Posts

Showing posts from May, 2020

உயர்ந்த மனிதரின் மதிப்பை குறைக்கும்...உழைக்கும் மனிதனின் ஊதியம் கரைக்கும் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் நிக்கோட்டின் கார்பன் மோனாக்சைடு வெடி உப்பு பிரஸ்லிக் அமிலம் பைக்கோலின் விரிடைன் மரிஜுவானா அக்ரோலின் மைதிலைமின் ஃபார்மிக் அமிலம்... இப்படி 4000 வேதிப் பொருட்கள் கொண்ட புகையிலையை...  ஒழிக்கும் தினமாக மே 31 ஐ உலக சுகாதார அமைப்பு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த...அனுசரித்து வருகிறது! உடல் எதிர்ப்பு சக்தி மறைதல், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, இதய செயலிழப்பு, தோள் சுருக்கம், எண்ணைய் பசை குறைவு, இளமையிலே முதுமை  தோற்றம் ஏற்படுதல், இருமல், வாய் நாற்றம், பற்களில் கறை, ரத்த சோகை, புற்றுநோய், மூக்கடைப்பு.....போன்ற அத்தனை நோய்களின் உபயதாரர்... புகையிலையே! புகைப்பது உடலுக்கு கேடு! 1947 லிருந்து புகையிலை எதிர்ப்பு தினமாக WHO அறிவித்தது. பெயர்க்காரணம் 1837 ல் முன்வைத்தது WHO புகையிலை எதிர்ப்பினை! போர்த்துகீசிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் மூலம் 16 ஆம் நூற்றாண்டில்  இந்திய வருகை தந்த புகையிலை... பிரான்ஸ் தூதுவரான ஜீன் நிக்கொட்டி வில்லமெயின் கௌரவிக்கப்பட ..வைத்தபெயர்! 1. புகை பிடிக்க காரணமாக       புகையிலை எனப்பட்டது! 2. புக...

சின்னம் பொருத்திய மல்டிகலரில் முககவசம்...

Image
வேலூர் காட்பாடி சேவூர் கிராமத்தில் அமைந்துள்ள மிராக்கல் ஸ்போர்ட்ஸ் முககவசம் தயாரித்து வருகிறார்கள். இதில் சின்னம் பொருத்திய மல்டிகலரில் பிரின்ட் செய்து ஆர்டரின் பெயரில் டெலிவரி செய்வதாக கடையின் உரிமையாளர் குமரவேல் கூறினார்.

SMART கார்டயை பயன்படுத்தி பால் இயந்திரம் ...

Image
வேலூர் காட்பாடி ஆக்ஸிலியம் கல்லூரி சாலையில் புதியதோர் அறிமுகபடுத்திஇருக்கும் பால் வாங்க தானியங்கி இயந்திரம் செயல்பட்டு வருகிறது.  இதில் அவர் கூறுவது யாதெனில் அங்கு உள்ள இயந்திரத்தில் இந்திய ருபாய் அல்லது ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி நுகர்வோர் அவர்களே பணம் அல்லது ஸ்மார்ட் கார்டு பொருத்தியவுடன் அவர்களுக்கு தேவையான அளவு கட்டளைககேற்றபடி பால் பிடித்துக்கொள்ளலாம். அவர்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும் என தெரிவித்தார் உரிமையாளர் செ.பாஸ்டியன். BKS இன் பசும் பால் விற்பனை எந்திரம். For more details 9751739111 .  

சூடா இருக்குற வண்டிங்க மேல சானிடைஸரை தெளிச்சா என்ன ஆகும்...

Image
பாதுகாப்பு முக்கியம் தான். அதுக்காக சூடா இருக்குற வண்டிங்க மேல சானிடைஸரை தெளிச்சா என்ன ஆகும்?? நல்ல வேள, வண்டி ஓட்டுனவரு தப்பிச்சுட்டாரு ...

திருப்பத்தூர் மாவட்டம் நீர் தேக்கத் தொட்டி அருகே சிறுவன் விழுந்து பலி...

Image
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல் சாலை காவாகரை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் 7 வயது மகன் ஹரிஷ் வாரச் சந்தை பகுதியில் நகராட்சி குடிநீர் மேல் நீர் தேக்கத் தொட்டி அருகே  குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ‌தவறி விழுந்து பலி. சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை . ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

வேலூர் சி.எம்.சியின் ஷாலோம் குடும்ப மருத்துவ மையம்.

Image
ஷாலோம் குடும்ப மருத்துவ மையம், சத்துவாச்சாரி. நாளை ஜுன் 1 ஆம் தேதி முதல் இயங்கும்.  

