அமைதி ...மகத்தான சக்தி... எதையும் சமாளிக்கும் இயல்புடையது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
சர்வதேச அமைதி காப்போர் தினம்
அமைதி....
அழகானது
ஆழமானது
தெய்வீகமானது
தேவையானது !
அமைதி.....
மனம் சார்ந்தது!
அது வெளியே அல்ல..
நமக்கு உள்ளே இருப்பது!
அமைதி......
மௌனத்தின்
முன்னுரை!
சப்தத்தின்
பொருளுரை!
நிசப்தத்தின்
முடிவுரை !
மனநிறைவின்
பின்னுரை!
29.05.2001...முதல்
ஐக்கியநாடுகள் சபை
மே 29 ஆம் திகதியை
சர்வதேச அமைதி காப்போர்
தினமாக அனுஷ்டிக்கிறது!
முதல் உலகப்போர் கண்ட
சில மனித நெஞ்சம்
இரத்த தாகம்
அடங்காமல் அடி வைத்தது
இரண்டாம் உலக யுத்தத்திற்கு!
சொத்திழப்பும்
உயிரிழப்பும்
கணக்கலடங்கா இழப்பானது!
விதி கணக்கு முடிக்க
வழி காண பிறந்தது...
ஐக்கிய நாடுகள் சபை!
இயற்கை அனர்த்தங்கள்
யுத்தத்தின் இடர்பாடுகள்..
இரண்டும் இணைய
சமாதானம் ஏற்படுத்த
நிவாரணங்கள்
ஒருங்கிணைக்க...
அமைதிப்போர்கள்/
கண்காளிப்பாளர்களை
உரிய இடங்களில்
பணியமர்த்தும் வேலைத்
திட்டம் அமல்படுத்தப்பட்டது!
இத்திட்டம் படி
மே 29. ல் அமைதி காக்கும்
நடவடிக்கையில் ஈடுபட்ட
ஆண்/பெண்களை
கௌரவப்படுத்தவும்...
இந்நடவடிக்கையின் போது
உயிர்நீத்தவர்களை
ஞாபகமூட்டவும்
மே 29 ஆம் தேதி
சர்வதேச அமைதி
காப்போர் தினமாக
பிரகடனப்படுத்தியது!
1948 ன் நிகழ்வு
1.அரேபிய - இஸ்ரேலிய
யுத்தம் போது...தற்காலிக
போர் நிறுத்த உடன்படிக்கை
மீறிய இஸ்ரேலிய படைகள்
குறித்து விசாரணை ...
2. விசாரணை மேற்கொண்ட
France நாடு சார்ந்த யுத்த
நிறுத்த கண்காணிப்பாளர்
Rene Labarriere விபத்தில்
உயிரிழப்பு!
3. 13.07.1948 ...ஜெருசலத்தில்
அமைதி காக்கும்
பணியிலிருந்த பணியாளர்
நார்வே நாட்டைச் சார்ந்த
Ole H.Bakke கொல்லப்பட்டார்!
4. 02.08.1948...காசா பகுதியில்
பணியாற்றிய...
லெப்டினன்ட் கர்னல்..
France நாட்டு படைவீரர்...
Joseph Queru உயிரிழந்தார்!
6 படைவீரர்கள் காயமுற்றனர்!
5. 17.09.1948...
கவுண்ட் போர்கல் பெர்னடொட்
எனும் அமைதி காக்கும்
படைவீரர் Stern Gang ஆல்
கொலை செய்யப்பட்டார்!
6. 1958..இஸ்ரேலிய...அரேபிய
போர்.
1973....அரேபிய-இஸ்ரேலிய
போர்
2008....இஸ்ரேலிய..
லெபனான் போர்
7. கடமையாற்றிய ஐக்கிய
நாட்டு அமைதி காப்பாளர்கள்/
இடைக்கால படையினர்
300 க்கும் மேற்பட்டோர்
கொல்லப் பட்டனர்!
யுத்தத்தை உருவாக்கியவரே
சமாதானம் தோற்றுவிக்க
வேண்டுமென்பது....
ஐ.நா.சமாதான பொறுப்பாளர்
நாயகம் ஜென்மேரி
கைகென்னோ வின் கூற்று!
அமைதியை தேடி தருவது
ஐ.நா. வின் பணியான்று!
