பண்பாடு சாற்றும் வெகுமதி விந்தைக் கலையான உலக நடன தினம் -முனைவர். பெ. தமிழ்ச்செல்வி
உலக நடன தினம்
நடையில் அலங்காரம்
அபிநயத்தில் அச்சு பிசகாமை
முகத்தில் பாவம் பிரதிபலிப்பு
உடலசைவு இசையோடிணைந்து
காண்பவரை கட்டிப்போட்டு
சிந்தாமல் சிதறாமல்
உணர்வுகளை உரசி
தன்னோடு பயணிக்க விடும்
செப்பிடு வித்தைக் கலையான
பண்பாடு சாற்றும்
வெகுமதி விந்தைக் கலையான
உலக நடன தினம்!
நான்முக நாயகன் ,
நாராயணின் உந்தி பிறந்தோன்,
கலைமகளின் துணைவன்,
ஆறுமுக வேலவனிடம்
பிரணவ மந்திரம் அறிந்த
யுகங்கள் 4 அளித்த பிரம்மன்...
*ரிக் வேதமிடருந்து பொருள்
*யஜூர் ..லிருந்து அபிநய பாவம்
*சாமம் வேதம் ..தந்த பண்
*அதர்வணம் கண்ட நவரசம்
அத்தனையும் அள்ளிக் குறையாமல்
மாலையெனத் தொடுத்து
பரத முனிவருக்குத் தாரை வார்க்க,
முக்கண்ணன் முன்வந்து
தண்டு முனிவர் மூலம்
தாண்டவம் வாரி வழங்க,
பார்வதியும் லாஸ்ய நடனம் அருள
நடனக்கலையின்
நர்த்தனம் ஆரம்பமானது!
நடன தத்துவம்
பாரதி சொன்ன நிதர்சனம்
"சொல்லு சொல்லென்று
துடிக்குதென் உதடும் நாவும்"!
25.01.2015..ல்
ஸ்டான்போர்ட் சொன்ன தத்துவம்
"நடன நுண்கலை என்பது
மதிப்பீடு செய்து,
மனங்குளிர ரசித்து
கலாச்சாரம் சார்ந்தது!"
தோற்றம்
1981....ல்
தேசிய நடன வாரம்
ஏற்படுத்தப்பட்டது!
1982....ல்
யுனெஸ்கோ நிறுவன
கலாச்சார ஊக்குவிப்பின் கீழ்
சர்வதேச நடனசபை
சத்தமில்லாமல் தொடக்கம்!
முதல் அச்சாரமாக
சர்வதேச நடனக்குழுவால்
சர்வதேச நடன தினம்
அரங்கேற்றம் கண்டது!
29.04.1727...ல் பிறந்த
பிரென்ச் நடன பாலே தந்தை
ஜார் ஜஸ் நோவர் ...பிறந்த நாள்
ஏப்ரல் 29. ல் கொண்டாடுவதாக
தீர்மானம் கையெழுத்து கண்டது!
2003...லிருந்து அத்தினமே
நடன தினமாக களம் கண்டது!
அன்றைய நடனசபை தலைவர்
பேரா.அல்கீஸ் ராப்டிஸ்...
"நடனத்திற்கு உலகிலுள்ள
200 நாடுகளில் பாதி கூட
சட்டரீதியான அந்தஸ்து
பெறவில்லை"ஆதங்கத்தை
ஆதாரமாக ...அரசிடம்
நிதிநிலை ஒதுக்கீட
பெற வாய்ப்பு கிட்டாத
எட்டா நிலையை
வெளிப்படுத்தினார்!
2005..ல் ஆரம்பக் கட்ட நிகழ்வாக
*ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு
போதிப்பது!
*பாடசாலைகளில் நடன விழா எடுப்பது!
*நடனம் பற்றி கட்டுரைகள்/புகைப்
பட கண்காட்சி/ கருத்தரங்கு/
சொற்பொழிவு/வீதி நடனங்கள்
ஏற்படுத்தப்பட்டது.
2006...ல்
தலைவர் செய்தியாக...
"அக்கறையின்றி நடனக்
கலைஞர்கள் இருப்பதே
நடனக்கலை அங்கீகரிக்கப்
படாதற்கான காரணம்.
ஒன்றுபட்டு செயல்பட
வாருங்கள்!"எனும் அழைப்பானது".
2007..ல் இத்தினம் குழந்தைகளுக்கு
அர்ப்பணிக்கப்பட்டது!
குறிக்கோள்
1. பூமியின் மக்கள் தொகையை
ஓரிடத்தில் ஒன்றிணைத்து,
செய்தி பொதிந்த நடனம் தருவது!
2.பொதுமக்களிடையே நடன
முக்கியத்துவம் குறித்த
அறிவை அதிகரிப்பது!
3.அரசாங்கம் நடனத்திற்கு
செயல்பாடு நிகழ்வுகள் தருவது!
4.முறையான நடனக்கலையை
ஆரம்பக் கல்வியிலிருந்து
உயர் கல்வி வரை வழங்க
தூண்டுவது/வலியுறுத்துவது!
இசைக்கு அசையும் இனிய கலை
அபிநயம் கூடிய அழகு கலை
கலாச்சாரம் பதிவிடும் கவின் கலை
இறைவன் காட்டிய தெய்வீகக் கலை
புனிதம் நிறைந்த நடனக் கலை
இலக்கணம் மாறாமல்
தலைக்கனம் ஏறாமல்
தனக்கெனத் தனித்துவம் கொண்டு
நாடு/மாநிலம்/மாவட்டம்/சமூக
மாற்றங்கள் கொண்டு
ஆடுபவனைக் கலைஞனாக்கி
ஆடவைப்பவனை நடனஆசானாக்கி
சேதாரமின்றி
வாழ்வாதாரமாக்கி
சூடக் கண்ட பெயர்கள்!
மாநில வாரியாக நடனம்
தமிழ்நாடு...பரத நாட்டியம்
கேரளா....கதகளி/மோகினி/துள்ளல்/
கிருஷ்ணா ஆட்டம்/ஓட்டம்/
தாசிஆட்டம்/ கூடி ஆட்டம்.
ஆந்திரா...குச்சிப்பிடி/கோட்டம்/
வீதி பகவதம்.
கர்நாடகா....யகூகானம்
ஒரிசா...........ஒடிசி
மணிப்பூர்.....மணிப்புரி/லாய்ஹரோபா
ஜம்மு&காஷ்மீர்......சக்ரி/ ரூக்ப்
பஞ்சாப்.......பாங்ரா/கிட்டா
பீகார்.........லாகூய்/நாச்சாரி/
பிதேஷியா/ஜட்டா...ஜட்டின்
அஸ்ஸாம்....... பிகு
பாரம்பரிய இந்திய நடனம்
பரத நாட்டியம்/கதகளி/குச்சிப்பிடி/
மணிப்புரி/ஒடிசி.
தென்னிந்திய கிராமிய நடனம்
தேவராட்டம்/தண்டரியா/இலவா/
கரகம்/கும்மி
வட இந்திய கிராமிய நடனம்
கும்ஹால்/லாமா/பங்கி/பங்காரா/
லகூர்/துராங்/மாலி/தேராதலி.
கிழக்கிந்திய கிராமிய நடனம்
நாகா/ஹஸாகிரி/மூங்கில் நடனம்/
பிகு/கர்மா/பாவுல்/காளிநாச்/பைக்.
மேற்கிந்திய கிராமிய நடனம்
கெண்டி/பகோரியா/ஜாவார்/
காலா/பிண்டி/தாண்டியா/பண்டோ.
நடனம் ஒரு உத்வேகம்
சில கற்பனைகள்
சில சந்தோசங்கள் காண,
சிலர் பாராட்டு
பாழாய்ப் போன மனதை
பறக்க விடும் ...விந்தை
அறிந்ததே நடனம்!
பேசத் தெரியும் முன்பே
கை/கண்/கை/கால்
அசைத்து உணர்ச்சி காட்டி
தேவை சொல்லும்
குழந்தைப் பருவம் காட்டுவது...
மொழிக்கும்/இசைக்கும்
முன்பே நடனம்
இருந்ததென்ற ஆணித்தர உண்மை!
