உயர்ந்த மனிதரின் மதிப்பை குறைக்கும்...உழைக்கும் மனிதனின் ஊதியம் கரைக்கும் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
நிக்கோட்டின்
கார்பன் மோனாக்சைடு
வெடி உப்பு
பிரஸ்லிக் அமிலம்
பைக்கோலின்
விரிடைன்
மரிஜுவானா
அக்ரோலின்
மைதிலைமின்
ஃபார்மிக் அமிலம்...
இப்படி 4000 வேதிப்
பொருட்கள் கொண்ட
புகையிலையை...
ஒழிக்கும் தினமாக
மே 31 ஐ உலக சுகாதார அமைப்பு
மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்த...அனுசரித்து வருகிறது!
உடல் எதிர்ப்பு சக்தி மறைதல்,
மாரடைப்பு,
பக்கவாதம்,
நுரையீரல் பாதிப்பு,
இதய செயலிழப்பு,
தோள் சுருக்கம்,
எண்ணைய் பசை குறைவு,
இளமையிலே முதுமை
தோற்றம் ஏற்படுதல்,
இருமல்,
வாய் நாற்றம்,
பற்களில் கறை,
ரத்த சோகை,
புற்றுநோய்,
மூக்கடைப்பு.....போன்ற
அத்தனை நோய்களின்
உபயதாரர்... புகையிலையே!
புகைப்பது உடலுக்கு கேடு!
1947 லிருந்து
புகையிலை எதிர்ப்பு தினமாக
WHO அறிவித்தது.
பெயர்க்காரணம்
1837 ல் முன்வைத்தது WHO
புகையிலை எதிர்ப்பினை!
போர்த்துகீசிய நாடுகளிலிருந்து
வந்த வணிகர்கள் மூலம்
16 ஆம் நூற்றாண்டில்
இந்திய வருகை தந்த
புகையிலை...
பிரான்ஸ் தூதுவரான
ஜீன் நிக்கொட்டி வில்லமெயின்
கௌரவிக்கப்பட ..வைத்தபெயர்!
1. புகை பிடிக்க காரணமாக
புகையிலை எனப்பட்டது!
2. புகையிலையை உலர வைத்து/
பொடியாக்கி/துகள்களாக்கி/
இலையில் வைத்து சுருட்ட
சுருட்டு எனப் பெயரானது!
புகையிலை தென் அமெரிக்கா...
ஸ்பானிஷ்....ஐரோப்பா....பிற
நாடு பரவல் என பயணம் கண்டது!
புகையிலை பயன்பாடு
1.கி.மு.1400 ல்
மெக்சிகோவில் சாகுபாடு!
2.வடகிழக்கு அமெரிக்கர்கள்....
தங்கள் கைப்பைகளில்
எடுத்துச் செல்லும் வணிகப்
பொருளாக/ சமுதாய சடங்கு
பொருளாக/வணிக ஒப்பந்தப்
பொருளாகப் பயன்படுத்தினர்!
3. ஐரோப்பியர்கள்....
கடவுளின் பரிசாக/ சமய
வழிபாட்டு பிரார்த்தனைப்
பொருளாக பயன்படுத்தினர்!
4. 1559 ல் ....ஸ்பெயின் நாட்டு
மன்னர் ஃபிலிப் II ஆணைப்படி
ஹொமாண்டெஸ்டிபான்கலோ
மேற்கந்திய நாடுகளுக்கு
விதைகள் கொண்டு வரப்பட்டு
பரப்பப்பட்டன!
5. 1700 ல்.... ஐரோப்பிய நாடுகள்
& அதன் காலனி நாடுகளுக்கு
புகைக்கவும்/மெல்லவும்/
மூக்குப்பொடியாகவும்
பயன்பட்டது!
6. 17 ஆம் நூற்றாண்டில்....
இந்தியாவிற்கு அறிமுகம்!
7. 18 ஆம் நூற்றாண்டில்...
கியூபா நாடு...கரிபியன்
தீவுகளில் முக்கிய பணப்
பயிராக திகழ்ந்தது!