சாலையோரம் இருப்பவர்களுக்கு அறுசுவை உணவு வேலூர் டீம் தினேஷ் சரவணன்.

Image
வேலூரில் சாலையோரம் இருப்பவர்கள் அரசு சார்பில் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 68வது நாளாக இன்று காலை உணவாக இட்லியும், மதிய உணவாக சுவையான  தயிர் சாதம், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், கேசரி பரிமாறப்பட்டது. இதோடு நல்ல நிலையில் இருக்கும் துணிகளை மட்டும் சேகரித்து பின்பு துவைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பஸ் உரிமையாளர் சங்­கம் சார்பில் நிவாரணத் தொகை...

Image
3மாவட்டங்களுக்கு பஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் நிவாரணத் தொகை. வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கமுடிவு செய்யப்பட்டது. அதன்படி 3மாவட்டங்க ளுக்கும் ரூ.1.55 லட்சம் மற்றும் பிரதமர் நிவாரண தொகைக்கும் சேர்த்து மொத்தம் ரூ.6.20 லட்சம்பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.1.55 லட்சம்நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில், கலெக்டர் சிவனருள், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணி, நவீன்குமார், தில்லை மற்றும் விஜயகோவிந்தராஜன் உட்பட ஏராளமான பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

பிர­த­மர் மோடிக்கு புதிய நீதிக்­கட்சி பாராட்டு...

Image
பாஜக அரசு சாதனை பிரதமர் மோடிக்கு புதிய நீதிக்கட்சி பாராட்டு!!! பாஜக அரசின் சாதனைகளுக்காக *பிரதமர் மோடிக்கு புதிய நீதிக்கட்சி தலைவர்  ஏ.சி.சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரத பிரதமராக இரண்டாவதுமுறையாக நரேந்திரமோடி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார். இந்தியாவை உலகின் முன்னணி நாடாக்க மிகப்பெரும் திட்டங்களை தீட்டி அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்திவருகின்றார்.  "மேக் இன் இந்தியா" திட்டத்தை அறிமுகம் செய்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகள். அண்டை நாட்டுடன் நட்புறவு போன்ற பல சாதனைகளை புரிந்து வருகின்றார். உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா தொற்று வரும் முன்னரே தகுந்த நடவடிக்கை எடுத்து இந்தியாவை மிகப்பெரும் பாதிப்பில் இருந்து தடுத்து வருகின்றார். கொரோனா வில் இருந்து இந்தியாவை பாதுகாப்புடன், அமெ ரிக்கா, பிரான்ஸ் போன்ற  நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்து அந்நாட்டு மக்களையும் பாதுகாத்து பாராட்டு பெற்றுள்ளார். ஆட்சி பொறுப்பேற்று சாதனைகளை படைத்து...

முககவசம் அணியாமல் சிகிச்சை மருத்துவமனையை பூட்டி சீல்...

முககவசம் அணியாமல் டாக்டர் சிகிச்சை தனியார் மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டது!!! ரூ.2லட்சம் காலாவதியான மருந்துகள் பறிமுதல். ஆற்காடு அடுத்த திமிரி அருகே சமூக இடைவெ ளியை கடைபிடிக்காமல் முககவசம் அணியாமல் டாக்டர் சிகிச்சை அளித்ததால் தனியார் மருத்துவனையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டு உள்ளது மேலும் தனியார் மருத்துவமனைகள் இயங்குவதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமிரி பகுதியில் இயங்கிவரும் ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முககவசம் அணியாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மாவட்ட தொடர்பு அலுவலர் டாக்டர் கீர்த்தி தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் சுகாதார ஆய்வாளர் பிரபு வருவாய் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் காண்டீபன் ஆகி...

தடையை மீறி பூஜை செய்த அர்ச்­ச­கருக்கு நோட்டீஸ்...

வேலூர் கோவிலில் தடையை மீறி பூஜை செய்த அர்ச்சகருக்கு நோட்டீஸ்!!! வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் செல்லியம்மன் கோவில் அமைந் துள்ளது. இந்த அம்மனை தோட்டப்பாளையம் பகுதிமக்கள்கிராம தேவதையாக வணங்கி வந்தனர். தற்போது இக்கோவில் இந்து அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் செயல் அலுவலராக வஜ்ரவேல் இருந்துவருகிறார். அர்ச்சகர்களாக நடரா ஜன் மற்றும் சதீஷ் ஆகி யோர் இருந்து வருகின்றனர்.  இந்நிலையில் ஊரடங்கால் கோவில் பூட்டப்பட்டிருக்கும் நேரத்தில் தடையை மீறி நடராஜன் இந்து முன்னணியினர் வசதிக்காக கோவிலுக்குள் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து இதற்கு விளக்கம் அளிக்குமாறு நடராஜனுக்கு வஜ்ரவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.9150223444

வேலூ­ரில் இருந்து நாளை முதல் அரசு பஸ் இயக்­கம் ...ஏற்­பா­டுகள் தீவிரம்.