பலவந்தமாக சமாதானம்
உருவாக்க முடியாது!
அமெரிக்கா ..ஈராக் மீது
தொடுத்த போர்
சட்டவிரோதமானதென்பது...
கனடாவின் 31 சட்டப்
பேராசிரியர்களின் கருத்தானது!
உலக அமைதி என்பது..
பூமியிலுள்ள நாடுகளும்,
பயணிக்கும் மக்களும்
ஒருவரோடொருவர் இணைந்து/
அரசியல்/சுதந்திரம்/மகிழ்ச்சியில்
பங்கேற்கின்ற இலட்சியமே!
உலக அமைதி கொணர்வது....
தனிமனிதன்
பகையுணர்ச்சிகளை
தன் வாழ்விலிருந்து அகற்றுவது!
மனித உரிமைகளை
மேம்படுத்துவது!
கல்வி/மருத்துவம்/
தொழில்நுட்பம் மூலங்களாக்கி
அமைதி தருவது!
உலக அமைதி...
மனித இயல்போடிணைந்த
போர்/வன்முறையை
அறவே நீக்கப் பெறுவது!
பிறரோடு அமைதியாக
ஒத்து வாழ்ந்து/செயலாற்றுவது!
மூன்று போர்களும்
அமைதியின்மையும்
1. 1950 & 1970 ல்
கடலில் காட் மீன் பிடிக்கும்
உரிமைக்காக
ஐக்கிய இராஜ்ஜியம்/
Island நாடுகளிடையே
ஏற்பட்ட போர்!
2. 10.05.1940 அன்று
2 ஆம் உலகப் போரின் போது
ஐக்கிய ராஜ்ஜியம்
கொண்ட போர்!
3. 1995 ல்
கடல் நீரில் மீன்பிடிக்க
கனடா-எசுப்பானியா
இடையே நிகழ்ந்த போர்!
அமைதியும் சமயங்களும்
1. பகாய் சமயம்.....
19 ஆம் நூற்றாண்டில்
பகாவுல்லா சொன்னது..
கடவுள் ஒருவரே!
உலக அமைதி ஏற்பட
உலகளாவிய பாதுகாப்பை
உறுதிபடுத்தும் அமைப்பு
தேவையான கருவியாகும்!
2. புத்த சமயம்......
அன்பு/இரக்கம் வளர்த்தலே
அமைதிக்கான வழி!
உள்ளத்திலிருந்து
பிறக்கும் அதை வெளியே
தேடுவதை நிறுத்து!
3. கிறித்துவ சமயம் ......
உலக அமைதிக்கு
அடித்தளங்கள்.....
உண்மை/அன்பு/நீதி/
சுதந்திரமே!
மன்னித்து சமாதானம்
செய்யுங்கள்!
4. இந்து சமயம்....
ஒன்றே குலம்/
ஒருவனே தேவன்!
கத்தியில்லா
இரத்தமில்லா யுத்தமே
அமைதிக்கான வழி!
5. இஸ்லாம் சமயம்......
சொல்லாலோ
செயலாலோ
பிறர்க்கு தீங்கிழைக்காமல்
இருப்பதே அமைதி!
6. யூத சமயம்.....
மெசியா வருவார்
யூத குழுமத்தோடு...
நிரந்தர நீதியை/
அமைதியை நிலைநாட்ட!
7. சமண சமயம்.....
அமைதிக்கு வழி
சகிப்புத் தன்மை!
8. சீக்கிய சமயம்.....
நேர்மையான வழியில்
சேர்ப்பதை பிறரோடு பகிர்!
இயற்கையோடு இணைந்து
வாழ அமைதி கிட்டும்!
அமெரிக்க முன்னால் அதிபர்
ஜார்ஜ் புஷ்ஷின் கருத்து.....
உலகில் குடியரசு ஆட்சி முறை
பரவினால் அமைதி வழி கிட்டும்!
மார்க்சிய கருத்து....
லியோன் திரொட்ஸ்கி கூற்று..
உலகப் புரட்சி நிகழ
பொதுவுடைமை அமைதி
ஏற்படும்!
கோப்டன் கொள்கை...
நாடுகளுக்கிடையேயான
கட்டுப்பாடற்ற வாணிபம்
அமைதிக்கு வழி கோலும்!
மனித உரிமைகள் சாற்றுரை...
