ராணிப்­பேட்டை : கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

"ராணிப்பேட்டையில் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்!



ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி நபார்டு வங்கியுடன் இணைந்து நடப்பு நிதியாண்டிற்கான 2020– 21ஆம் ரூ 4127.21 கோடி கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட  அதனை இந்தியன் வங்கி மண்டல மேலாளர் மாயா, முன்னோடி வங்கி மேலாளர் விஜயராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டர்கள்.இக்கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூபாய் 2386.59 கோடியும், பயிர் கடனாக ரூ.2022.49 கோடியும் மற்றும் மாவட்டத்தின் பிறமுன்னுரிமை துறைக்கு ரூபாய் 1068.60 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி மாவட்ட வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் ராமகிருஷ்ண குமார், முதுநிலை மேலாளர் குமார், வேலூர் மாவட்ட முன்னோடி மேலாளர் தியோடசியஸ், எஸ்பிஐ முதன்மைமேலாளர் மாமல்லன் ஆகியோர் பங்கேற்றனர்.ராணிப்பேட்டையில் கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் வெளியிட்டார்!  


 


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.