Image
வேலூரில் இருந்து நாளைமுதல் அரசுபஸ்கள் இயங்க உள்ளன.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகநடைபெற்று வருகின்றன.நாளை முதல் தமிழகத்தில்50 சதவீத பேருந்துகள் இயங்கலாம் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளதையடுத்து வேலூரில் அரசுபஸ்கள் இயங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தர்மபுரி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு உண்டான 1,200க்கும் மேற்பட்ட அரசுபஸ்கள் வேலூரிலிருந்து இயங்குகின்றன.இதில் 50 சதவீத பேருந்துகள் நாளை முதல் ஓசூர்,காஞ்சிபுரம் எல்லையிலுள்ள ஓச்சேரி போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளன. திருப்பதி மற்றும் பெங்களூர் போன்ற வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்பட வில்லை.60 சதவீதபயணிகள் மட்டுமே ஏற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதையடுத்து ஒரு பேருந்துக்கு 30 பயணிகள் வரை மட்டுமே அனுமதி வழங்கப் பட உள்ளது.வேலூரில் இருந்து நாளை முதல் அரசு பஸ் இயக்கம் !ஏற்பாடுகள் தீவிரம்... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்...

Image
இறையருளால் 10 ஆண்டு நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி இணையவழி ஆர்ப்பாட்டம் வேலூர் கிழக்கு மாவட்டம் ஆற்காடு நகர அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார். (9150223444)

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெரும் முயற்சியில் பிரித்தாஸ்ரீ...

Image
பெயர்: வெ.மு. பிரித்தாஸ்ரீ பள்ளியிலும் கல்லூரியிலும் பல சான்றிதழ்கள் பெற்றுள்ளார். மாநில அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஓவிய வகுப்பிலும் கல்லூரியிலும் மாணவிகளுக்கு ஓவிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிறந்த முறையில் கற்றுக்கொடுக்கிறார். மேலும் தனி நபர் படைப்பு ஓவிய கண்காட்சிக்கும் இந்திய சாதனை புத்தகத்திலும் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெயர்: வெ.மு. பிரித்தாஸ்ரீ     படிப்பு: மூன்றாம் ஆண்டு  வணிகவியல்.                             கல்லூரி: ஆக்ஸ்லியம் கல்லூரி(தன்னாட்சி).   இடம்: அரியூர்.

அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை...

Image
தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது  "ஜூன் 5ஆம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

பழைய கட்டணமே வசூலிக்கப்படும்...

Image
நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் .போக்குவரத்து துறை விளக்கம் . தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு.

நல்லது சொல்வோம் : பிச்சை எடுத்தாவது கல்வி கற்பது நல்லது என்கிறார் - கவிஞர்.ச லக்குமிபதி.

Image
நல்லது சொல்வோம்- 10            செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்!நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை! நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை என்று கவியரசர் பாடி வைத்தார்! அந்தப் பாடல்தான் இந்த கொரானா காலத்தில் சற்று ஆறுதலாய் இருக்கிறது! வைரஸை ஏற்றுமதி செய்தவன் யாரோ அவன் நிம்மதியாய் இருக்கின்றான்! இறக்குமதி செய்து கொண்டவன் எல்லாம் திண்டாடி தவித்திருக்கிறான்! இது விதியின் சதியோ? மதியால் வெல்ல முடியாமல் எல்லா வளர்ந்த நாடுகளுமே மண்டை காய்ந்து கிடக்கின்றன! பக்கத்து மாநிலத்தில் இருக்கும் மகனை பார்க்கவோ முடியவில்லை! பேரன் பேத்திகளை பார்க்க முடியாத தாத்தாக்கள்! மகளை மருமகனை பார்க்கமுடியாமல் பெரியவர்கள்! மருந்து வாங்க கூட தவிக்கின்ற குடும்பங்கள்! தொலைந்து விட்ட வெற்றிக்கான முகவரிகள்! மருந்து வாங்க கூட வசதி இல்லாத குடும்பங்கள்! ஆஸ்பத்திரி அவலங்கள்! எல்லை கோடுகளில் எச்சரிக்கைகள்! தள்ளிப்போகும் திருமணங்கள்! தடைப்பட்ட தேர்வுகள்! அப்பப்பா கொரானாவில்தான் எத்தனை கொடுமைகள்! நல்லது ஏதும் செய்ய முடியவில்லை! பண்டிகைகள் திருவிழாக்கள் ஏதுமில்லை! இதைத்த...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தந்தை இறைவனடி சேர்ந்தார்....

