வெங்கடேஸ்வரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரத்த தானம் முகாம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில்  நடைபெற்ற ரத்த தான முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம். இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.




அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ரோட்டரி சங்கத்தினர் இரத்த தானம்.

வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ரத்ததான முகாம் பாரத சாரண சாரணியர் ஜூனியர் ரெட் கிராஸ் நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 100 பேர் இன்று வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரத்த தானம் செய்தனர்.
*இந்த நிகழ்வினை வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் அவர்கள் துவக்கி வைத்தார்.*  
 *மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.*  
மாவட்ட சாரண இயக்கத்தின் அமைப்பு ஆணையர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் பி குமார், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், சாரண இயக்க மாவட்டச் செயலாளர் ஏ.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இரத்த தான பிரிவு அலுவலர் டாக்டர் ஜெ.சிவராமன், இரத்த வங்கியின் துறைத்தலைவர் டாக்டர் பி.பாஸ்கரன், ஆற்றுபடுத்துநர் எஸ்.நந்தகுமார், ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.   


மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ஸ்ரீதர்,  தேர்வு ஆளுநர் பாண்டியன் ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், காட்பாடி ரெட்கிராஸ் பொருளாளர் வி.பழனி,  செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தகுமார் வி.காந்திலால்பட்டேல் ஆர்.லட்சுமிநாராயணன் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜி.டி.பாபு, முதுகலை ஆசிரியர் எஸ்.பாஸ்கரன் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.சந்திரசேகரன் ஓவிய ஆசிரியர் ஜே.ஜான்பாபு இடைநிலை ஆசிரியர் அ.சீனிவாசன் எ.ஜோசப் அன்னையா, ஆனந்தகுமார், ஆர்.லட்சமிநாராயணன் உள்பட அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ரெட்கிராஸ் சங்க உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் ரத்ததானம் செய்ய செய்தனர்



 


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.