என்ன செய்ய...பாவி மக உலஞ்சு புட்டா ஆனா- பக்கு வமா வெளஞ்சு விட்டா -தா.கவிசெல்வி.

                                   நீர்த்திவலைகள்


 


நீர்த் திவலைகள்-


 


பளிச் சென்று


பட்டு பட்டாய்


சிதறின!


பக்கு வமாய்


சிலதும்


பட்டா சாய்


சிலதுமாக


சிட்டு   சிட்டாய்


உதறின!


பதுமை அவள்


பளிங்கு சருமத்தில்


பட்டுத் தெறிக்குமா?


இல்லை-


விட்டுத் தறிக்குமா?


நல்லது தானே


நனைந்தால் கசக்குமா?


 


என்ன செய்ய?


 


பாவி மக


உலஞ்சுபுட்டா


பாதையத்தான் 


தொலச்சுபுட்டா


 


பார்த்து பார்த்து 


நடக்கணும்-


மீதிப் பாதைய


பத விசமா


செதுக்கணும்


 


நீர்த்திவலைகள்


நல்லதாய்


தெறித்தாலும்


நலுங்கிடாம


நடக்கணும் -எனவே


 


தாமரை இலையா


இழச்சு கிட்டா!


தத்  ரூபமா தன்னை 


வெதச்சு புட்டா!


 


நீர்த்திவலைகள்-


 


முதலை குதித்து


முக்கியது போல-பல


மூளை உதிர்த்து


கக்கியத னால


 


முகர முடியா


துளி களாய்


முழுக்க முழுக்க


வலி களாய்


மூஞ்சில் தறிக்கும்


கலி களாய்


மூச்சு முட்டும்


ஒலி களாய்-முடிவில்,


நீர்த் திவலைகள்


நீர்த் தவளைகளாய்!


 


எத்தனையோ


தெரிஞ்சுகிட்டா!


எழுந்து நிற்க


துணிஞ்சு புட்டா!


 


இப்போ


எச்சில் துளிகளின்


நீர்த் திவலை களும்


எருக்கம் பூவின்


தேன் குவளை களாம்!


 


பாவி மக


உலஞ்சு புட்டா


பாதையைத் தான்


தொலைச்சுப்  புட்டா!


 


பார்த்து பார்த்து


நடக்கணும்


மீதிக் பாதைய


பத விசமா


செதுக்கணும்


 


நீர்த் திவலைகள்!


நல்லதாய்


தெறித்தாலும்


நலுங் கிடாம


நடக்கணும்!


அல்லதாய்


அரித்தாலும்


அலுங் கிடாம


கடக்கணும்!


 


தாமரை இலையா


இழச்சு கிட்டா!


தத் ரூபமா தன்னை


வெதச்சு புட்டா!


 


கணவன் எனும்


கவளத் தண்ணீர்


கண்ட படி


தெறிச்சுட் டாக்கா,


கண்ண கிக்கும்


நீர்த் திவலை


கம்பி யிட்ட


விடு தலை!


வீட்டுத்  தளை!


 


கலி காலக்


கரை சலில்?-


 


முயற்சித் தும்


முடியல


முக்குளித் தும்


முடி வில்ல


முணுகக் கூட


வழி யில்ல


முடிவில தனி


வழி யில!?


 


நிமிர்ந்த


நன்னடை


நேர் கொண்ட


பார்வை யில்


 


தாமரை  இலையா


இழச்சு கிட்டா!


தத் ரூபமா தன்னை


வெதச்சு புட்டா!


 


பாவி மக


உலஞ்சு புட்டா


ஆனா-


பக்கு வமா


வெளஞ்சு விட்டா!!!



 இவள்,              


 கவிதாயினி.  தா.கவிசெல்வி,


 பட்டதாரி ஆசிரியர்,


 M.A(eng&his).,B.A(Hindi).,


 B.ed.,M.phil(his).


ஊ.ஒ.ந.நி.பள்ளி,


 மருதவல்லிப்பாளையம்,


அணைக்கட்டு வட்டம்,


வேலூர் மாவட்டம்.


 


 


 


 


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.