வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் ஜூன் 1 முதல் புதிய வசதி.

ஜுன் 1 முதல் சத்துவாச்சாரியில் புதிய வசதி 



வேலூர் என்றாலே அனைவருடைய நினைவிற்கும் வருவது சி.எம்.சி மருத்துவமனை. அந்த அளவிற்கு வேலூர் மக்களோடு இணைந்துள்ளது சி.எம்.சி.  வேலூர் மக்களுக்காக சத்துவாச்சாரியில் ஜூன் மாதம் 1ம் தேதியிலிருந்து  சி.எம்.சியின் டையகனாஸ்டிக் மையம் தனது  வசதிகளை மேம்படுத்த உள்ளது.
இந்த மையம் தனிப்பட்ட சேவைகளை வழங்க உள்ளது. இந்த மையம் திறந்திருக்கும் முழு நேரமும் மருத்துவர்கள், சாதாரண சிகிச்சைகளுக்கும் தனி அறைகள், முழுவதும் செயல்படும் மருந்தகம், ஈசிஜி மற்றும் இரத்த பரிசோதனை வசதி என அனைத்தையும் கொண்ட 'ஷாலோம் குடும்ப சுகாதார மையம்' (SHALOM FAMILY MEDICINE & DAY CARE CENTRE) ஜூன் 1 முதல் செயல்படும்.
ஒரே குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பெரும்பாலான ஆரோக்கிய பிரச்னைகளை இந்த மையத்திலுள்ள குடும்ப மருத்துவ நிபுணர்கள் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை நோயாளிகளை பரிசோதிப்பார்கள். இரத்த பரிசோதனை சேகரிப்பு வசதி காலை 7 மணி முதல் 11 மணி வரை செயல்படும். மற்ற சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 3 வரை இயங்கும். விரைவில் இந்த சேவைகள் விரிவுபடுத்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சாதாரண ஆனால் அவசர நிலைமைகளை எதிர்கொள்ள ஒரு சிகிச்சை அறை, சாதாரண காயங்களை பராமரித்தல், மருந்து கட்டு, ஊசி மற்றும் IV திரவங்கள் ஏற்றும் வசதிகள் இங்கு இருக்கும். ஏற்கெனவே சி.எம்.சியில் உள்ள முந்தைய சிகிச்சை விவரங்கள் உட்பட அனைத்து மின்னனு மருத்துவ பதிவுகள் இங்குள்ள கம்யூட்டர் சிஸ்டத்தில் கிடைக்கும். இந்த மையத்தில் சேகரிக்கப்படும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சி.எம்.சியின் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
வேலூர் மக்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட சி.எம்.சியின் மூன்று கிளை மையங்களில் இதுவும் ஒன்றாகும். ஷெல் கண் மருத்துவமனை வளாகத்தில் குறைந்த செலவில் பயநீட்டும் (LOW COST EFFECTIVE CARE UNIT) பராமரிப்பு பிரிவு 1982 ஆம் ஆண்டில் நகரபகுதியில் வாழும் ஏழைகளுக்காக துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  ஷெல் மருத்துவமனைக்கு எதிரில் ஷாலோம் குடும்ப மருத்துவ மையம் 2014 ஆம் ஆண்டில் குடும்ப மருத்துவத் துறையால் தொடங்கப்பட்டது. இந்த மையத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.


டாக்டர். சுனில் ஆபிரகாம்.
துறை தலைவர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.