அதிவிரைவு சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி ...


ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 
கோவை -மயிலாடுதுறை-கோவை இடையே இயக்கப்படும் ஜன்சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய் கிழமை தவிர மற்ற நாட்களில்  இயக்கப்படும்.



  • கோவையில் காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த  ரயில் மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும்.  

  • மறுமார்க்கத்தில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கோவை சென்றடையும் 

  • இதேபோல மதுரை-விழுப்புரம்-மதுரை அதி விரைவு சிறப்பு ரயிலானது, மதுரையில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு 12.05 மணிக்கு விழுப்புரம் வரும். 

  • பின்னர், மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 9.20 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

  • இதேபோன்று திருச்சி-நாகர்கோவில்-திருச்சி, கோவை-காட்பாடி-கோவை இடையேயும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

  • இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்குகிறது. 

  • ரயில்கள் புறப்படும், சேரும் மற்றும் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் குறைந்த பட்சம் 2 டிக்கெட் கவுன்டர்கள் செயல்படும் எனவும் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.