8. 19 ஆம் நூற்றாண்டில்...
ஜேம்ஸ் பான்சோக் கண்டறிந்த
சாதனம்...புகையிலை
உற்பத்தி/வணிக வளர்ச்சியை
அதிகமாக்கியது!
9. 20 ஆம் நூற்றாண்டில்....
உடல் நலக் கேடு பற்றி
சொல்லும் வகையில்
அதிக பயன்பாடு கண்டது!
தற்கால பயன்பாடு
1.நிக்கோட்டியானா டொபாக்கம்
ஐக்கிய அமெரிக்காவில்
விளம்பரம்/சந்தைப்படுத்தலில்
ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது!
2. 2003 ல்....
168 நாடுகள் விழிப்புணர்வு
பரிந்துரைத்தலில்
கையெழுத்து போட்டுள்ளது!
3. பூச்சிகளின் நரம்பு நச்சாக/
நுகர்ந்தவுடன் இரத்த ஓட்டம்
மூளையை அடைந்து/10-20
நொடிகளில் மெய் மறக்கச்
செய்யும் புகையிலை....
ஜெனிவாவில்.....
குதிரை சாணத்தில் விதைகள்
கலந்து விதைக்கப்படுகிறது!
4. ஆண்டுக்கொரு முறை
சாகுபடி செய்யப்படும் பூண்டு
தாவரம்/பணப்பயிரான
புகையிலை.....
நன்கு விளைந்த இலைகள்
கிள்ளப்பட்டு/காற்றில்..தீயில்..
சூரிய ஒளியில்..நிழலில்...
வெப்பத்தில் ...ஏதாவது ஒரு
முறையில் பதனிடப்படுகிறது!
புகையிலை வகைகள்
1.நறுமணப் புகையிலை
வெர்ஜீனியில்/கென்டகியில்
விளைவிக்கப் படுகிறது!
சிகரெட்டிலும்/மெல்லுதல்
முறையிலும் பயன்படுகிறது!
2. லடாக்கிய புகையிலை
கிரியா நாட்டு துறைமுக
நகரம் லடாக்கி/சிப்ரஸ்
தீவுகளில் உற்பத்தியாகிறது!
இலை அறுவடை செய்து/
சூரிய ஒளியில் உலர்த்தி/
புகை மூலம் பதனீடாகிறது!
3. பொலிவிலிப் புகையிலை
1839 ல்...
வடக்கு கரோயினா மாலுமி
அபிசாஸ்லேடின் பணியாளர்
ஸ்டீபன் எதேச்சையாக
கண்டுபிடித்த/தீயில் உலர்த்தி/
வெளிறிய தங்க நிற
புகையிலையாக கிடைத்தது!
வடிவங்கள்
சமூகம் & சூழலியல்....
பெற்றோரின் உறுதி குறைபாடு/
அவர்களின் கல்வி அறிவின்மை
உயிரியலில்....
உடல் வளர்ச்சி குறைபாடு/
உள்ளுறுப்பு மாற்ற அனுசரிப்பு
உளவியலில்.....
மனச் சிதைவு/படபடப்பு
இத்தனை மாற்றங்களோடு...
பொருளாதார இழப்பு
ஆரோக்கிய இழப்பு
சூழலியல் இழப்பு...ஆகிய
இழப்புகளை தரும்
புகையிலை வடிவங்கள்...
1.சிகரெட்
2. பீடி
3. சுருட்டு
4. ஷிஷா
5. புகைகுழல்(உக்கா)
6. மெல்லும் புகையிலை
7. மூக்குப்பொடி
8. கிராம்பு சிகரெட்
9. மின் சிகரெட்.
பாதிப்பு விவரம்
1.உலக சுகாதார அமைப்பு
கூற்று படி...
1 வருடம்....5மில்லியன்
பாதிப்பு..இதில் 6 லட்சம்
புகை பிடிப்பவன் அருகில்
இருப்பவர்கள் பாதிப்பில்!
2.கடந்த 5 வருட முன்
கணக்கெடுப்பின் படி...
பிரிட்டனில்...1 வருடத்தில்..