மனித குடும்பம் சார்ந்த
அனைவரின் மாண்பைபும்
உரிமைகளையும்
ஏற்றுப் போற்றுதலே
அமைதிக்கு அடிப்படை!
அமைதிக்கான இடம்
மனிதநேயமிக்க
மனிதர்கள்
மகான்கள்
அவதரித்த பூமியிது!
ஏதோ ஒரு மூலையில்
தினமும் 1000 அகதிகள்
அடித்து விரட்டப்படுகிறார்கள்
அங்கே விரட்டப்படுவது
மனிதர்கள் மட்டுமில்லை
மனிதநேயமும் தான்!
எங்கும்
எப்போதும்
பதட்டமான சூழல்!
அமைதியென்ற வார்த்தை
பல்வேறு விதங்களில்
தொலைக்கப்பட்டு
இன்னமும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்!
அமைதியான நாடுகள்
முதல் இடம்....ஐஸ்லாந்து
10 வருடமாக
2 வது இடம் ...நியுசிலாந்து
3 வது இடம்.....ஆஸ்திரியா
4 வது இடம்.....போர்ச்சுகல்
5 வது இடம் ....டென்மார்க்
இந்தியா....141 லிருந்து
137 வது இடம்.
கடைசி 5 இடங்களில்....
சிரியா
ஆப்கானிஸ்தான்
தெற்கு சூடான்
ஈராக்
சோமாலியா
இதிகாச காலத்திலிருந்தே
அமைதி காண விடாத
3 சத்ருக்கள்...
மண்
பெண்
பொன்
பாரதிதாசன்
பகர்வது...
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரோடு சாய்ப்போம்!
வேதாந்திரி மகரிஷி
வேண்டுவதும்...
போரில்லா நல்லுலகமே!
பாரதி
விரும்புவது...
ஊருக்கு உழைத்திடல் யோகம்!
நலம் ஓங்கிட வருந்துதல் யாகம்!
மனம் பொங்குதலில்
இல்லாத அமைதியே
மெய்ஞ்ஞானம் !
கண்ணுக்கு கண்
பல்லுக்கு பல்
காட்டுமிராண்டித்தன சிந்தனை!
கண்டுபிடித்த விஞ்ஞானி
வாக்குமூலம்....
டைனமைட் நான் கண்டது
தவறென!
சுயலாபம்
சுயநலத்திற்கு
மடிவது உயிர்களானால்
அமைதி அழுதிடாதா?
பகை காண
பகட்டான பதில்கள்....
அவர்கள் வேல் எடுத்து வர
நாங்கள் துப்பாக்கியால்
வென்றோம்!
அவர்கள் துப்பாக்கி எடுத்து வர
நாங்கள் பீரங்கிகள் எடுத்தோம்!
அவர்கள் பீரங்கிகள் பயன்படுத்த
நாங்கள் வெடிகுண்டுகளால்
வாகை சூடினோம்!
இதுவா தமிழர் பண்பாடு?
இன்று போய் நாளை வா..
என நிராயுதபாணி
இராவணனுக்கும் போர்
அறம் காத்த நாடு எங்கே?
இத்தனையையும் தாண்டி
அற்புதமாய்
ஆச்சர்யமாய்
அழைப்பு விடுத்த படி
அங்கேயே வீற்ற படி
அமைதி!
போரும்
மரணமும்
எவ்வடிவிலும் அழகில்லை!
போரினால் அமைதி கெடும்
என போர் மறுத்த
இத்தாலி போர்வீரன்
தூக்கிலிடப்பட்டது தர்மமா?
படைபலம்
ஆயுத பலம்
அணுபலம்
சார்ந்த உலக அழிவுக்காக
150 நாடுகள்
அணு ஆயுதம் கொண்ட பின்
அமைதியை எங்கே தேடுவது?
1.காந்தி கண்டது...
புற சூழலால் பாதிக்கப்படாமல்
இருப்பது அமைதி!
2.கீட்ஸ் கவிஞன் சொன்னது...
அமைதி..அழகிய கவிதை!
ஆக்கப்படும் முன்
இங்கே இல்லாதது!
3. புத்தன் புகட்டுவது....
கண்களை மூடுவதற்கு பதில்
மனதை மூடு!
உன் மனம் அமைதி பெற
உலக நாடுகள்
அமைதி தழுவும்!