இறுக்கமான /நெகிழ்வான/
அசாதாரண/கட்டுப்பாடு/
ஆதிக்கமான/முதன்மையான/
உணர்ச்சி ரீதியான/புதுமையான/
இத்தனை சங்கிலிகள் பிணைத்து,
நடை/நடன திசை தீர்மானித்து,
ஆசைக்கு வித்தூன்றி,
ரசிகர்களைக் கவர்ந்து,
ஏக்கத்தை எழுப்பி,
எதிர்கால திருப்பு முனையில்
சிந்தனையை திருப்பி...
நர்த்தனமாடுவதே நடனம்!
விண்ணும்/மண்ணும் நடனச்சாலை
*விண்ணில் மின்னலின்
கீற்று நடனம் காண
மண்ணில் மயிலின்
தோகை நடனம்!
*கிழக்கில் சூரியனின்
குபுக் எனும் குதிப்பு
நடனம் கண்டு
சேவலோடு உயிரினங்கள்
அசையும் நடனம்!
*காற்றும் அசைந்தே
ஸ்பரிச நடனம் ஆட
இலைகளோடு பூக்களின்
ஒய்யார நடனம்!
*மலையருவி தடதடவென
பூமி தழுவும் நடனம் தர
மண்ணுறிஞ்சும்
நிகழ்வு கூட நடனம் தானே!
*பால்நிலா வானிலே
மேகம் உரசி
விண்மீன் நலம்
குலாவுவதும் நடனமென்பேன்!
நடனத்தில் பரதம்...
ப...பாவம்/ர...ராகம்/...தாளம் ஆக,
பாவம்...நவரச உணர்ச்சியை
ராகம்.....இசையை
தாளம்...இரண்டையும் சேர்த்து,
உண்மையையில் தனிமொழியாகி,
கை வீச்சிலே நடனமாகி,
இயந்திரங்கள் ஓடுகையில் நடனமாகி,
ஜீவ இயக்கத்தில் இதய/இரத்த
ஓட்ட விசையும் நடனமாகி,
சிவனிடம்..
மகிழ்ச்சியில் தாண்டவம்
கோபத்தில் ருத்ர தாண்டவம் கண்டு,
பார்வதியிடம்..
மென்மை/அசைவு/பதங்களுள்ள
லாஸ்யா நடனமாகி,
திறமை/திறன்கள்
இருக்க எஜமானாக்கும்
நடனம்.... தெய்வம் தந்த
தெய்வீகக் கலையே!
இதையெல்லாம் புதிய பாணியிலே
பாலே நடனம் மூலம்
தோல்/தசை இரப்பராக்கி தந்த
வக்லவ் நிஜன்ஸ்கி
உலகின் 8 வது அதிசயம் எனப்பட்டார்!
நோவர் தன்
நடனம்&பாலே குறித்த கடிதங்கள்
நூலில் .சொன்னது!
..குதித்த சுற்று நடனம்
ஆத்மாவை பறக்க விடும்
கவலை தோற்கடிக்கும்
தைரியம் தரும்
மகிழ்ச்சி தரும்!
சான்றுகள்
1.ஓவியங்கள்
*குகை வாழிட ஓவியங்கள்
*எகிப்து கல்லறை ஓவியம்
*சிந்துவெளி நாகரிக ஓவியம்
*பிரேசில் கற்களில் ஓவியம்
மழைக்காடு ....பாலைவனம்
வரை சித்தரித்து !
2. .கோயில் சிற்பங்களின் மூலம்.
3. ஜிம்னாஸ்டிக்,/ கட்டா எனும்
தற்காப்புக் கலை/நீச்சல்/
பனிச் சறுக்கு அத்தனையும்
லாவகமான நடனத்தை
உள்ளடக்கிய சான்றுகளே!
4.ஆடிய காலும் பாடிய வாயும்
சும்மாயிராது....பழமொழியான
நடனம் சான்றாதாரங்களாய்...
கல்வெட்டுகள்/அகழ்வாராய்ச்சி/
இலக்கண நூல்கள்/
இலக்கியங்களில் சான்றுகளாக!
5. காஸ்மிக் நடனம்...தில்லை நடராஜர்
சிலை...நடனம் காட்டி
6. தமிழகத்தில் நடனத்திற்கென..