Image
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி அவர்களின், தந்தையார் . சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் தந்தையின் இழப்பு என்பது பேரிழப்பு... தந்தையை பிரிந்து வாடும் ஆட்சியர் திரு. கந்தசாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், திருவண்ணாமலை மாவட்டம்  பொதுமக்கள் சார்பில் அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.. அய்யாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அண்ணாமலையாரை பிரார்த்திப்போம்...பிராத்தனையுடன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..(9150224444)

ஷோரூம்கள் திறக்க அனுமதி...

Image
வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் திறக்க அனுமதி .குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

மாநிலத்துக்குள் இனி இ-பாஸ் தேவையில்லை.

Image
பயணங்களுக்கு தனியாக அனுமதி மற்றும் இ-பாஸ் வாங்கும் முறைகளை கைவிட மாநில தலைமை செயலாளர்களுக்கு  மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். ஒரே மாநிலத்திற்குள் மற்றும் மாநிலங்கள் இடையே பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் வலியுறுத்தி உள்ளார். கட்டுப்பாடுகள் தேவை என முடிவெடுத்தால், அது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக, உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துகளை பெற்று அனுப்ப வேண்டும் என்றும் அஜய் பல்லா கேட்டுக் கொண்டுள்ளார். 

என் நேரம்...கேள்வி மட்டும் இவளிடம்...அவளுக்கு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
உலக முதிர் கன்னிகள்தினம்       கண்ணைச் சுற்றி கருவளையம் கவலை மண்டிய முக வடிவம் தொங்கிப் போன தோள்கள் தோய்ந்து போன நடை தனிமை தாங்கிய இதயம் தளர்ந்து ஒடுங்கிய செயல்கள்  இத்தனையும் அடக்கமான பெண்ணின் சமூகப் பெயர் 30 வயதான முதிர்கன்னி! பெரும்பாலும்.. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு வசதியின்மை காரணமாக வாய்ப்பிழந்த இவர்களை வாழ்க்கையை தவற விட்டவர்களாக முத்திரை குத்தி 29.05.2014 முதல் ஐக்கியநாட்டுசபை மே மாத 30 ஆம் திகதியை சர்வதேச முதிர்கன்னி தினமென கொண்டாடுகிறது! மிஸோகமிஸ்ட் (திருமண வெறுப்பாளர்) அன்மாரீட்(திருமணமாகாதவர்) இந்த வார்த்தைகள் அவளாகவே சொல்லி நழுவும் சால்ஜாப்பு வார்த்தைகள்! பூப்படைந்து நாளாச்சு! தோழிகளெல்லாம் துணை கொண்டு போயாச்சு! இவளின் கலர் கனவெல்லாம் 30 வயசு கடந்ததால் கறுப்பு நிறமாச்சு! அச்சம்/மடம்/நாணம்/பயிர்ப்பு அத்தனையும் கொண்ட மங்கை தானிவள்! அரை கிராம் தாலியுள்ள மஞ்சள் கயிறு கழுத்திலும் 500ரூ. மெட்டி கால்விரலிலும் இல்லாத காரணத்தால் சமூக பல்கலைகழகம் பட்டம் கண்ட  முதிர்கன்னியானவள்! வீதிக்கு வருவதெல்லாம் விற்பனை ஆகிறது! இவள் விதிக்கு மட்டும் இவள் மீது கொள்ளை ஆசை வீ...

வேலூர் மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்...

Image
வேலூர் மாவட்டம் முழுவதுவும் 31-05-2020 அன்று காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை மின் நிறுத்தம் !

ஆற்காடு அருகே மணல் கடத்திய 3 பேர் கைது...

