்து வானில் கடக்கிறது! சில நொடிகளில் வானில் பெரிய வெடிப்பு! 80 மில்லியன் மரங்களை தரைமட்டமாக்கிய நிகழ்வு! வெப்பத்தின் உக்கிரகம் பூமியில் மனித இழப்பேதுமின்றி! பூமியின் மேற்பரப்பின் 10 கி.மீ. உயரத்தில் வெடித்த சிறுகோள் வெடிப்பு  "Tunguska " நிகழ்வு பெயரானது! ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை நினைவாக்க, சர்வதேச சிறுகோள் தினம் என அதிகாரபூர்வ அறிவிப்பாக்கியது! நோக்கம் 1. சிறுகோள்கள் பற்றிய      விழிப்புணர்வு! 2. பூமி/அதன் குடும்பங்கள்/      சமூகங்கள்/எதிர்கால      சந்ததியினரை பேரழிவிலிருந்து      பாதுகாத்தல்! 03.12.2014 ல், 200 க்கும் மேற்பட்டோர்  கையெழுத்திட அதிகாரப்பூர்வமாக இத்தினம் கொண்டாடப்பட்டது! பிப்ரவரி 2014 ல் சிறுகோள் தாக்கத்தின் கதையை கற்பனையாக  திரைக்கதையாக வடிவமைத்து அக்டோபர் 2014 ல் லண்டன்/கலிபோர்னியா/  நியூயார்க்கில் ஒளிபரப்பப்பட்டது! 2017 ல் சிறுகோள் நாள் என சிறிய கிரகம் 248750 கண்டுபிடித்த M. டாசன் என்...

சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது...

Image
சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .மருந்து, மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது .தமிழக அரசுத் தரப்பில் மதுரைக் கிளையில் தகவல்.

வேலூரில் நாளை முதல் புதிய விதிமுறைகள்...

Image
நாளை முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது 

தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

Image
  * சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபனையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை  * மாஜிஸ்திரேட்டை அவமரியாதையாக பேசியதாக எழுந்த புகார்,  சாத்தான்குளத்தில் பணியாற்றிய காவலர் மஹாராஜன் சஸ்பெண்ட் * தென்மண்டல போலீஸ் ஐ.ஜி நடவடிக்கை

இராணிப்பேட்டை: தாங்கள் செய்து வந்த தவறான தொழில்களில் இருந்து திருந்தி மறு வாழ்வு...

Image
  ""நூலகம் மற்றும் அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் திறந்து வைத்தார்! இராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னம்பலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் சில குடும்பங்கள் பனைமர கள் இறக்கிவிற்கும் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கடந்த 15.03.2020 மற்றும் 24.03.2020 ஆகிய தேதிகளில் சுமார் 150 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் மிகப்பெரிய கள் சிறப்பு தணிக்கை வேட்டை நடத்தப்பட்டு சுமார் 4000 லிட்டர்கள் அழிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக பொன்னம்பலம், கன்னிகாபுரம் ஆகிய கிராமத்தை சேர்ந்த சுமார் 50 நபர்கள் தாங்கள் செய்து வந்த தவறான தொழில்களில் இருந்து திருந்தி மறு வாழ்வு வாழ உறுதிகொண்டதின் பேரில் வருங்காலம் இளைஞர்களின் கையில் என்ற நோக்கத்திலும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் இன்று  இக்கிராமங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நன்றாக படித்து அரசு மற்றும் தனியார் வே...

வேலூர் சி.எம்.சி க்கு ஆந்திர முதல் அமைச்சர் பாராட்டு...

Image
டாக்டர் பி. வி. ரமேஷ் - தமிழக அரசு மற்றும் வேலூர் சி.எம்.சிக்கு பாராட்டு  தமிழக அரசும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும் (சி.எம்.சி) கோவிட் -19 நோயாளிகளுக்கு அளித்துவரும்  சிகிச்சை முறையை குறித்து, ஆந்திர முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஷ் அவர்கள்  பாராட்டுகளைப் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை டி.என்.எம் THE NEWS MINUTE செய்தி நிறுவனத்தோடு  நடத்தப்பட்ட  ஆன்லைன் கூட்டத்தில், மருத்துவரான டாக்டர் ரமேஷ், கோவிட் -19 நோயாளிகளிடையே மரணம் ஏற்பட இரண்டு காரணங்கள்  உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் 'சைட்டோகைன் ஸ்டார்ம்'  என்ற நிலையம்  'பரவளாக இரத்த குழாய்களில் இரத்தம்  உறைதல்' (டி.ஐ.சி). சைட்டோகைன் ஸ்டார்ம்  எனப்படுவது, ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்ற அந்நோயாளியின் நோயெதிர்ப்பு தன்மையால் அதிக காய்ச்சல், சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும் நிலை. “வைரஸ் மிகவும் வீரியமாக இருக்கும் பட்சத்தில்,  உடலின்  லிம்போசைட்டுகள் (நோயெதிர்ப்பு உயிரணுக்கள் ) நுரையீரலில் வெள்ளம் போல பாய்ந்து நிரம்ப...

