ஜோதிகாவின் பேச்சுக்கு சூர்யா விளக்கம்.

மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌" என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌"



என்று ஜோதிகாவின் பேச்சுக்கு சூர்யா விளக்கம் தந்து ஆதரவு அளித்துள்ளார்..



அந்த கருத்தில் இருந்து தாங்கள் பின்வாங்க போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டையும் முன்வைத்துள்ளது



பலதரப்பினரால் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது!



பெரிதாக எந்த விவகாரத்திலும் சர்ச்சையிலும் சிக்காத ஜோதிகாவை... மதரீதியான பிரச்சனையில் சிக்கவைக்க முயற்சிகள் நடந்தாலும் அதனை துணிச்சலுடன் கடந்து வெளியே வந்துள்ளார் என்பதே உண்மை.



இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக ஜோதிகாவை விமர்சித்து வருகின்றனர்..



இதில் முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தது நடிகர் எஸ்விசேகர் தான்...



ஜோதிகா 100% மெச்சூரிட்டி இல்லாத பேச்சு... கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று... இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம்... உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்" என்று பதிவிட்டார்.



ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அல்லது ஜோதிகா பேசியது சரி என்று உணர்ந்தாரா தெரியவில்லை... உடனே அந்த பதிவை நீக்கிவிட்டார்..



இதுவே ஜோதிகாவின் முதல் வெற்றிதான்!!



 உங்களுக்கு உதாரணம் காட்ட கோயில்தான் கிடைச்சதா, சர்ச், மசூதி கண்ணுக்கு தெரியலையா?, நடுநிலைமையோடு பேசவில்லை ஜோதிகா என்று இந்து மத ஆதரவாளர்கள் முதல் காயத்ரி ரகுராம்வரை தனித்தனியாக விமர்சித்தனர்..



 இனிவரும் காலங்களில் ஜோதிகா இந்து மதம் குறித்து இப்படி பேசுவதை நிறுதிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வீடியோ போட்டு கண்டனமே சொன்னார்..



ஆனால் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியுமே ஜோதிகாவின் பேச்சுக்கு கண்டனத்தை சொல்லவில்லை..



இது ஜோதிகாவின் 2வது வெற்றி!!



 ஜோதிகா மீது தனிநபர் தாக்குதல்களை மிக மோசமாக நடத்தப்பட்டது.. விமர்சனங்களை பாசிட்டிவ் விமர்சனங்களால் எதிர்கொள்ளும் மனநிலை இல்லாமல் தரக்குறைவாக கருத்துக்களை முன்வைக்கப்பட்டது.. எனினும் தன் கருத்தில் ஜோதிகா பின்வாங்கவே இல்லை..



மாறாக ஆதரவுகள் பெருக தொடங்கின.. "மீடியாவில் இருக்கும் பெண்கள் மேலதிகாரிகளை அட்ஜஸ்ட் பண்ணிதான் உயர் பொறுப்புக்கு வருகிறார்கள்" என்று எஸ்வி சேகர் அன்று கேட்ட கேள்வியை திருப்பி அவரிடமே கேட்க தொடங்கினர்..



 ஜோதிகா அப்படி என்ன தப்பா சொல்லிட்டார்?



தப்பா ஒன்னும் சொல்லிடலையே.. அவர் சொன்னது சரிதான், இன்னைக்கு ஊரடங்கில் திறந்திருப்பது ஆஸ்பத்திரிகள் மட்டும்தான் என்று நெட்டிசன்கள் ஆதரவு கரம் நீட்டினர்..



இது ஜோதிகாவின் 3வது வெற்றி!



ஜோதிகா எழுப்பிய இந்த கேள்வியானது, பல நூறு வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள மனித நேயம் சிந்தனை உள்ள மக்கள் எழுப்பிய கேள்விதான்...



 பள்ளிவாசலுக்கும் இது பொருந்தும்... தேவாலயங்களுக்கும் இது பொருந்தும்.. ஏழைகளுக்கு செய்யும் சேவைதான் இறைவனுக்கு செய்யும் சேவை என்று அனைத்து ஆன்மீக வழிகாட்டுதலும் காலங்காலகமாக வலியுறுத்தும் நிலையில் தரக்குறைவான வார்த்தைகளை ஜோதிகா பயன்படுத்தவில்லை என்பதே இன்று சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சம்!



அறிஞர்கள்‌, ஆன்மிகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய கருத்தைதான் ஜோதிகா சொல்லி உள்ளார்..



அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. "மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌' என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌" என்று தெரிவித்துள்ளார்..



 இது ஜோதிகாவின் 4வது வெற்றி!



2017-ல் மெர்சல் படம் வருவதற்கு முன்பேயே ஒரு சர்ச்சை இப்படித்தான் கிளம்பியது.. எல்லா கோயில்களையும் இடித்துவிட்டு ஆஸ்பத்திரிகளை விஜய் கட்ட சொல்வதாக ஒரு பூகம்பத்தை கிளப்பிவிட்டனர் வீணர்கள்..



அத்துடன் விஜய்யை இனிமேல் ஜோசப் விஜய் என்று கூப்பிடலாம் என்றும் நக்கலாக சொன்னார்கள்...



 ஆனால் தங்களையும் அறியாமல் படத்தை அவர்கள்தான் வெற்றி பெற செய்தனர். இதேதான் ஜோதிகா விஷயத்திலும் நடந்துள்ளது..



மொத்த திரையுலகும் அவர் பக்கம் நின்றது.. நாங்க ரொம்ப ஆச்சாரமான குடும்பம்தான், ஆனால் ஜோதிகா சொன்னதைதான் எங்க வீட்டில பெரியவங்களும் எங்களுக்கு சொல்லி கொடுத்து வளர்த்தாங்க என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தது மதவாததிகளுக்கு சவுக்கடியாக விழுந்திருக்கும்.



எஸ்வி சேகர் ட்வீட்டை நீக்கியதும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையறாக்களில் இருந்தே ஆதரவு கருத்துக்களை பெற்றுள்ளார்..



இது ஜோதிகாவின் 5வது வெற்றி!!



சாதி, மதம் எதையும் பார்க்காமல் கொரோனா கொண்டு போய் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும், எந்த பாடத்தையும் நாம் கற்று கொள்ளாமல், ஒரு தரப்பினர் இன்னமும் சாதியை எவ்வளவு உயரத்துக்கு பிடித்து கொண்டு தொங்குகிறார்கள் என்பதுதான் இந்த விஷயத்தில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது..



அந்த வகையில் அவதூறு செய்யாத அழுத்தமான மற்றும் தேவையான பேச்சுதான் ஜோதிகாவினுடையது..



இன்னமும் சரியாக சொன்னால், "கோயில்கள் கட்டுவதைவிடவும் கழிவறைகள் கட்டப்படுவதுதான் முக்கியம்' என்று என்னைக்கோ பிரதமர் மோடி பேசியதையும் நாம் சிலருக்கு நினைவுகூர வேண்டி உள்ளது!


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.