குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் கபசுரக்குடிநீர் லோகநாதன் எம் எல் ஏ கலந்து கொண்டு வழங்கினார்
குடியாத்தம் ரோட்டரி சங்கம் ,பாலாஜி பல் மருத்துவமனை மற்றும் இம்ப்காப்ஸ் சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கே.வி. குப்பம் பஸ்நிலையத்தில் இன்று பொது மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கே.வி. குப்பம் எம் எல் ஏ லோகநாதன் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுரக்குடிநீர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வழங்கினார். இந்நிகழ்ச்சியில் JKN.பழனி மாவட்ட ஆளுநர்,ரோட்டரி வி.ராமு வேலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கே.எம். ஐ.சீனிவாசன் டைரக்டர் ஆம்பூர் சுகர் மில் ,குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் PLN.பாபு RtnT.S.ரவிச்சந்திரன், செயலாளர் Rtn Dr.V.பாலாஜி சமுதாய பணிஇயக்குனர் ,டாக்டர். வி.பாலாஜி, டாக்டர்.எஸ். பி. அபிநயா, ஆகியோர் இந் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் மருந்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சித்தமருத்துவர் டி.பாஸ்கரன் கலந்து கொண்டு சிறப்பித்தார் .செய்தி. வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment