போலி கபசுரக்குடிநீர் விற்றால் நடவடிக்கை...மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்....
போலி கபசுரக் குடிநீர் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் வேளையில், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்ட, கபசுரக் குடிநீர் அருந்தலாம் என சித்த மருத்துவத் துறை பரிந்துரை செய்துள்ளது. எனவே மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.சுசிகண்ணமா அவர்கள், கபசுரக்குடிநீரை அருகிலுள்ள அரசு சித்த மருத்துவப் பிரிவுகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்கள் பெற்று பயன் அடையலாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் போலி கபசுரக் குடிநீர் பாக்கெட், முத்திரை, பதிவுகள் ஏதுமின்றி விற்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்… இவ்விஷயத்தில் மக்கள் ஆதீத விழிப்புணர்வுடன் இருந்து, கபசுரக் குடிநீரின் தரத்தினை உறுதி செய்து, முறையாக அனுமதி பெற்ற கடைகளில் வாங்கிப் பயனடைய வேண்டும் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார். கபசுரக் குடிநீர் 100கி, 200கி மற்றும் 500கி அளவில் தனியாகவும் கிடைக்கும் என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
-மரு.சுசிகண்ணம்மா
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர். செய்தி :வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment