பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
ஆயுஷ்மான் பாரத்
(பிரதமரின் மருத்துவ
காப்பீட்டு திட்டம்)
வண்டிக்கு அச்சாணி !
கட்டிடத்திற்கு அஸ்திவாரம் !
கப்பலுக்கு கலங்கரை விளக்கம்!
மனிதனின் நிம்மதி/
மகிழ்ச்சிக்கு உடல்நலனே!
உடல்நலனிற்கு உதவியே..
பிரதமரின் மருத்துவ
காப்பீட்டு திட்டம்!
இன்றைய தலைமுறையின்
உயிர் காக்கும் படலங்கள்..
*உடல் இளைக்க ..டயட்.
*உடல் உறுதிக்கு...எக்சர்சைஸ்.
*மாதமிரு முறை....சுகர்
& BPஆய்வு.
* 6 மாதமொரு முறை...முழு
உடல் பரிசோதனை.
மனிதன் பின்னால் ஓடும்
திட்டங்களோடு மருத்துவமிருக்க,
கண் நோயிற்கு
மருத்தவமனை போக,
கணுக்காலில் இருந்து
கழுத்து வரை ,
கண்டுபிடிக்கப் பட்ட
எல்லா இயந்திர சோதனையும்
கணக்கில்லாமல்
கையிருப்பைக் கரைக்கும்
மருத்துவரும்இருக்க
அஞ்சாதே என காட்டும்
அபயக் கரமே...
ஆயுஷ்மான் பாரத்!
25.11.2019 ..ல்
பாரதப் பிரதமர் தொடங்கி
இந்தியா முழுவதும்
மக்கள் தேக நலம்
காக்கும் தேச நலனாய்
உலா வருகிறது !
இத்திட்டம் அமல்படுத்த
31 மாநிலங்கள் & யூனியன்
பிரதேசங்கள் புரிந்துணர்வு
கையெழுத்திட்டுள்ளது!
நாடு முழுவதும் உள்ள
8,03...கிராம மக்களும்
2,33கோடி ...நகர மக்களும்
பயனடைகின்றனர்!
இத்திட்டம் மூலம் பயனடைவு
நிதியுதவி...3077 கோடி
குஜராத் மாநிலம்...641கோடி
பெற்று முதலிடத்திலும்,
தமிழ்நாடு...399கோடி பெற்று
இரண்டாவது இடத்திலும்!
நிதியுதவி பெற்ற நிலையில்
பயனடைந்தோர்....211075 நபர்கள்!
#தமிழகத்தில் 2லட்சம் நிதி
தந்த நிலை...பிரதமரின்
திட்டம் கண்ட நிலையில்
5 லட்சமாக்கி ...பயனடைந்தோர்
ஏழு ஆண்டுகளில்...121843 நபர்கள்!
மத்திய அரசு..60%..
மாநில அரசு...40%
நிதியுதவி பங்கீடு காண்கிறது!
தீனதயாள் உபாத்தியாயர்
பிறந்த தினத்தில் துவங்கியது
மக்கள் நலம் விழையும் இத்திட்டம்!
உடல் என்பது இயந்திரமல்ல
நாம் சொன்னதைக் கேட்க!
உடல் சொல்வதைக் கேட்க
நிம்மதியோடு வாழ்வமையும்!
பாரதி சொன்ன...
கவலையற்ற விழி மலர
உள்ளத்தில் உற்சாகம்
உடலில் பொலிவு
மனதில் வலிமை
வாழ்க்கையே வசந்தமாகும்!
அவசர உலகம்
வேகமான பயணத்தில்
விவேகம் மறக்க
நோய்கள் நம்மால்
உருவாக்கப் பட்டதே
உருவாகி பல பெயரில்!
நோய் காண
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
விவரமான விஷயங்களாக்கி
மனிதனுக்கு முன் வைப்பன.....
1.நாட்டின் கிராமப்புறம் சார்ந்த
8.03 கோடி குடும்பங்கள்
நகர்ப்புறம் சார்ந்த
2.33கோடி குடும்பத்தினர்
பயன் காண்பர்.
2.நாடு முழுவதும் உள்ள
அனைத்து 2 ஆம் நிலை
தாலுகா மருத்துவமனை,
3 ஆம் நிலை மருத்துவமனை
மூலம் சிகிச்சை பெறலாம்!
3.சிகிச்சை பெற குடும்ப
உறுப்பினர்எண்ணிக்கை/
வயது/பாலினம்தடையில்லை.
4.ஆதார் அட்டை அவசியமில்லை
வாக்காளர் அடையாள அட்டை/
ரேஷன் அட்டை...ஏதாவது
ஒன்றில் பயன் பெறலாம்!
5.மருத்துவமனையில் ஆகும்
செலவு மட்டுமல்ல/பிறகு
ஏற்படும் மருத்துவ செலவு
வரையறைக்குட்பட்ட
போக்குவரத்து செலவும்
இத்திட்டம் மூலம் பெறலாம்!
