சமாதானப் புறா...என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
ஜவஹர்லால் நேரு நினைவு தினம்
பண்டிட் நேரு
பண்டிதர் நேரு
மனிதருள் மாணிக்கம்
சமாதானப் புறா....என்று
இந்திய மக்களாலும்
சாச்சா நேரு..என
குழந்தைகளாலும்
அழைக்கப் படும்
ஜவஹர்லால் நேருவின்
நினைவு தினம்!
14.11.1889 ல்
பிறந்த நேருஜி
27.05.1964 ல் தனது
75 வது வயதில்
மண்ணுலகை விட்டு
விண்ணுலகு சேர்ந்தார்!
குழந்தைகள் மீது பாசம்
கொண்டவர் என்பதால்
அவரின் பிறந்த நாளான
நவம்பர் 14 ஆம் திகதி
குழந்தைகள் தினமானது!
சட்டக்கலை பயின்றதால்
தேசியக்கலை தெரிந்து
17 வருடங்கள்(1945-1964)
இந்தியாவின் பிரதமர் பதவி
திறம்பட வகித்தவர்!
பஞ்ச சீலக் கொள்கை
அணிசேராக் கொள்கை
உருவாக்கி.....
அனைத்துலக அரசியலில்
முக்கியத்துவம் வகித்தவர்!
வாழ்க்கை வரலாறு
1.வழக்கறிஞர்
பெரும் செல்வந்தர்
மோதிலால் நேரு &
கமலா காந்தியின் புத்திரனாக
அலகாபாத், உத்திரப்பிரதேசத்தில்
14.11.1889. ல் ஜனனம் கண்டவர்!
2. காஷ்மீரப் பண்டிதர் எனும்
பிராமண வகுப்பு சார்ந்த
இவருக்கு
பெற்றோர் அழகான
சிவப்பு நகை எனும் பொருளில்
ஜவஹர்லால் எனும்
பெயர் சூட்டினர்!
3. கல்வி
1.ஹிந்தி/சமஸ்கிருதம்/
இந்தியக் கலைகள் கற்றவர்!
2. இங்கிலாந்து ஹார்ரோ பள்ளி
.....பள்ளிப் படிப்பு !
3. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக
நுழைவுத்தேர்வினை 1907 ல்
எழுதி/திரினிட்டி கல்லூரியில்
இயற்கை அறிவியல் படிப்பு!
4. 1910 ல் சட்டம் பயில
இன்னர் டெம்பில்
பதிவு செய்து,1912 ல்
சட்டப் பணியாற்ற
இந்தியா திரும்பினார்!
5. மண வாழ்வு
07.02.1916 ல் காஷ்மீர பிராமண
வகுப்பின கமலா கவுல்
மனைவியாக....
இந்திரா பிரியதர்ஷினியை
மகளாகப் பெற்றவர்!
சுதந்திர இயக்கத்தில் ஆர்வம்
கொண்ட மனைவி 1936 ல்
மரணித்தல்!
6.அரசியல் வாழ்வு
1916...லக்னோவில் காங்கிரஸ்
கூட்டத்தில் காந்திஜி சந்திப்பு!
1919 ல் ஜாலியன் வாலா பாக்
படுகொலை... காங்கிரஸில்
இணைந்து காந்தியின்
நம்பிக்கைக்கு உரியவராதல்!
7.சிறை வாழ்வு
1. 1920...காந்தியின்
ஒத்துழையாமை இயக்கப்
பங்கேற்பு.
2. 1921...முதல் சிறைவாசம்.
3. 1922... சிறை... விடுவிப்பு.
வாழ்நாளில் 9 வருடங்கள்
சிறை வாழ்க்கை கண்டவர்!
4. 1934..வரலாற்றின் காட்சிகள்
1936....சுய சரிதை &
இந்தியாவின் கண்டுபிடிப்பு
நூல்களை சிறையிலிருந்து
எழுதினார்.
அரசியல் வாழ்வு
1. 1922..லாகூர்..இந்திய தேசிய
காங்கிரஸை தலைமையேற்று
வழிநடத்தி இடதுசாரி
தலைவரானார்!
2. வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தில் பங்கேற்றவர்!
3. 03.06.1947. ல்
முஸ்லிம்களுக்கான தனிநாடு
கோர..முஸ்லீம் லீக் உடன்
ஏற்பட்ட பேச்சு வார்த்தை
தோல்வி/பிரிவினைக்கு
ஆதரவளித்தார்!
4. துடிப்பு மிக்க புரட்சி
தலைவரான
நேரு...15.08.1947 ன்
சுதந்திர இந்திய கொடியை
ஏற்றும் சிறப்பு பெற்றவர்!
5. விதியுடன் போராட்டம்
என்ற தலைப்பில்..உலகமே
தூங்கும் போது இந்நாடு
விழித்து
எழுகிறது! இந்நாள் முதல்
மக்களின் கண்ணீர்
துடைக்கும் பணியிலிருந்து
ஓய மாட்டேன்...எனும் உரையை
சுதந்திர தின மேடையில்
பேசினார்!
