வேலூர் சிசு பவன் மாற்றுத் திறனாளிக்கு உபகரணங்கள். மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள சிசு பவனில் தங்கியுள்ள செவித்திறன் ,பேச்சுத் திறன் குறைபாடுடைய 40 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற
குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படமால் பாதுகாத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்மு கசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் சத்தான உணவு பொருட்கள் கையுறைகள், முககவசங்கள், கைகளை கழுவ கிருமிநாசினி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்கள். உடன் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் திரு.பாபு உள்ளார்.
Comments
Post a Comment