6.பயனாளிகளுக்கு பிரதமரிடம்
இருந்து தனிப்பட்ட கடிதம்/QR
Code உள்ள கார்டு தரப்படும்!
7.மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
உள்பட 1354 சிகிச்சைகளுக்கு
இத்திட்டம் மூலம் பலன்
காணலாம் !
8.தொலைபேசி எண்..14555
mera.pmjay.gov.in என்ற
இணையதளம் இத்திட்டத்துக்கு
தொடங்கப் பட்டுள்ளது!
9.அரசு பட்டியலாக
வெளியிட்டுள்ள தமிழக
அரசு/911 தனியார்
மருத்துவமனைகளில்
பயன் காணலாம்!
மருத்துவமனைகள்
நல்ல உடல்நலம்
நல்ல பயணம்...ராபர்ட் ஸ்கல்லர்
சொன்ன 5 மருத்துவர்கள்
காண மருத்துவம் தேவையில்லை!
*சூரிய வெளிச்சம்
*உடற்பயிற்சி
*சத்தான/அளவான உணவு
*ஓய்வு
* தன்னம்பிக்கை
உடல் ஒரு அதிசயம்
காலை...கண்மூடி தியானம்
நலம் தரும் !
நாளும்....நடையும்/ஓட்டமும்
நன்மை தரும் !
ஓய்வு.....மனம்/உடலுக்கு
அமைதி தரும் !
அளவாய் தூக்கம்/
அறுசுவை உணவு...
நோய் விரட்டும்!
நல்வாழ்க்கை நம் கையில் !
*சுகம் நழுவ
*நலம் தொலைய
*நோய் காண
ஆபத்பாந்தனாக
அனாதைகள் ரட்சகனாக
பொருளாதாரம் பின் தங்கிய
நடுத்தர வர்க்கத்து மக்கள்
செல்ல வேண்டிய...
மத்திய அரசு....60% ம்
மாநில அரசு ....40 % ம்
உதவி தரும் மருத்துவமனைகள்
25. 11.2019 முதல் 30.04.2020
வரை பட்டியலில் உள்ளவை.
19668 மருத்துவமனைகள்
சென்னை....அனைத்து
அரசு மருத்துவமனைகள்/
சில தனியார் மருத்துவமனைகள்.
வேலூர் மாவட்டத்தில்..(74)
அரசு மருத்துவமனைகள்
வாலாஜா/ஆற்காடு/திருப்பத்தூர்/
வாணியம்பாடி/அரக்கோணம்/
வேலூர்/சோளிங்கர்./நாட்றம்பள்ளி.
தனியார் மருத்துவமனைகள்
பாபா /அகர்வால்/அருண்/
உஷா /தினேஷ்/ஸ்ரீ நாராயணி/
CMC/இந்திரா/ஹிமாலயா/
சுந்தரம்/ குமரன்...இத்தனை
பயன் அடைய 74 மருத்துவ
மனைகள் தமிழக அரசு
பட்டியலில் உள்ளது!
காணும் சிகிச்சைகள்
ஒரு வேளை உண்பவன் யோகி
இரு வேளை உண்பவன் போகி
மூன்று வேளை உண்பவன் ரோகி
நான்கு வேளை உண்பவன் துரோகி
சமையல் சரியில்லேன்னா
ஒரு நாள் துன்பம்
அறுவடை சரியில்லேன்னா
நாலு மாத துன்பம்
படிப்பு சரியில்லேன்னா
ஒரு வருட துன்பம்
உடம்பு சரியில்லேன்னா
ஆயுசுக்கும் துன்பம்
காயமே இது பொய்யடா
காற்றடித்த பையடா...
சித்தர் அன்று சொன்னார்!
காயமே இது மெய்யடா
கண்ணும் கருத்தும் வையடா
பட்டுக்கோட்டை இன்று சொன்னார்!
உடம்பினுள் உருபொருள்
கண்டேன்! அதனால்
யானின்று ஓம்புகின்றேன்!
திருமூலர் அறிந்து பகன்றது!
அரை வயிறு உணவு
கால் வயிறு தண்ணீர்
கால் வயிறு காலி ...
வைக்க மருத்துவமனை நாடோம்!
சுவை பார்த்து சாப்பிட மறக்க
சுகர் பார்த்து சாப்பிட்டவர்களாக,
நெஞ்சு நிறைய பயம் ,
பாக்கெட்டு நிறைய மாத்திரை
உடலது வியாதி கூடமாகி,
நம்மோடு உறவாகும்
மருத்துவ காப்பீட்டில்
துணையாகும் நோய்களில் சில...
