வேலூர் காட்பாடி தூய்மை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்இந்தியன் ரெட்கிராஸ்.

தூய்மை தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்கள் 
இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை சார்பில்
துணை ஆட்சியர் சே.கணேஷ் வழங்கினார்.



கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலூர் மாநகரம் காட்பாடி வட்டம் 14வது வார்டு தூய்மை தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு முக கவசம் முதலிய நிவாரண பொருட்கள் இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை வழங்கியது. 
காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கினார். 
வேலூர் மாநகர 14வது வார்டு தூய்மை  தொழிலாளர் 30 குடும்பத்தினருக்கும் காட்பாடி செங்குட்டையில் உள்ள தினக்கூலியினர் 20பேருக்கும் வேலூர் துணை ஆட்சியர் மற்றும் காட்பாடி ரெட்கிராஸ் தலைவர் சே.கணேஷ் நிவாரண பொருட்களை வழங்கினார்.  



இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை செயலாளர்  செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் வி.பழனி  அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமார், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்  வி.காந்திலால்படேல், எ.ஶ்ரீதரன், ஆனந்தகுமார்,  ஜி.செல்வம், செல்வமணி, தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், தினேஷ்குமார், மோனிகா டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிச்சுமணி, செயலாளர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் மாநகர தூய்மைத் தொழிலாளர் குடும்பத்தினர் முதியர்வர்கள் என 50 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டன.  
 (செ.நா.ஜனார்த்தனன், செயலாளர் 9443345667)


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.