சாகாத வானம் நாம்...வாழ்வில் பாடும் சங்கீத பறவைகள் நாம் -கவிஞர் ச. இலக்குமதி.

Image
நல்லது சொல்வோம்-40 சிவகங்கையின் கவிச்சிங்கம்! உன்னால் முடிந்ததை ஊருக்கு உதவு! உன்னால் முடியும் உன்னை நீ நம்பு! என்று முழக்கமிட்டவர் கவிஞர் மீரா! ஏதோ இவர் ஒரு பெண் கவிஞர் என நினைத்து விடாதீர்கள்! இவர் பெயர் மீ. ராஜேந்திரன்! மாணவனாக இருந்த ராஜேந்திரனை கவிஞர் மீரா என வையம் புகழ மாற்றிக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா! சிவகங்கை சீமையிலே 10 /10/ 1938 ல் பிறந்தவர்! 01/09/2002 ல் மறைந்தவர்! எண்ணற்ற கவிஞர்களுக்கு சரணாலயமாக திகழ்ந்தவர்! புது கவிஞர்களுடைய பட்டாளத்தின் தளபதி இவர்! அன்னம், அகரம், எனும் இரு பதிப்பகம் மற்றும் அச்சகம் மூலம் எண்ணற்ற கவிதை நூல்களை அச்சிட்டு கவிஞர்களை கை தூக்கி விட்டவர்! சிவகங்கையில் இவர் வீட்டுக்கு எதிரே மாதம் ஒருமுறை கவி இரவு நடத்தி தமிழை வளர்த்தவர்! 1970 எண்பதுகளில் இவர் பெயரை உச்சரிக்காத கல்லூரியோ இளைஞர் உலகமோ இருந்திருக்க முடியாது! அதற்கு முக்கிய காரணம் 1973 இல் இவர் வெளியிட்ட கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள் என்கிற கவிதை நூல் காரணமாகும்! அதேபோல் அவருடைய ஒரு பாடல் எல்லா திராவிட இயக்க மேடைகளிலும் எதிரொலிக்கும்! அந்தப் பாடலைப் பார்க்கலாம்! சாகாத வானம் நாம்! வாழ்வில் பாடும் ...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திட்ட பணிகளை அமைச்சர்கள் வீரமணி ஆய்வு மேற்கொண்டனர்.

Image
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திட்ட பணிகளை அமைச்சர்கள் வீரமணி, நீலோபர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் சாலை செக்குமேடு பகுதியில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் மற்றும் வேப்பமர சாலை பகுதியில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அரசு தொழிற்பயிர்ச்சி நிலையம் கட்டிட பணிகளை வணிக வரித்துறை அமைசசர் கே.சி.வீரமண, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு தொழிற்பயிர்ச்சி நிலையம் கட்டிட பணியில் ஒப்பந்ததாரர் சுவர் எழுப்ப முழு செங்கலுக்கு பதிலாக பொடி செங்கல்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால் சுவர் பலமாக இருக்காது என்று சிலர் புகார் கூறினர். இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்த பெண் அதிகாரியிடம் பொதுமக்களின் புகார் குறித்து விசாரித்தார். இது குறித்து செய்தியாளர்கள் ஒப்பந்ததாரிடம் கேட்ட போது கோவம் அடைந்தார். மேலும் கட்டிடம் எவ்வாறு கட்டுவது என்று சொல்லி தாருங்க...

வேலூர் மாவட்டம் கீழ்ஆலத்தூர் ஏரி தூர்வாரும்பணி துவக்கம்...

Image
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் கீழ்ஆலத்தூர் ஏரியில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம். இ.ஆ.ப.,அவர்களும் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.லோகநாதன் அவர் களும் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்கள். உடன் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.ராமு உள்ளார்.  

வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் ஜனார்த்தனன் அவர்கள் கபசுரகுடிநீர் வழங்கிய காட்சி.