ஆற்காடு அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஆற்காடு பாலாற்று பகுதியில் இருந்து மணல் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காட்டை அடுத்த பெருங்கால்மேடு பாலாற்று பகுதியில் இருந்து வந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது, மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மணல் கடத்தி வந்த புதுப்பாடி பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சிவகாந்தன் (வயது 43), எசையனூர் பகுதியை சேர்ந்த துரைசாமி (24), தினகரன் (41) ஆகிய 3 பேரை கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

அரசு செயல்பட வேண்டிய நேரமிது...

கழகத் தலைவர் தளபதி அவர்களால் உருவான 'ஒன்றிணைவோம் வா' உதவி எண்னை  தொடர்புகொண்ட இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு  கழக நிர்வாகிகள் தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகின்றனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இணைய வழியாக பெறப்பட்ட 7294 பிரதான கோரிக்கைகளை மனுக்களாக தயாரித்து அதனை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்.திவ்யதர்ஷினி,I.A.S.,அவர்களை இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சாதனை செம்மல் ஆர்காந்தி எம்எல்ஏ அவர்கள் முன்னாள் மத்தியமைச்சர் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன்.MP அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் JL.ஈஸ்வரப்பன் ஆகியோருடன் நேரில் சந்தித்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்திய போது."மக்கள்பணியில்திமுக" ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

மூத்த குடிமக்­க­ளுக்­காக சிறப்பு மருத்­து­வ­மு­காம் அமைச்­சர் வீர­மணி  தொடங்கி ­வைத்­தார்.

Image
"ஜோலார்பேட்டை அருகே மூத்த குடிமக்களுக்காக சிறப்பு மருத்துவமுகாம்!!! "அமைச்சர் வீரமணி  தொடங்கி வைத்தார்!! ஜோலார்பேட்டை  அருகே மூத்த குடிமக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதை அமைச்சர் வீரமணி தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட் டது.எனினும் மருந்து கடைகளுக்கும், மருத்துவ மனைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் நோய் பரவி விடும் என அச்சத்தில் பெரும்பாலானா தனியார் மருத்துவர்கள் தங்களது மருத்துவமனைகளை மூடி விட்டனர். இதனால் பொதுமக்களுக்கு மற்ற நோய்களுக்கு கூட சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. இதைகருத்தில் கொண்டு ஜோலார்பேட்டை அருகே கோடியூரில் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிம க்களுக்காக சிறப்பு மருத்துவமுகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த முகாம் இன்று நடந்தது. அதை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கிவைத்தார். ஆட்சியர் சிவனருள், சுகாதாரத்துறை துணைஇயக்குனர் சுரேஷ், மருத்துவர் சுமதி, ஆனந்தகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இந்த முகா மின் மூலம் 300–க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வீ...

தி.மு.க.வினர் மனுக்களை ஆட்சியர் இடம் வழங்கிய காட்சி.

Image
இராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க.வினர் "ஒன்றிணைவோம் வா"திட்டத்தின் கீழ் பெற்ற 7294 மனுக்களை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் எம்.பி. ஜெகத்ரட்சகன், மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கிய காட்சி.

ராணிப்­பேட்டை : கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

Image
"ராணிப்பேட்டையில் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்! ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி நபார்டு வங்கியுடன் இணைந்து நடப்பு நிதியாண்டிற்கான 2020– 21ஆம் ரூ 4127.21 கோடி கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினி வெளியிட  அதனை இந்தியன் வங்கி மண்டல மேலாளர் மாயா, முன்னோடி வங்கி மேலாளர் விஜயராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டர்கள். இக்கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூபாய் 2386.59 கோடியும், பயிர் கடனாக ரூ.2022.49 கோடியும் மற்றும் மாவட்டத்தின் பிறமுன்னுரிமை துறைக்கு ரூபாய் 1068.60 கோடியும் ஒதுக்கப்பட்டுள் ளதாகவும் இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி மாவட்ட வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் இந்தி யன் வங்கி முதன்மை மேலாளர் ராமகிருஷ்ண குமார், முதுநிலை மேலாளர் குமார், வேலூர் மாவட்ட முன்னோடி மேலாளர் தியோடசியஸ், எஸ்பிஐ முதன்மைமேலாளர் மாமல்லன் ஆகியோர் பங்கேற்றனர். ராணிப்பேட்டையில் கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் வெளியிட...

ஸ்ரீ நாராயணி பீடத்தில் சுமார் 1000 பேருக்கு உணவு...