1. இதய நோய்கள்
இதய இரத்தக் குழாயடைப்பு/
இதய அறுவை சிகிச்சை/
பைபாஸ் சிகிச்சை/இதய
வால்வு மாற்று/ஆஞ்சியோ
பிளாஸ்டி/ஸ்டெண்ட் பொருத்துதல்/
பேஸ் மேக்கர் பொருத்துதல்/
இரத்தக் குழாயில் கட்டி நீக்குதல்.
2.புற்று நோய் சிகிச்சை
கதிர் வீச்சு/கிரையோதெரபி
3.சிறுநீரகச் சிகிச்சை
சிறுநீரக அறுவை சிகிச்சை/
மாற்று சிறுநீரகாம் பொருத்துதல்/
சிறுநீரகம் அகற்றுதல்.
4.மூளை & நரம்பு மண்டல சிகிச்சை
மூளை/தண்டுவடம் சார்ந்த நோய்கள்/
கபாலம் தொடர்பு /முதுகு தண்டு/
தீராத வலிப்பு/ பக்க வாதம்/
மூளை இரத்தக் குழாயடைப்பு/
தலை நீர் வீக்கம் அறுவை சிகிச்சை.
5.முட நீக்கியல் சிகிச்சை
இடுப்பு/முழங்கால்/மூட்டு...அறுவை
சிகிச்சை/மூட்டு மாற்று/மூட்டு விலகல்
எலும்பு முறிவு/எலும்பு விலகல்/
மூட்டு தசை நாண் நோய்/
குல்லியன் பாரி வாத நோய்.
6. நெஞ்சக நோய் சிகிச்சை
நுரையீரல் சீழ் கட்டி/நெஞ்சறை
காற்று சேர்தல்/தலாசீமியா/
சிக்கிள் செல் இரத்த சோகை
7.கண் நோய் சிகிச்சை
விழித்திரை விலகல் அறுவை
சிகிச்சை/ நீரழுத்த நோய் /
கருவிழி அகற்றல்/லேசர் சிகிச்சை.
8.கருப்பை சிகிச்சை
புற்று நோய் பொருட்டு
அறுவை சிகிச்சை
9. இரத்தக் குழாய்கள் சிகிச்சை
சைனஸ்/பித்தப்பை/கல்லீரல்/
கணையம் அறுவை சிகிச்சை/
எண்டாஸ்கோப்பி/தீக்காயம்/
உதட்டு பிளவு/மேல் அண்ண
பிளவு/ஸ்டேபிஸ் எலும்பு அகற்றல்.
10.இதர பிற நோய் சிகிச்சை
கோமா/மூளை காய்ச்சல்/
தைராய்டு சுரப்பி அறுவை
சிகிச்சை/விபத்து தொடர்பான
சிகிச்சைகள்.
நோய்க்கான தீர்வு
காற்று வடிகட்டி வாயிலில்லை
மூக்கு சுவாசம் நாடு.
கல்லீரல் பாவம்..புகை/
போதை நீக்கு.
ஒரு கால் வீக்கம்..யானைக்
கால் அறிகுறி.
இரு கால் வீக்கம் ...சிறுநீரக
சிக்கல்...உப்பைக் குறை.
வாயில் புண்/50..ல் தூக்கம்
இன்மை...உடலின் உள்நாட்டு
யுத்த தொடக்கம்...கவனம் வை!
சர்க்கரை நோய் வியாதி அல்ல
ஹார்மோன் குறைபாடே...அதனை
யோகா வித்தை தீர்க்கும் !
உணவு முறை மாற்று!
பசியெடுக்க சாப்பிடு!
மலச் சிக்கல்
மனச் சிக்கல் போக..
நோய் விலகி ஓடும்!
இந்திய பொறியியல் மேதை
103 ஆண்டுகள் வாழ்ந்த
அறிஞர். விஸ்வேஸ்வரய்யா
100 வருடம் மனிதன் வாழ
சொல்லிச் சென்ற பதிவு...
1.அளவோடு சாப்பிடு
2. எப்போதும் மகிழ்ச்சியாயிரு.
3.குறித்த நேரம் தூங்கு.
4.சம்பாதிப்பில் செலவை அடக்கு.
5.முடிந்த அளவு சேமி.
6.களைப்பு காணும் வரை உழை.
7.சுறுசுறுப்புடன் இரு.
மனிதன் தேடி மரணமில்லை!
மரணம் தேடியே மனிதன்!
நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்!
உடல் நலம் பேணுவோம்!
கவனக் குறைவால் நோய் வர ...
ஆயுஷ்மான் பாரத்
சேவை நாடுவோம்!
மத்திய அரசு/மாநில அரசு
மருத்துவ காப்பீட்டு திட்டம்
பணி சிறக்க ஒத்துழைப்போம்!
ஆக்கம்....
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகாரன்,
முதுநிலை ஆசிரியை,
அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9950739728.
Comments
Post a Comment