முககவசம் அணியாமல் சிகிச்சை மருத்துவமனையை பூட்டி சீல்...
முககவசம் அணியாமல் டாக்டர் சிகிச்சை தனியார் மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டது!!!
ரூ.2லட்சம் காலாவதியான மருந்துகள் பறிமுதல். ஆற்காடு அடுத்த திமிரி அருகே சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முககவசம் அணியாமல் டாக்டர் சிகிச்சை அளித்ததால் தனியார் மருத்துவனையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டு உள்ளது மேலும் தனியார் மருத்துவமனைகள் இயங்குவதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமிரி பகுதியில் இயங்கிவரும் ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முககவசம் அணியாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு தகவல் வந்தது.இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மாவட்ட தொடர்பு அலுவலர் டாக்டர் கீர்த்தி தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் சுகாதார ஆய்வாளர் பிரபு வருவாய் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் காண்டீபன் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த மருத்துவமனைக்கு சென்றுதிடீர் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்கு 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருந்தனர். சிறிய அறையில் எந்தவித காற்றோட்ட வசதி இல்லாமலும் கொரானா வைரஸ் தொற்று
விழிப்புணர்வு இல்லாமல் சமூக இடைவெளிகள் கடை பிடிக்காமலும்
கிருமிநாசினி பயன்படுத்தாமலும் மருத்துவமனை இயங்கி வந்தது தெரிய வந்தது.மேலும் அங்கு இருந்த டாக்டர் முகக் கவசம் அணியாமல் நோயாளிகளுக்கு
சிகிச்சை அளித்தது தெரியவந்தது தொடர்ந்து விசாரணை செய்ததில் காலாவதியான மருந்துகளை பயன்படுத்தும் கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகளை பறிமுதல் செய்து
அதிகாரிகள் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)
Comments
Post a Comment