நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் .போக்குவரத்து துறை விளக்கம் . தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு.
நல்லது சொல்வோம் 35. நாலடி பயில்வோர் நூறடி உயர்வோம்! ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி! இது ஒரு புகழ்பெற்ற பழமொழி! இன்றைய இளைய தலைமுறைக்கு இதன் அர்த்தம் புரிவது சிரமம் தான்! ஆலமரம் வேலமரக் குச்சிகளைக் கொண்டு பல் விளக்குவது இன்றும் கிராமத்தில் பலரின் பழக்கமாக இருக்கிறது! ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று அனுபவித்தவர்கள் சொல்லி வைத்தார்கள்! அதேபோல நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பது நாலடிகளை உடைய நாலடியாரும் இரண்டு அடிகளை உடைய திருக்குறளும் வாழ்க்கைக்கு உறுதி தருகிற உயர்ந்த இலக்கியங்கள் என்பதை சொல்லி வைத்தார்கள்! நாலடி நான்மணி நானாற்பது, ஐந்திணை, முப்பால் கடுகாம், கோவை பழமொழி, மாமூலம், இந்நிலையை காஞ்சியோடு ஏலாது என்பது கைந் நிலையும் ஆம் கீழ்கணக்கு என்பது பழைய பாடல்! இது சங்கம் மருவிய காலத்தில் வரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து சொல்லப்படுகிற பாடல்! சங்கப்பாடல்கள் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்கம் மருவிய காலம் கிபி மூன்றாம் நூற்றாண்டு இந்த 18 நூல்களில் மிக உயர்ந்த லட்சியங்களை வாழ்க்கைக்கு வேண்டிய உறுதிகளை சொல்லிக் ...
ஜவஹர்லால் நேரு நினைவு தினம் பண்டிட் நேரு பண்டிதர் நேரு மனிதருள் மாணிக்கம் சமாதானப் புறா....என்று இந்திய மக்களாலும் சாச்சா நேரு..என குழந்தைகளாலும் அழைக்கப் படும் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம்! 14.11.1889 ல் பிறந்த நேருஜி 27.05.1964 ல் தனது 75 வது வயதில் மண்ணுலகை விட்டு விண்ணுலகு சேர்ந்தார்! குழந்தைகள் மீது பாசம் கொண்டவர் என்பதால் அவரின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதி குழந்தைகள் தினமானது! சட்டக்கலை பயின்றதால் தேசியக்கலை தெரிந்து 17 வருடங்கள்(1945-1964) இந்தியாவின் பிரதமர் பதவி திறம்பட வகித்தவர்! பஞ்ச சீலக் கொள்கை அணிசேராக் கொள்கை உருவாக்கி..... அனைத்துலக அரசியலில் முக்கியத்துவம் வகித்தவர்! வாழ்க்கை வரலாறு 1.வழக்கறிஞர் பெரும் செல்வந்தர் மோதிலால் நேரு & கமலா காந்தியின் புத்திரனாக அலகாபாத், உத்திரப்பிரதேசத்தில் 14.11.1889. ல் ஜனனம் கண்டவர்! 2. காஷ்மீரப் பண்டிதர் எனும் பிராமண வகுப்பு சார்ந்த இவருக்கு பெற்றோர் அழகான சிவப்பு நகை எனும் பொருளில் ஜவஹர்லால்...
உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் வயதில் அனுபவத்தில் சொல்லில் செயலில் சிந்தனையில் நற்பண்பில் வாழ்க்கையில் என அனைத்திலும் பெரியவர்களே முதியவர்கள்! நரை திரை வழுக்கை நடுக்கம் சுருக்கம் தனிமை கூனல் தள்ளாமை அச்சங்கள் ஆகிய இவைகள் அத்தனையும் நிரம்பியதே முதுமை! குழந்தைகள் தெய்வத்திற்கு நிகரானவர்கள் என்பர்! முதியோரை அந்தக் குழந்தைகளுக்கு நிகராக சொல்வார்கள்! குழந்தைப்பருவம் போல முதுமைப்பருவமும் கொண்டாடப்பட வேண்டியது! பெரும்பாலான குடும்பங்களில் முதியவர்கள் வேண்டாதவர்/ எதற்கும் உதவாதவர்களாக ஓரம் கட்டப்படுதல்! இத்தகைய போக்குகள் மாற்றவென ஐக்கிய நாட்டு சபை 2002 ல்...நியூயார்க்கிலுள்ள தன் தலைமையகத்தில் முதல் கட்ட மாநாடு நடத்தப்பட்டது! முதியோர் உடல்/மன ரீதியிலான வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வறிக்கை கிடைக்க... முதியோர்களைப் பராமரிப்பவர்கள்/அரசாங்கம் ஒன்று கூடி முதியோர்க்கு நிகழும் கொடுமைகளை எதிர்க்க வேண்டுமென உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாளை 15.06.2006 ஆம் நாளில் அனுசரிக்க ஐ.நா.சபையும் அங்கீகரித்த தினமின்று! முதியோர் அவமதிப்பிலுள்ள துன்புறு...
Comments
Post a Comment