Image
ஓம் நமோ நாராயணி! ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம்: ஸ்ரீ சக்தி அம்மாவின் அன்னதானம் - தேவைப்படுபவர்களுக்கு உணவுப் பொதிகளை விநியோகித்தல். (30-05-2020-சனிக்கிழமை) எங்கள் அன்புக்குரிய ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக ஆசீர்வாதங்களுடன், ஊரடங்கு காலம் 2020 மே 31 வரை நம் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டு, ஸ்ரீ நாராயணி பீடத்தில் சுமார் 1000 உணவுப் பொட்டலங்கள் (மதிய உணவு - தினமும்) திருமலைகோடியில் வசிக்கும் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டன சுற்றியுள்ள பகுதிகளில்  பிரியமான அம்மாவின் பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் பயனாளிகளுக்கு உணவுப் பொதிகளை விநியோகித்தனர்.

ஆண்டவா இது எப்போது தான் முடியும்... எங்களுக்கு எப்போது தான் வாழ்வு விடியும் - கவிஞர் ச.லக்குமிபதி.

Image
நல்லதே சொல்வோம்- 9     சேர வாரும் ஜகத்தீரே!           லாக் டவுன் முடியுமா! தொடருமா! இது நடக்குமா! இப்படி இருக்குமா! என இறுக்கமா ஊரெங்கும் விவாதங்கள் நடந்தபடி தான் இருக்கின்றன! அறுபத்தேழாம்  நாளில் நாம் கோவிட் யுத்தகளத்தில் இருக்கின்றோம்! ஒருபக்கம் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு என்கிறார்கள் ! மறுபக்கம் ஊரெல்லாம் வழக்கம்போல சுறுசுறுப்பாய் மாறிவிட்டது போல் மக்கள் நடமாடி வருகிறார்கள்! லாக் டவுன் இன்னும் இரண்டு மாதம் இருந்தாலும் இருக்கும் என பீதியை சிலர் கிளப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்! ஆண்டவா இது எப்போது தான் முடியும் எங்களுக்கு எப்போது தான் வாழ்வு விடியும்! அக்கம்பக்கம் மாவட்டம் நுழையவே முடியவில்லை! சொந்த பந்தம் விசாரிக்கவோ வாய்ப்பே இல்லை ! நல்லது செய்ய நேரமோ அல்லது நாளோ இந்த கால நேரத்தில் அமையவே இல்லை! வெளியே சென்று தொழில்கள் தொடங்கி சம்பாதிக்க வாய்ப்பும் இல்லை! ஆண்டவா எப்போது சூழ்நிலை எல்லாம் சரியாகி நாங்கள் சரியாக சிரிப்பது! எங்கும் ஒரு வித தேக்கம்! வீட்டு பொருளாதார வீக்கம்! கடன் தொல்லைகளால் தாக்கம்! ஆண்டவா ஆள்பவன் நீ அல்லவா! போதும் ...

கற்கோயில் கண்ட நம் நாட்டில் ... பொற்கோயில் கொண்ட புதுயுகமே ஸ்ரீபுரமே...

Image
 ஞானகுரு ஸ்ரீ சக்தி அம்மா கல்லிலே கண்ட கடவுளை  உன் சொல்லிலே காண வைத்து கடவுளாய் அவதரித்து கருணையால் தினம் தழைத்து கற்கோயில் கண்ட நம் நாட்டில் பொற்கோயில் கொண்ட புதுயுகமே! ஸ்ரீபுரமே!!   கோயில்கள் கோடி இருக்க மக்கள் நிதம் கூடி இருக்க பலகோடி மக்களை தினம் மலைக் கோடி வரவழைத்த திருமலைக்கோடி தெய்வமே !   மருத்துவமனை கண்டு மருத்துவர் துணைக் கொண்டு மக்களின் நிலைக் கண்டு மாற்றினாய் நின் அருள் கொண்டு    குறைப்பட்டு வருவோரை கூப்பிட்டு குணமாக்கி காப்பீட்டு தொகையும் தந்து கனிவுடனே வழியனுப்பி புத்துணர்வு அழித்திட்டாய் புதுவாழ்வு தந்திட்டாய்    உள்ள அமைதியும் உலக அமைதியும் ஒரு சேர ஒரு கோடி ஒங்காரங்கள் ஒன்று சேர்ந்து ஓங்கு புகழ் தந்திட்டாய் உலக புகழ் அடைந்திட்டாய்    நல்வாழ்வு தந்த கண்கண்ட  கடவுளே! காலமெல்லாம் உன் காலடியில் கரம் கூப்பி தினம் துதிப்போம் கவலையின்றி நாள் கழிப்போம்!   சமுதாயப் பணிக்கு சக்தியே சாட்சி சாட்சியே சக்தி ! ஓம் நமோ நாராயணி!               ...