வேலூர் கொணவட்டம் பகுதியில் மளிகை, காய்கறிகள் உதவி செய்த தினேஷ் சரவணன்...
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு இருக்கும் பட்சத்தில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும் பொது மக்களுக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கி வரும் பட்சத்தில்,வேலூர் பகுதியில் சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று
வேலூர் கொணவட்டம் பகுதியில் பீடி சுற்றும் தொழில் செய்யும் 30 பேர் தங்களுக்கு வருமானம் இல்லாததால் உதவுமாறு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த தகவல் சமூக நலனில் சேவை செய்து வரும் தினேஷ் சரவனனுக்கு தெரிந்ததும் உடனேமாநகராட்சி மண்டலம் 2 சுகாதார அலுவலர் திரு. சிவக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு நான் உதவி செய்கிறேன் என்று அப்பகுதி 30குடும்பத்தினர் க்கு சுகாதார அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் மளிகை மற்றும் காய்கறிகள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று இலவசமாக வழங்கப்பட்டது. செய்தி .வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment