தடையை மீறி பூஜை செய்த அர்ச்சகருக்கு நோட்டீஸ்...
வேலூர் கோவிலில் தடையை மீறி பூஜை செய்த அர்ச்சகருக்கு நோட்டீஸ்!!!
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை தோட்டப்பாளையம் பகுதிமக்கள்கிராம தேவதையாக வணங்கி வந்தனர்.தற்போது இக்கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் செயல் அலுவலராக வஜ்ரவேல் இருந்துவருகிறார்.அர்ச்சகர்களாக நடரா
ஜன் மற்றும் சதீஷ் ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கால் கோவில் பூட்டப்பட்டிருக்கும் நேரத்தில் தடையை மீறி நடராஜன் இந்து முன்னணியினர் வசதிக்காக கோவிலுக்குள் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து புகார்
அளிக்கப்பட்டதையடுத்து இதற்கு விளக்கம் அளிக்குமாறு நடராஜனுக்கு வஜ்ரவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.9150223444
Comments
Post a Comment