கற்கோயில் கண்ட நம் நாட்டில் ... பொற்கோயில் கொண்ட புதுயுகமே ஸ்ரீபுரமே...
ஞானகுரு ஸ்ரீ சக்தி அம்மா
கல்லிலே கண்ட கடவுளை
உன் சொல்லிலே காண வைத்து
கடவுளாய் அவதரித்து
கருணையால் தினம் தழைத்து
கற்கோயில் கண்ட நம் நாட்டில்
பொற்கோயில் கொண்ட
புதுயுகமே! ஸ்ரீபுரமே!!
கோயில்கள் கோடி இருக்க
மக்கள் நிதம் கூடி இருக்க
பலகோடி மக்களை தினம்
மலைக் கோடி வரவழைத்த
திருமலைக்கோடி தெய்வமே !
மருத்துவமனை கண்டு
மருத்துவர் துணைக் கொண்டு
மக்களின் நிலைக் கண்டு
மாற்றினாய் நின் அருள் கொண்டு
குறைப்பட்டு வருவோரை
கூப்பிட்டு குணமாக்கி
காப்பீட்டு தொகையும் தந்து
கனிவுடனே வழியனுப்பி
புத்துணர்வு அழித்திட்டாய்
புதுவாழ்வு தந்திட்டாய்
உள்ள அமைதியும்
உலக அமைதியும்
ஒரு சேர ஒரு கோடி
ஒங்காரங்கள் ஒன்று சேர்ந்து
ஓங்கு புகழ் தந்திட்டாய்
உலக புகழ் அடைந்திட்டாய்
நல்வாழ்வு தந்த கண்கண்ட கடவுளே!
காலமெல்லாம் உன் காலடியில்
கரம் கூப்பி தினம் துதிப்போம்
கவலையின்றி நாள் கழிப்போம்!
சமுதாயப் பணிக்கு
சக்தியே சாட்சி
சாட்சியே சக்தி !
ஓம் நமோ நாராயணி!
கவிஞர் கோ.சேகர் M.A,M.phil,B.Ed
வேலப்பாடி,
வேலூர்-1
cell:9345234897
Comments
Post a Comment