ஆற்காடு அருகே மணல் கடத்திய 3 பேர் கைது...

ஆற்காடு அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


ஆற்காடு பாலாற்று பகுதியில் இருந்து மணல் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது ஆற்காட்டை அடுத்த பெருங்கால்மேடு பாலாற்று பகுதியில் இருந்து வந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது, மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.


இதனையடுத்து போலீசார் மணல் கடத்தி வந்த புதுப்பாடி பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சிவகாந்தன் (வயது 43), எசையனூர் பகுதியை சேர்ந்த துரைசாமி (24), தினகரன் (41) ஆகிய 3 பேரை கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர்.



ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.