45000 பேர் பாதிப்பு.
3.அமெரிக்காவில்....
1 வருடம்...12500 பேர்.
4. இந்தியாவில்...
1 வருடம்...9 லட்சம் பேர்.
தினம்...2465 பேர்.
2020 ல் 16 லட்சம் பேர்
புகை காரணி புற்றுநோயால்
இறப்பார்கள் என WHO
கணக்கெடுப்பு கூறுகிறது!
5. 10-14 வயது சிறுவர்கள்
25 லட்சம் பேர் புகை
பிடிப்பதாக புள்ளி விவரம்!
2016-2017 புள்ளி விவரம்...
10 நோயினை புகையிலை
பயன்படுத்துபவன்
பெறுகிறான்!
தாய்லாந்து
ஜப்பான்
தைவான்
மலேசியா....நாடுகளில்
18. வயது வரை புகையிலை
பயன்பாடு தடைவிதிக்கப்
பட்டுள்ளது!
எலிமருந்திலுள்ள ஆர்சனிக்,
தீக்குச்சியிலுள்ள கந்தகம்,
நச்சு வாயு கார்பன்
மோனாக்சைடு,
நச்சு பொருள் ஈயம்
இத்தனையும் கொண்ட
புகையிலை....
உயிர் கொல்லும் காரணியாக
முதலிடம் பெறுகிறது!
பொது இடங்களில் புகை
பிடிக்க தடை...
2016 ல் உச்ச நீதிமன்றம்
சட்டமாக வழங்கியுள்ளது!
1800-11-2350
உதவி எண்ணும்
அரசாங்கம் வழங்கியுள்ளது!
நெற்றி வியர்வை நிலத்தில்
உழைக்கும் பணமோ புகையில்!
உணர்வு மறந்து
உண்மை நிலை இழந்து
கனவுலகில் தள்ளிடும்...அந்த
உயிர் குடிக்கும் புகையிலை!
ஓடி ஆடி விளையாடும்
பள்ளிப் பருவமதில்
மூளையில் முடங்கி
விஷத்தை புகையாய்
தனக்கான சவக்குழியை
தானே வெட்டும்
சாதனை தருவதே புகையிலை!
மன சரிவு
மனநிலை மாற்றம்
மூச்சுகுழாய் அழற்சி
இதயநோயினுக்கு
உதயமாதல் வாய்ப்பு!
புற்றுநோய்க்கு
பூத்தூவி வரவேற்பு!
மனநிம்மதிக்கு புகை காண
மாரடைப்புக்கு நுழைவுசீட்டு!
ஒட்டு பீடி பழக்கம்
கட்டு பீடியாக மாற
தெரியாமல் ஆரம்பித்து
வழக்கமான பழக்கமாகி
வாழ்வு...விற்றவனுக்கு
சாவு....... புகைத்தவனுக்கானது!
இந்திய ஆண்களில்
அமெரிக்க இளம் பெண்களில்
புகை பிடித்தல் சதவிதம்
அதிகமாதல்...
தனிமனித ஒழுக்க சாத்வீகமா?
புகையிலை பயன்பாடு....
உச்சந்தலையிலிருந்து
உள்ளங்கால் வரை
வலி மிகுந்த மரணம் தரும்!
சுயசிந்தனை அழித்து
மரண முன்னணி
காரணவாதியாகும்!
நல்ல நட்புகள் விலகச் செய்து
தீய நட்புகள் தேடி கொடுக்கும்!
உயர்ந்த மனிதரின்
மதிப்பை குறைக்கும்!
உழைக்கும் மனிதனின்
ஊதியம் கரைக்கும்!
மெல்லுதல்
புகைத்தல்
இழுத்தல்
மூக்கில் உறிந்திழுத்தல்
அத்தனையையயும்
விட்டு விலகி....
உடல் நலம்
உயிர் வளம் கூட்டி...
புகையிலை பயன்படுத்தாத
உலகம் காண
புகையிலை
பயன்படுத்துபவரிடம்
விண்ணப்பம் வைப்போம்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை..632513
9940739728.
Comments
Post a Comment