6 . பொருளாதாரக் கொள்கை
1. பாராளுமன்ற ஜனநாயகம்/
உலகியல் வாதம்/ஏழைகள்/
தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய
அக்கறை/அதிலிருந்த உண்மை
பற்றி நாட்டம் கொண்ட இவர்
நீண்ட கால பிரதம மந்திரியாக/
இந்தியாவின் பழைமை அமைப்பு
செதுக்கும் கருவியானார்!
2. நவீன இந்தியாவின் சிற்பி
எனப் பெயரும் பெற்றார்!
3.1951..முதல் ஐந்தாண்டு
திட்டம் உருவாக்கினார்.
4.சுரங்கம்/மின்சாரம்/
கன ரக இயந்திரங்கள்/
தொழிற்சாலைகள் யாவும்
தனியார் வசம் போவதை
தடுத்து/அரசாங்கம் நடத்த
திட்டமிட்டார்!
5. விவசாய கிணறுகள்/
அணைகள் கட்டும் திட்டம்
அமல்படுத்தினார்.
6. நில மறு பங்கீட்டை முதன்மை
படுத்தினார்!
7.விவசாய உற்பத்தி பெருக்க..
உரங்கள் பயன்பாட்டு முறை
பரப்பினார்!
8. பெரிய அணைகளை..
இந்தியாவின் புதுக் கோவில்
என பெயரிட்டு/ விவசாயம்...
மின்சார உற்பத்தி ஆதரித்தார்!
9. குடிசை தொழில்களை
பரப்பினார்.
10. அணு ஆற்றலில் இந்தியா
சிறக்க திட்ங்கள் தீட்டினார்!
கல்வி/சமூக சீர்திருத்தம்
இந்தியாவின் எதிர்காலம்..
இந்தியக் குழந்தைகள் &
இளைஞர்களின் கல்வி
மேம்படுத்துவதில்
இருப்பதை நம்பினார்!
1. அனைத்திந்திய மருத்துவ
அறிவியல் கழகம்/இந்திய
தொழில் நுட்ப கழகங்கள்/
தேசிய தொழில் நுட்ப
கழகங்களை அமைத்தார்!
2. குழந்தைகளுக்கு பால்/மதிய
உணவளிக்கும் திட்டம்
அமல்படுத்தினார்!
3.கட்டாய தொடக்க கல்வி தர
ஆயிரக்கணக்கில் பள்ளிகள்
கட்டினார்!
4.பிற்படுத்தப்பட்டோர்/மலைவாழ்
சாதியினர்/தாழ்த்தப்பட்டோர்
ஆகியவர்களுக்கு அரசாங்க
பணி/கல்வி நிறுவனங்களில்
இட ஒதுக்கீடு ஏற்படுத்தினார்!
5. அரசியலில் சிறுபான்மையினர்
பங்கு பெற செய்தார்!
6. மத நல்லிணக்கம்/ மத
சார்பின்மை ஆதரித்தார்!
தேசியப் பாதுகாப்பு/வெளியுறவு
கொள்கையில் நேரு
1. 1953 ல் ஐக்கிய நாட்டு
மாநாடு நடத்தும் உறுதியைக்
கைவிட்டார்!
2. காஷ்மீர் அரசியல்வாதி
ஷேக் அப்துல்லாவை கைது
செய்து/குலாம் அகமதுவை
இடம் பெற வைத்தார்!
3. சீனாவை ஐக்கிய நாடுகளுடன்
சேர்க்க வாதாடியவர்!
4. 1962 ல் சீனா ...காஷ்மீரிலிருந்து
அக்ஸாய் சின்னை இணைக்கவே
சீன-இந்தியா போர் மூண்டது!
5.அணு ஆயுதம்...பயங்கரமான
அழிவு இயந்திரம் என
பிரச்சாரம் செய்தவர்!
6. 1960 ல்...இண்டஸ்
தண்ணீர் உடன்படிக்கையில்
பாகிஸ்தான்..ஆயுப்கானுடன்
கையெழுத்திட்டார்!
7. மத சார்பின்மை/கோவிலுக்கோ
மத தலைவர்களை சந்தித்தல்
தவிர்த்தல்....இவ்விரு
விஷயங்களில் உறுதி
கொண்டவர் !
8. சிறியன சிந்தியாதவர் என்ற
காரணத்தால் சீனப்போரில்
தோல்வி/காஷ்மீர் பிரச்சினை
தவறாக கையாண்டவர் என
அவப்பெயர் சுமந்தவர்!
9. பாகிஸ்தான் இவருக்கு ஓட்டு
சேகரித்ததை அறிந்து...