பொன்னம்பலம்சபை/வெள்ளி
சபை/தாமிர சபை உண்டு.
7.இறைத் தன்மையோடு /இறைவனை
தொடர்பு படுத்தும் நடனங்களில்..
காளி/சிவ..பார்வதி/விநாயகர்/
கிருஷ்ணரும் அடங்குவர்.
8.ஒரு நாட்டின் மொழி/சுற்றுச் சூழல்/
பண்பாடு/வாழ்க்கை முறை/பழக்க
வழக்கம் பற்றி ...
கண்கள்/முகம்/கை முத்திரை/கால்/
பாதம் மூலம் நடனம் வெளிப்படுத்தும்.
9. தொல்காப்பியத்தில்...
நடன கூறுகளாக விபாவம்/
சஞ்சாரி பாவம்/ஸ்தாயி பாவம்.
10. மெய்ப்பாடு இலக்கணத்தில்..
ரஸம்/பாவம்.
11. அகத்தியர் ...இந்திரன் சபையில்
ஊர்வசி நடனம் கண்டது.
12.வேள்விகளில் வேத ரிஷிகளின்
நடனம்.
13. மகாபாரதம் ..அர்ச்சுனன் விராட
புதல்விகளுக்கு கற்றுத் தந்தது.
14.காளிதாசன் மாளவிகானிமித்திரம்
நாடகத்தில் தேவர்கள் கண்ட நடனம்.
15.நவரசங்கள் தேவை என புரிய விடும்
மாயவன்...அல்லி நடனம்/
மோகினி ஆட்டம்
விடையோன்...கொட்டி நடனம்
ஆறுமுகன் ...குடை
முக்கண்ணன்....பாண்டு ரங்கம்
காமன்....பேடாடன்
திருமகள்....பாவையாடல்
பைரவி....கூத்து
முருகன்...சூரசம்வதம்
கை/கால் ஆட்டுவதல்ல நடனம்
உணர்ச்சியில் எழுந்து
உணர்வை விளக்கி
உணர்வைத் தூண்டும்
ஒப்பற்ற மன எழுச்சிக் கலை!
நடனம் தரும் நன்மைகள்
கரகாட்டம்/ஒயிலாட்டம்/தப்பாட்டம்/
கும்மியாட்டம்/மயிலாட்டம்/புலியாட்டம்/
காவடி ஆட்டம்/பொய்க்கால் குதிரை
போன்ற நடனங்கள்...
கண்ணீரை மறைத்து,
கவலைகள் விடுத்து,
ஆதி முதல் அந்தம் கண்டு,
உச்சி முதல் பாதம் வரை ஒப்பனை,
இசைக்கு ஏற்ப உடம்பு வளைவு,
இத்தனையும்
நடனக் கலைஞனின்
திறமை/திறன் வெளிப்பாடே!
*படைப்புத் திறன் அதிகரிப்பு
* ஒலி கேட்கும் திறன் அதிகரிப்பு
* மூளைக்குப் போகும் ஆக்சிஜன்
அதிகரிப்பு.
*தன்னம்பிக்கை அதிகரிப்பு
*மூளை செயலில் புத்துணர்வு
*டான்ஸ் தெரபி மூலம்..