Image
வேலூர் கல்வி மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் சார்பில்  வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களுக்கு கபசுரகுடிநீர் ஆர்டிஓ செந்தில்வேலன் தலைமையில் வழங்கல் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கவும் கபசுரகுடிநீர் வேலூர் ஜுனியர் ரெட்கிராஸ், சார்பில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் மற்றம் ஊழியர்களுக்கு ஆர்டிஓ செந்தில்வேலன் தலைமையில் ஜுனியர் ரெட்கிராஸ் வேலூர் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், வழங்கினார்.  வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவயிளர் ஆடல்அழகன், கண்காணிப்பாளர் ராசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த நிகழ்வில் வேலூர் கல்வி மாவட்ட பொருளாளர் கே.குணசேகரன், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் பொருளாளர் வி.பழனி, ஆயுள் உறுப்பினர் வி.காந்திலால்பட்டேல், தன்னார்வ தொன்டர்கள் செ.ஜா.சோமசுந்தரம், மோனிகா, உள்ளிட்டோர் கபசுரகுடிநீர் வழங்க உதவினர்.   அவலுகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அலுவலகம் அலுகில் இருந்த பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. (செ.நா.ஜனார்த்தனன், அமைப்ப...

பிறந்தநாள் வாழ்த்தினையும்  மனம் நெகிழ வழங்கிடுவோம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
தேசிய புள்ளியியல் தினம் புள்ளியியல் துறை, புள்ளியியல் அமைப்பு, பொருளாதாரத் திட்டமிடலில் பங்கு.... 1933ல் ...இந்தியாவில் "சங்க்யா" புள்ளியியல் பத்திரிக்கை தொடங்கிய... இந்தியப் புள்ளியியல் நிறுவனம் தந்த... மாதிரி ஆய்வுகளை வடிவமைத்த... இந்திய இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட கணித விளக்கங்களைக் கொடுத்த... C.R.Rao எனப்படும் பி.சி.மஹோலனாபிஸ் பிறந்த தினமே ஐக்கிய நாட்டு சபை அங்கீகரித்து வருடந்தோறும் ஜூன் 29 ல் புள்ளியியல் துறை கொண்டாடும் தேசிய புள்ளியியல் தினமாகும்! சமூக பொருளாதாரத் திட்டமிடுதல், திட்டம் இயற்றுதல், புள்ளியியலின் முக்கியத்துவம்...பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்த இத்தினம் அனுஷ்டிக்கப் படுகிறது! கனரக தொழிற்சாலைகள் மேம்படுத்தும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் நேரு மகிலநோபிஸ் மாதிரி எனப்படுகிறது! புள்ளியியல் என்பது... தரவுகள் சேகரிப்பு ஒழுங்கமைப்பு பகுப்பாய்வு விளக்கம் ....என்பது குறித்த  பாடத்துறை! புள்ளியியலாளர் என்பவர்.... புள்ளியியலில் உரிய பயிற்சி பெற்று, அத்துறை சார் பணிகளில்  ஈடுபடுபவர்கள்! 1663 ல்... புள்ளியியல் தோன்றியது! 17 ஆம் நூற்றாண்டில் பாங்கள் & பெ...

வேலூரில் புதிதாக 126 பேருக்கு கொரோனா...

Image
வேலூரில் புதிதாக 126 பேருக்கு கொரோனா' வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 126 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,249 ஆக அதிகரிப்பு.

வேலூர் மாவட்டம் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

Image
வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் எந்த வித மன அழுத்தமும் இன்றி அமைதியான முறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்-வேலூர் சரக டிஐஜி காமினி பேட்டி. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து பொன்னை பகுதியில் உள்ள தமிழக-ஆந்திர எல்லையில் புதியதாக கட்டப்பட்ட மாநில எல்லை சோதனைச்சாவடியை வேலூர் சரக DIG காமினி, எஸ்.பி பிரவேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் வேலூர் சரக டிஐஜி காமினி  அளித்த பேட்டியில் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் எந்த வித மன அழுத்தமும் இன்றி அமைதியான முறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஆரம்பம் முதலே யோக, தியான பயிற்ச்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இனியும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என கூறினார். வேலூர் மாவட்ட செய்தியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் உடன் ஒருங்கிணைந்த  செய்தியாளர் சுரேஷ்குமார் 9150223444.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மறுவாழ்வு நிதி உதவி திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி...

Image
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(29.6.2020) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை யின் மூலம் 2019 -20 ஆம் ஆண்டிற்கான மறுவாழ்வு நிதி உதவி திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி பூட்டுதாக்கு நாராயணபுரம் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் 144 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர்  ச.திவ்யதர்ஷினி, இ. ஆ. ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். கால்நடை  துறையின் மூலம் 43.2 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில்  144 பயனாளிகள் முதல் கட்டமாக அதில் பூட்டுத்தாக்கு கிராமத்தைச் சேர்ந்த 36 நபருக்கும் திமிரி சேர்ந்த ஒரு நபருக்கும் மொத்தம் 37 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அதில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா 1.50 லட்சம் வீதம் ஐந்து நபர்களுக்கு மாட்டுக் கொட்டகைகள் அமைத்து தரப்பட்டன. இந் நிகழ்ச்சியில்  ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க. இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  மயில்வாகனன், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி , கால்நடை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கால்நடை  உதவி இயக்குனர் டாக...