மதவாதம் & வகுப்புவாதம்
மூலம் வரும் ஓட்டினை பயன்
படுத்த மாட்டேன்/எதிர்ப்பேன்
என்ற கொள்கையில்
உறுதியாக இருந்தவர்!
10. எப்போது விருப்பமோ
அப்போது ஹிந்தியை
இணையுங்கள் என
தமிழகத்திற்கு சலுகை
தந்தவர்!
11.மொழிவாரியாக மாநிலங்கள்
பிரிக்க மக்களின் விருப்பத்தை
ஏற்று அந்நிலையை
ஆதரித்தவர்!
12.ரேஷன் முறை அமல்படுத்தினார்!
13. வாழ்நாள் முழுக்க பிறர்
கருத்தை மதிக்கும்
ஜனநாயகவாதியாக இருந்தார்!
14. 1961 ல் கோவாவை இணைக்க
இந்திய இராணுவத்திற்கு
அனுமதி தந்தார்!
15. ஒன்று சேர் (அ) ஒழி என
எச்சரிக்கை விடுத்தவர்!
16. அஸ்ஸாம் வரை சீனா
ஊடுருவல் அறிந்து...
அவர்களை தூக்கி எறியுங்கள்
என கர்ஜித்தவர்!
17. ஒரு ராஜ்ஜிய பொருளை
இன்னொரு ராஜ்ஜியத்துக்கு
விற்க வழி வகுத்தவர்!
பஞ்சசீலக் கொள்கை
1.ஒவ்வொரு நாடும் பக்கத்து
நாட்டு எல்லைகளை பரஸ்பரம்
மதித்தல்!
2. மற்ற நாடுகளின் உள்
விவகாரங்களில் தலையிடாமல்
இருத்தல்!
3. மற்ற நாடுகள் மீது போர்
தொடுக்காதிருத்தல்!
4. சமத்துவம் மற்றும் பரஸ்பர
நன்மைக்கு முக்கியத்துவம்
அளித்தல் !
5. அமைதி நடவடிக்கை!
எழுதிய நூல்கள்
1. தி டிஸ்கவரி ஆப் இந்தியா
2., Climps of world history
3. Towards Freedom
4. சுயசரிதை
பத்திரிக்கை
1938 ல்....
National herold.
பத்திரிக்கை நடத்தியவர்!
2008 ல் அப்பத்திரிக்கை
நிறுத்தப்பட்டது!
இறுதி காலம்
1. காஷ்மீரிலிருந்து திரும்பிய
நேருஜி...
1964 ல் பக்கவாதம்/
மாரடைப்பு தாக்க..
காலமானார்!
2.யமுனை நதிக்கரை
சாந்திவனம் அவர் உடலை
தகனம் செய்யும் புண்ணியம்
பெற்றார்!
3.) 1000 க்கணக்கில் மக்கள்
மௌன அஞ்சலி செலுத்தினர்
நினைவிடம்
1. ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகம்.
2. மும்பை நகர ஜவஹர்லால்
நேரு துறைமுகம்
3. டெல்லியில்....
நேரு வசிப்பிடம்/ நேரு
நினைவுக்கூடம்/நூலகம்!
4. ஆனந்த பவன்/சுராஜ் பவன்
சட்டபூர்வ நினைவகங்களாக!
5. 1989...சோவியத் யூனியன்
நினைவு தபால் தலை!
6. வாழ்நாள் முழுதும் உலக
அமைதிக்கு பாடுபட்டவர்
என்பதை நினைவில் நிறுத்தி..
ஜவஹர்லால் நேரு விருது
வழங்கப் படுகிறது !
இவ்விருது பெற்றவர்கள்...
எ.குடிமெனுகின்..1968
அன்னை தெரசா...1969
நெல்சன் மண்டேலா...1979
7. கோவை பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு விருதை
வேளாண் பல்கலை ஆராய்ச்சி
மாணவர்களுக்கு அளிக்கிறது!
சென்ற வருட விருதாளினி.
கோவை வேளாண்மை
பல்கலைக்கழக மாணவி...
நெல் சூலைநோய் ஆய்வு
கண்பிடிப்பிற்காக....
ஆய்வாளர் திவ்யா பெற்றார்!
ஷெர்வானி
காந்திய குல்லா
ரோஜா
துளசிதள மென்மை
அரண்மனையின் கம்பீரம்
இதையெல்லாம் பார்க்க....
நினைவுக்கு வருபவர்
ஆசியாவின் ஜோதி
மனிதருள் மாணிக்கம்
சமாதானப் புறா....
என்று அழைக்கப்படும்
ஜவஹர்லால் நேரு
இம்மண்ணை விட்டு
27.05.1964 ல் மறைந்தாலும்
அவர் புகழ் இந்திய மண்ணில்
நிறைந்துள்ளது !
அவர் நினைவை மனதில்
மறைந்த தினமதில்
நினைவில் ஏந்துவோம்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.
Comments
Post a Comment