முடி திருத்தும் தொழிலாளர் மகன் மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் மகன்கள் தன் தந்தை தாங்கள் பள்ளிக்கு செல்லும்போது கைசெலவுக்கு தினமும் தரும் 5 ரூபாயை உண்டியலில் சேர்த்து வைத்திருந்தனர்.
கொரோனா நிவாரண நிதிக்கு பல மாணவர்கள் பணம் வழங்கும் செய்தியை கேள்விபட்டு தற்போது உண்டியலில் சேர்ந்துள்ள மொத்த பணம் ரூ. 4 ஆயிரத்து 727--ஐ கொரோனா நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.
Comments
Post a Comment