வாலாஜா நகரில் கொரோனா பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு...

Image
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரில் கொரோனா பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு. வாலாஜா நகரத்தில் கொரோனா பாதித்த பகுதிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உடன் சார் ஆட்சியர் இளம்பகவத் மற்றும் வாலாஜா நகர காவல் நிலைய ஆய்வாளர் பாலு மற்றும் நகராட்சி ஆணையர் சதீஷ்குமார்  வாலாஜா நகர வட்டாட்சியர் பாக்கியநாதன் மருத்துவ குழுவினர் உடன் வாலாஜா நகர காவல் துறையினர் வருவாய் துறையினர் நகராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்து நோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

உலக்கை மீது காக்கை உட்கார்ந்துகொண்டு உணவை சாப்பிடலாம் என்று நினைத்தால் முடியுமா - கவிஞர் ச.இலக்குமிபதி.

Image
நல்லது சொல்வோம்- 39 பலப்படுத்தும் பழமொழிகள்! உறவுகளோடு பழகுவதை போல அன்றாடம்  பழ மொழிகளோடு பழகி வருகின்ற பழக்கம் நம் தமிழர்களுக்கு அதிகம்! வாழ்க்கைக்கு வழிகாட்டி நெறிப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வர பக்கபலமாக இருப்பது பழமொழிகள்! மூத்தோரின் அறிவுரைகள் அனுபவ பட்டறிவு அனைத்தையும் ஒன்று சேர பெற்றிருப்பது பழமொழிகள்! அனுபவ குறிப்புகள் நமது அறிவை கூர்மைப்படுத்தும் ஆயுதங்கள்! தமிழ் நாட்டில் வழங்கி வரும் வட்டார பழமொழிகள் பல்லாயிரம்! நமக்குத் தெரிந்த பழமொழிகள் நிறைய உண்டு! ஒருமுறை ஒரு செய்தியில் கடிஞையில் கல் இடுவார் இல்! என்பது படிக்க நேர்ந்தது! பல சாமியார்கள் அந்தக் காலத்தில் திருவோடு ஏந்தி தெருவோடு வருவார்கள்! வீடுகளில் பொருளையோ உணவையோ யாசகமாக கேட்டு பெற்று செல்வார்கள்! தற்போது திருவோடு களை பார்ப்பது சற்று சிரமம்தான்! அதற்கு பதிலாக பாத்திரங்கள் ஏந்தி யாசகம் பெறுபவர்கள் இப்போதும் மிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறார்கள்! அப்படிப்பட்ட பிச்சைப் பாத்திரத்தில் கல் இடுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்! என்பது அந்த பழமொழிக்கு பொருளாகும்! இவ்வளவு அழகாக ஒரு பழமொழி இருக்கிறதே இது எந்த நூலில் வருகி...

வெற்றி என்பது நிரந்தரமல்ல...தோல்வி என்பது இறுதியானதல்ல - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
பில்கேட்ஸ் பிறந்த தினம் வெற்றி என்பது நிரந்தரமல்ல. தோல்வி என்பது இறுதியானதல்ல! வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளையும் மயக்கி தோல்வியே நமக்கு இல்லையென்று நினைக்க வைத்து விடும்!........இந்த அற்புதமான பொன்மொழியை தந்த உலக கோடீஸ்வரனும், மைக்ரோசாப்ட் இயக்குனரும், அதன் தொழில்நுட்ப ஆலோசருமான .. வில்லியம் ஹென்றி கேட்ஸ் எனும் பில்கேட்ஸின் பிறந்த தினம்! அமெரிக்காவின் சியாட்டில் வாஷிங்டன் நகரில்.. பிரபல வழக்கறிஞர் வில்லியம் கேட்ஸ்/ வங்கி இயக்குனர் வாரிய பணியாளர் மேரி மேக்ஸ்வெல் தம்பதிகளுக்கு /இரு  சகோதரிகளுக்கு சகோதரனாக 28.10.1955. ல் பிறந்தவர்! வாழ்க்கை வரலாறு 1.பில்கேட்ஸ் 13 ஆண்டுகள்     தொடர்ந்து உலக பணக்காரர்கள்   பட்டியலில் முதலிடம் தக்க வைத்து/   பாரிஜாத நினைவுகளென   வாழ்க்கை ரதம் செலுத்தும் சாரதி! 2. சின்னக் குழந்தை கூட     கேட்டவுடன் சொல்லி விடுமளவு     புகழ் தேங்கி நிற்கும் இடமெல்லாம்     இறவாப் புகழின் அடையாளமானவர்! 3. லட்சுமி மிட்டல்/ சிலிம் ஹேலு/      வாரன் பப்பட் ஆகிய     உலக பணக்கார ஜாம்பவா...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா...

Image
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,731-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.