வேளாண் விளைபொருட்களை விற்க தமிழக அரசின் கட்டணமில்லா சேவை..


வேளாண் விளைபொருட்களை விற்க மற்றும் வாங்க தமிழக அரசின் கட்டணமில்லா சேவை..



கொரோனா வைரஸினால் தற்சமயம் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் விளைபொருட்களை விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் தாங்களாகவே வியாபாரிகளை தொடர்பு கொண்டு வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்திட ஒரு “கட்டணமில்லா உழவன் இ சந்தை” எனும் சேவையை “உழவன் செயலி” மூலம் உருவாக்கியுள்ளது


இந்த சேவையின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களையும், வியாபாரிகள் தாங்கள் வாங்க விரும்பும் விளை பொருட்களையும் பதிவு செய்து கொள்ளலாம். வியாபாரிகள் மாவட்டம் வாரியாக மற்றும் பயிர் வாரியாக விவசாயிகள் விற்பனை செய்யவுள்ள விளைபொருட்களை இச்செயலின் மூலம் பார்த்து விருப்பம் தெரிவிக்கலாம்.


உடனடியாக வியாபாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரம் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் வாயிலாக தெரிவிக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு வியாபாரிகளை தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு லாபகரமான விலையில் விற்பனை செய்து பயனடையலாம்.


எனவே உழவர் பெருமக்கள் அனைவரும் உழவன் செயலியில் உள்ள உழவர் இ சந்தை சேவையை பயன்படுத்தி தங்கள் விளை பொருளுக்கேற்ற விலையை பெற வேளாண்மை துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.