மன சோர்வு/மன இறுக்கம் குறைவு
* மூளை ஹார்மோன் சுரப்பு
அதிகரிக்க பாசிட்டிவ் ஆற்றல் பெறல்
* மனம் ஒருமுகப்படல்
* கை/கழுத்து/கால் தசைகள் பலப்படல்
*தலைவலி மறைதல்
கோபம்/மன உளைச்சலுக்கு
முற்றுப்புள்ளி
கண்ணுக்கு நல்ல பயிற்சி
மூளை நரம்புகளின் இயக்கம் சீராதல்
அபிநயம்/ரிதம் காணபுத்திக் கூர்மை
உடல் வலிமை/ஆரோக்கியம் கிடைத்தல்
நடன விருதுகள்
1.அர்ஜெண்டினா...கிளாரின் விருது
2.ஆஸ்திரேலியா...ஹெல்ப்மேன் விருது
ஆஸ்திரேலிபா நடன விருது
3.ஜெர்மனி......டுயூட்சர் டான்ஸ்பிரிஷ்
4.இந்தியா...தாகூர் ரத்னா/காளிதாஸ்
சங்கீத் அகாடமி/தாகூர் புரஸ்கார்
5.நார்வே......நார்வேஜியன் நடன விருது
6.ஸ்பெயின்.....தேசிய நடன விருது
7.சுவிட்சர்லாந்து....சுவிஸ் நடன விருது
8. தாய்லாந்து..சில்பாத்ர்ன் விருது
9. UK.....டான்ஸ் மாஸ்டர்/எலிசபெத்
ராணி 11/மிஸ் டான்ஸ்/இறகு
விருது/கார்ல் ஆலன் விருது
தமிழ்நாடு
2001 -2016...சரோஜா வைத்தியநாதன்/
ஹேமா ஸ்ரீபால்/பார்வ ரவி கண்டசாலா/
பத்மினி துரைராஜன்/இரணியூர் லட்சுமி/
சி.பாலகிருஷ்ணன்/முத்துராமலிங்கம்/
ஏ.ஹேம்நாத்/பத்மஸ்ரீ விருது.நர்த்தகி
நடராஜ்....போன்றோர் சான்றாக.
*மொழி அறியாதவனிடம் கூட
அபிநய பாஷையில் நடனம்
*பர்மாவில் ...உற்சாக பீடமாக நடனம்
*ஜப்பானியர்க்கு...அபாரமாக நடனம்
*பாரசீகர்களுக்கு ...சொக்கி போடும்
வித்தையாக நடனம்
*ஐரோப்பியர்க்கு ...சமூக தேவைக்காக
*இந்தியாவில்.....புனிதமாக/தெய்வ
பக்தி சாதனமாக
அபிநயம் கலந்து
அங்கங்களில் காட்டி
மரபு காட்டும்
கலாச்சாரம் மிளிரும்
நடனக் கலைஞர்களை
சிறப்பித்து விருது வழங்கி
அரசாங்கத்தோடு
சில சங்கங்களும்/சமூக
அமைப்புகளும் முனைகின்றது.
உதாரணமாக...
1.லயோலா கல்லூரி தமிழ்த் துறை
நடத்தும் வீதி விருது குழு...இரு தினங்கள்
ஒவ்வொரு வருடமும் கலைஞர்களை
தலைவர். திரு காளீஸ்வரன் குழு
அனைத்து தமிழ்நாட்டு நடனக்குழுவை
கௌரவிப்பது சிறப்புக்குரியது.
ஜனவரி.2019. 6&7தேதி நிகழ்வு
கண்ணுக்குள்ளே உள்ளது.
2.கொடு முடி உதய நிலவு/
குடியாத்தம் ... தமிழக நடனக்
குழுவினரை வரவழைத்து
விருது தந்து சிறப்பிக்கும்
திரு.சிவகுமார் குழுவின் பணி
பாராட்டப்பட வேண்டியது.
இப்படி சிலர் மூலம் பயனடைவு
இருப்பினும்..
தற்போதைய கால கட்டத்தில்
அரசாங்கம் அவர்களுக்கு
உதவித்தொகை வழங்குவது
வரவேற்புக்குரியது!
நடனக் கலையை ஊக்குவிக்கும்
விதத்தில்/நடனக் கலைஞர்களை
ஆதரிக்கும் விதத்தில்...
பள்ளி/கல்லூரிகளில் விழாக்களில்
முக்கியத்துவம் தருவோம்.!
கல்யாணம்...கோயில் ..மற்ற
நிகழ்வுகளில் நடன நிகழ்வு
வைத்து அக்கலையை
ஊக்குவிப்போம்!
கலைஞர்களின் வாழ்வாதாரம்
நாமும் நம் கருத்தில் வைப்போம்
என்று அன்போடு கேட்பதோடு...
நடன தின வாழ்த்துகளை
கூறி....இறைவனிடம் அவர்களுக்கு
நீண்ட ஆயுள்
நிறைந்த ஆரோக்கியம்
தர விண்ணப்பம் வைக்கும்
சகோதரி..
முனைவர். பெ. தமிழ்ச்செல்வி,
முதுநிலை ஆசிரியை,
அ..ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை..632513
9949739728.
Comments
Post a Comment