பிர­த­மர் மோடிக்கு புதிய நீதிக்­கட்சி பாராட்டு...

பாஜக அரசு சாதனை பிரதமர் மோடிக்கு புதிய நீதிக்கட்சி பாராட்டு!!!



பாஜக அரசின் சாதனைகளுக்காக *பிரதமர் மோடிக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் 
ஏ.சி.சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பாரத பிரதமராக இரண்டாவதுமுறையாக நரேந்திரமோடி பொறுப்பேற்று
ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார்.
இந்தியாவை உலகின் முன்னணி நாடாக்க மிகப்பெரும் திட்டங்களை தீட்டி அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்திவருகின்றார். "மேக் இன் இந்தியா"
திட்டத்தை அறிமுகம் செய்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகள். அண்டை நாட்டுடன் நட்புறவு போன்ற பல சாதனைகளை புரிந்து வருகின்றார்.உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா தொற்று வரும் முன்னரே தகுந்த நடவடிக்கை எடுத்து இந்தியாவை மிகப்பெரும் பாதிப்பில் இருந்து தடுத்து
வருகின்றார். கொரோனாவில் இருந்து இந்தியாவை பாதுகாப்புடன், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற  நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்து அந்நாட்டு மக்களையும் பாதுகாத்து பாராட்டு பெற்றுள்ளார். ஆட்சி பொறுப்பேற்று சாதனைகளை படைத்து வருகின்ற பிரதமர் நரேந்திரமோடி வரும் ஆண்டுகளில்
தொடர்ந்து சாதனைகள் படைக்க வேண்டும்உங்கள் தலைமையில் இந்தியாவல்லரசு ஆக வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.