ஶ்ரீ அத்யானந்த பிரபு எனும் பிள்ளையாரும், அனுமனும் சேர்ந்த கடவுள்.
அருள்மிகு ஸ்ரீ அத்யானந்தபிரபு திருக்கோவில் மத்யகைலாஷ், சென்னை.
ஶ்ரீ அத்யானந்த பிரபு எனும் பிள்ளையாரும், அனுமனும் சேர்ந்த கடவுள் திருவுருவம் இன்று வணங்க பதிவு செய்துள்ளோன்.
கோவில் அமைப்பு
இக்கோவிலின் மூலவர் வெங்கட ஆனந்த பிள்ளையார் (விநாயகர்). கருவறையைச் சுற்றி சிவன், திருமால், உமையாள், சூரியன் ஆகியோரின் சிறு கோவில்களும் உள்ளன. மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனுமன், பொற்பைரவர், நவக்கிரக சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
பிள்ளையார் சதுர்த்தி நாளில் சூரியனின் கதிர்கள் இப்பிள்ளையாரின் மேல் விழுவது இக்கோவிலின் சிறப்பு. பிள்ளையார் "ஓம்" எனும் மந்திரத்திற்குரியவர் என்பதாலும் இசையின் ஏழு சுரங்களையும் குறிக்கும் வகையில் இங்கு எட்டு மணிகள் நிறுவப்பட்டுள்ளன. (ச, ரி, க, ம, ப, த, நி, ச என்று முடிவதால் எட்டு என்று கொள்ளப்பட்டது.) இக்கோவிலிலுள்ள அத்யானந்த பிரபு எனும் அனுமனும் பிள்ளையாரும் சேர்ந்த கடவுள் உருவம் புகழ் பெற்றது.
சென்னை, அடையாறு பகுதியில், தரமணி செல்லும் ரோட்டின் அருகே மத்தியகைலாஷ் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள 33 தெய்வத் திருவுருவங்களும் இந்தக் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானத்தால் கொடுக்கப்பட்டவை ஆகும்.
எது ஆரம்பித்ததோ அது முடிவடையும்.எதற்கு ஒரு ஆரம்பமோ முடிவோ இல்லையோ அது அந்த பரப்ரஹ்மம் தான். தொடக்கமும் முடிவும் சேர்ந்து இருப்பது ஆதி அந்தம் ஆன எல்லாம் வல்ல இறைவன் தான் அது. அதனால் தான் நாம் அந்த இறைவனை ஆதி , அநாதி, அந்தம், ஆனந்தம் , அந்தாதி என்றெல்லாம் பெயர் சொல்லி அழைத்து பூஜை செய்கின்றோம். எதை ஒன்றை தொடங்கும்போதும் நாம் விக்கினம் இல்லாமல் நடக்க அந்த விக்னேஸ்வரனை வணங்கி தொடங்குவோம். எல்லா தடைகளையும் நீக்கி நம்மை காப்பர் விக்னேஸ்வரன். நாம் அந்த செயலில் வெற்றி பெற்றதும் ஜெயம் என்பதில் ஹனுமனை துதித்து போற்றுவோம். இது எல்லா செயல்களிலும் பொருந்தும். இந்த கோவிலின் நிர்வாகஸ்தர்கள் இந்த இரண்டு தெய்வங்களையும் ஒரு சேர சிவ சக்தியின் அர்த்தநாரீஸ்வரர் போலவும், சங்கரநாராயனின் சிவன் சங்கரன் போலவும் கணபதியையும், அனுமனையும் இணைத்து ஒரு சிலை உருவாக்கினர்.
இந்த கோவில் மேலும் புகழ் அடைய காரணம் இந்த அத்தியந்த பிரபு , இடது பக்கம் கணபதியும், வலது பக்கம் அனுமனும் சேர்ந்து இருப்பது தான்.
பக்தர்கள் இவருக்கு தாங்களே ஆரத்தி காட்டலாம். பித்ரு காரியங்களை இந்த கணபதி ஏற்று செய்கின்றார். ஒவ்வொரு நாளும் மதியம் பூஜை செய்பவர் குளித்து ஈர உடைகளுடன் பூஜைகளை ஆரம்பித்து தர்பைகளை அனந்தவிநாயகர் பாதங்களில் சமர்பிப்பார் அதன் பின் விஷ்ணுவின் சன்னதிக்கு சென்று அங்கே படைக்கப்பட்டுள்ள வெள்ளை சாதத்தை எடுத்துக்கொண்டு சிவன் சன்னதிக்கு செல்வார். அங்கு அந்த சாதம் பித்ருக்களுக்கான பிண்டமாக உருட்டப்பட்டு அங்கிருந்து சூரியனின் சன்னதிக்கு சென்று பின் அங்கு தனியாக அமைக்க பட்டுள்ள மேடையில் காகங்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சேவை தேவை படுபவர்கள் ஆலய நிர்வாகிகளை அணுகி விண்ணப்பிக்கலாம். பித்ருக்களுக்கான காரியங்களை நாம் எல்லோரும் தவறாது செய்ய வேண்டும். கர்த்தாக்கள் இல்லாத வீட்டிலும், பெண்கள் செய்ய முடியாத நிலையில் , இந்த ஆலயம் மிக பெரிய சேவையாக இதை செய்து வருகிறது. யார் வேண்டுமானாலும் இங்கு இந்த சேவையை பயன் படுத்திக்கொள்ளலாம். அதற்கென தனி படிவமும், கட்டணமும் உண்டு.
இங்கு ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ அஸ்த தசபுஜ மகா துர்கை, ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீ கருடாழ்வார், மற்றும் நவகிரஹங்களும் உள்ளது.
கோவில் திறந்திருக்கும் நேரம் : 5:30 AM - 12:00 PM and 4:00 PM - 8:00 PM
மத்திய கைலாசம் (மத்திய கைலாஷ்) எனும் இந்துக் கோவிலானது தென்சென்னையில் அமைந்துள்ளது. இக்கோவில் சர்தார் வல்லபாய் படேல் சாலை, அடையாறு சாலை, இராஜீவ் காந்தி சாலை ஆகிய முச்சாலைகளின் சந்தியில் அமைந்துள்ளது. இது நடுவண் தோல் ஆய்வு நிறுவனம் எதிரிலும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது.
பேருந்து நிறுத்தம்
மத்திய கைலாசப் பேருந்து நிறுத்தமானது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிறுத்தங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு உண்மையாக இரு பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஒன்று சர்தார் படேல் சாலையிலும் மற்றொன்று பழைய மாமல்லபுரச் சாலையின் துவக்கத்திலும் அமைந்துள்ளது. இவ்விரண்டிலும் முதலாவது முதன்மையானதாகும். ஏனெனில் அனைத்து மா.போ.க பேருந்துகளும் இங்கு நிற்கும். நடுவண் தோல் ஆய்வு நிறுவனம் (Central Leather Research Institute) எதிரில் அமைந்திருப்பதன் காரணமாக இப்பேருந்து நிறுத்தம் சுருக்கமாக சி.எல்.ஆர்.ஐ. பேருந்து நிறுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஆன்மீக பூமி,
சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.
ௐ ஶ்ரீ மஹா கணபதயே நம:
ஓம் ஶ்ரீ ராம தூதா ஆஞ்சநேயா நம;
என்றும் இறைபணியில்
ஶ்ரீ அபிராமி கோ.ஶ்ரீநிவாசன்
Comments
Post a Comment