வேலூரில் இருந்து நாளை முதல் அரசு பஸ் இயக்கம் ...ஏற்பாடுகள் தீவிரம்.
வேலூரில் இருந்து நாளைமுதல் அரசுபஸ்கள் இயங்க உள்ளன.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகநடைபெற்று வருகின்றன.நாளை முதல் தமிழகத்தில்50 சதவீத பேருந்துகள் இயங்கலாம் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளதையடுத்து வேலூரில் அரசுபஸ்கள் இயங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தர்மபுரி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு உண்டான 1,200க்கும் மேற்பட்ட அரசுபஸ்கள் வேலூரிலிருந்து இயங்குகின்றன.இதில் 50 சதவீத பேருந்துகள் நாளை முதல் ஓசூர்,காஞ்சிபுரம் எல்லையிலுள்ள ஓச்சேரி போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளன. திருப்பதி மற்றும் பெங்களூர் போன்ற வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.60 சதவீதபயணிகள் மட்டுமே ஏற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதையடுத்து ஒரு பேருந்துக்கு 30 பயணிகள் வரை மட்டுமே அனுமதி வழங்கப் பட உள்ளது.வேலூரில் இருந்து நாளை முதல் அரசு பஸ் இயக்கம் !ஏற்பாடுகள் தீவிரம்...
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)
Comments
Post a Comment