மூத்த குடிமக்களுக்காக சிறப்பு மருத்துவமுகாம் அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்.
"ஜோலார்பேட்டை அருகே மூத்த குடிமக்களுக்காக சிறப்பு மருத்துவமுகாம்!!!
"அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்!!
ஜோலார்பேட்டை அருகே மூத்த குடிமக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதை அமைச்சர் வீரமணி தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.எனினும் மருந்து கடைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் நோய் பரவிவிடும் என அச்சத்தில் பெரும்பாலானா தனியார் மருத்துவர்கள் தங்களது மருத்துவமனைகளை மூடிவிட்டனர். இதனால் பொதுமக்களுக்கு மற்ற நோய்களுக்கு கூட சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது.இதைகருத்தில் கொண்டு ஜோலார்பேட்டை அருகே
கோடியூரில் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக சிறப்பு மருத்துவமுகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த முகாம் இன்று நடந்தது. அதை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கிவைத்தார்.ஆட்சியர் சிவனருள், சுகாதாரத்துறை துணைஇயக்குனர் சுரேஷ், மருத்துவர் சுமதி, ஆனந்தகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இந்த முகாமின் மூலம் 300–க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வீரமணி, மக்கள் கபசுரகுடிநீரை தொடர்ந்து குடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)
Comments
Post a Comment