பிரதமர் மோடி ஊரடங்கு குறித்து அடுத்த ஆலோசனை.
வரும் 31ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்துள்ளார். இதில் ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்த முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை எட்டி வரும் நிலையில், மோடி -அமித்ஷா சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதாரம் பாதுகாப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment