பஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் நிவாரணத் தொகை...
3மாவட்டங்களுக்கு பஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் நிவாரணத் தொகை.
வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கமுடிவு செய்யப்பட்டது.அதன்படி 3மாவட்டங்களுக்கும் ரூ.1.55 லட்சம் மற்றும் பிரதமர் நிவாரண
தொகைக்கும் சேர்த்து மொத்தம் ரூ.6.20 லட்சம்பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.1.55
லட்சம்நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில், கலெக்டர் சிவனருள், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணி,
நவீன்குமார், தில்லை மற்றும் விஜயகோவிந்தராஜன் உட்பட ஏராளமான பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)
Comments
Post a Comment