திருப்பத்தூர்: நடமாடும் ஏடிஎம் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்
நடமாடும் ஏடிஎம் இயந்திரம்
மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்
கொரோனா வைரஸ் காரணமாக திருப்பத்தூர் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட கலெக்டர் சிவன்அருள் அறிவித்தார் இதனையொட்டி வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது இதனையொட்டி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் ஏடிஎம் இயந்திரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது பாரத ஸ்டேட் வங்கி வேலூர் மண்டல மேலாளர் சேதுமுருகதுரை தலைமை வகித்தார் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ரிப்பன் வெட்டியும் கொடியசைத்து ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்தும் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையபாண்டியன் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் முதன்மை மேலாளர் செல்வராஜ் மண்டல அலுவலகம் முதன்மை மேலாளர் செல்வக்குமார் வங்கி சேவை மேலாளர் பாலமுரளி துணை மேலாளர் உட்பட அனைத்து வங்கி கிளை மேலாளர் கலந்துகொண்டனர் இந்த ஏடிஎம் எந்திரம் மூலம் பணத்தை எடுக்கவும் பணத்தை போடவும் வங்கி கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதையும் பணத்தை அடுத்தவர் கணக்கிற்கு மாற்றவும் முடியும் நடமாடும் ஏடிஎம் எந்திரம் திருப்பத்தூர் நகரம் மற்றும் தாலுகா முழுவதும் தினமும் சென்றுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்
படத்தில் ஏடிஎம் இயந்திரத்தை மாவட்ட கலெக்டர் சிவனருள் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம் அருகில் பாரத ஸ்டேட் வங்கிவேலூர் மண்டல மேலாளர் சேது முருகதுரை மற்றும் பலர் உள்ளனர்.
Comments
Post a Comment