4. கண்ணதாசன் கண்டது...
பட்டது கோடி
பார்த்தது கோடி
சேர்த்த அனுபவமே
சிறந்த அமைதி!
5. அமைதியுடன் இருப்பவனே
ஆண்டவனின் அருள்
பெறுவான்!
இதை அறிந்த
கலாம் கதைப்பது...
மனதில் அமைதி நிலவ
வீட்டில் அமைதி வரும்!
வீடு அமைதி காண
நாடு அமைதி தழுவும்!
6.விவேகானந்தர் கூறுகிறார்...
மனம்...
அழகிய விளக்கு
அற்புத விளக்கு
அது சவாலை நாடும்
அமைதி காண
சாதனையும் படைக்கும்!
7. ராமகிருஷ்ணர் கேட்கிறார்...
கோயில் இடிப்பு
மசூதி எரிப்பு
பாதிரியார் கொலை
புத்தபிட்சு போராட்டம்
சாமியார் எரிப்பு
சிலுவை பின் சிலுமிசம்
கோயிலில் கற்பழிப்பு
இதில் நல்லறம் எங்கே?
அதனால் பெறும்
நல் அமைதி எங்கே?
8.அமைதி எதை தரும்?
வைக்கோல்போரில் விழுந்த
வாட்சினை...
வைக்கோல்போரினை
கலைக்க கிடைத்து விடாது!
5 நிமிடம் அமைதியாக அமர
கடிகார முள்ளின் ஓசை
தொலைத்த வாட்சை
கிடைக்கச் செய்யும்!
அமைதி தேடல் தருவதோடு
தேடும் பொருள் கை
தேடி வரவும் செய்யும்!
9. அமைதி
வெளியில் தேட கிடைக்காது!
ஓவியப்போட்டியில்
அமைதி வரையச் சொல்ல...
தேர்வானது...
சலனமில்லா நதி
ஆள் அரவமில்லா பூங்கா
சுழலில்லா குளம்
சந்ததியற்ற
சாலையோ அல்ல !
மாறாக....
கடல் சீற்றம்
ஓடும் மக்கள்
மரங்களின் பேயாட்டம்
இத்தனை சலசலப்புகளின்
நடுவே அமைதியாக
மரக்கிளை கூட்டிலிருந்த
தன் குஞ்சுகளுக்கு
ஒரு தாய்ப்பறவை
உணவூட்டிய படியிருந்த
ஓவியமே தேர்வானது!
10. அமெரிக்க ஜனாதிபதி
அழகாக சொல்கிறார்....
குழப்பமென்பது
அமைதியின்மை குறிப்பது!
அமைதியாக அதை
அணுகுங்கள்!
11. வாழ்தல் ஒரு கலை!
அமைதியுடன் வாழ்தல்
நுட்பமான கலை!
அமைதி காண
முயற்சித்து வெளியேறு!
அமைதியான வாழ்க்கை...
பரந்த வானம் போன்றது!
அதில் சுட்டெரிக்கும்
சூரியனும் வரலாம்!
குளிர்ச்சி தரும்
சந்திரனும் வரலாம்!
அமைதி மனம் பெறும் வழிகள்
1.மற்றவர் வேலையில்
தலையிடாமை,
2.மறக்க/மன்னிக்க முனைதல்.
3.பாராட்டுக்கு ஏங்காமலிருத்தல்.
4.பொறாமைப்படாதிருத்தல்.
5.சுழ்நிலைக்கேற்றவாறு மாறுதல்.
6.தவிர்க்க முடியாத காயங்களை
ஏற்கும் பக்குவம் பெறுதல்.
7.செய்ய முடிவதை செய்தல்.
8.தினமும் தியானித்தல்.
அமைதி ...மகத்தான சக்தி!
எதையும் சமாளிக்கும்
இயல்புடையது!
தெரிந்து/புரிந்து கொள்ளும்
ஆர்வம் அதற்குண்டு!
ஜீவன் வாழ விரும்புவது
சாக அல்ல!
புலம்ப அல்ல!
வாழ்வோம்...அமைதியோடு!
சர்வதேச அமைதி காக்கும்
தினத்தில்....
அமைதி விரும்புவோரில்
உங்களோடு ஒருத்தியாக...
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513.
9940739728.
Comments
Post a Comment