முக்கிய செய்தி:வீட்டில் இருப்பவர் கடைபிடிக்க வேண்டியவை..ஆயுஷ் அமைச்சகம்...

கொரோனா பரவி வரும் நிலையில் மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.



எப்போதும் வெந்நீரையே பருக வேண்டும்.


 நாள்தோறும் யோகாசனம், பிராணயாமம், தியானம் ஆகியவற்றை 30 நிமிடங்கள் செய்யலாம்.


 மஞ்சள், சீரகம், கொத்துமல்லி, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 


நாள்தோறும் காலையில் சையவன்பிராஷ் லேகியம் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும்.


துளசி, இலவங்கம், கருமிளகு, சுக்கு, உலர் திராட்சை ஆகியவை கலந்த மூலிகைத் தேநீரை மண்டைவெல்லம் சேர்த்து நாள்தோறும் ஒருமுறையோ இருமுறையோ பருக வேண்டும். 


இதில் எலுமிச்சம்பழச் சாறும் சேர்த்துக்கொள்ளலாம்.


 மஞ்சள் தூள் கலந்த பாலை நாள்தோறும் ஒருமுறையோ இருமுறையோ பருகலாம்.


காலையும் மாலையும் மூக்குத் துளைகளில் தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றைச் சில துளிகள் விடலாம். 


ஒரு கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் வைத்துக்கொண்டு 3 நிமிடங்கள் கழித்துக் கொப்பளிக்க வேண்டும். 


இதை ஒருநாளைக்கு ஒருமுறையோ இருமுறையோ செய்யலாம்.


வறட்டு இருமல், தொண்டைவலி இருந்தால் புதினா தழைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம்.


 மண்டைவெல்லம், கருப்பட்டி, தேன் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் கிராம்புத் தூள் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை உட்கொண்டால் இருமல், தொண்டைவலி நீங்கும். சமூக நலனில் இந்த பதிவு..வேலூர் நண்பன் இதழ் 


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.