இந்தியர்களுக்கு விசா நீட்டிப்பு:இங்கிலாந்து முடிவு...


லண்டன்: இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்களுக்கான விசா காலத்தை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்கஇங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.


இது குறித்து அந்நாட்டின் உள்துறை செயலாளர் பிரிதி படேல் கூறிஇருப்பதாவது: இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை துறையில் பணியாற்றும்மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஓராண்டிற்கான விசா காலம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம்31 ம் முதல் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வரை முடிவடைய உள்ள விசாக்கள் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்படும். இதன் மூலம் சுமார்3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலன் அடைவர் என கூறினார்.


சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் கூறியதாவது:


நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் செவிலியர்கள் பணி புரிந்து வருகின்றனர். நாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். விசா காலம் நீட்டித்திருப்பது அவர்களுக்கு மி க பயனுள்ளதாக அமையும் மேலும் அவர்கள், பணிகளில் தீவிர கவனம் செலுத்த முடியும் என கூறினார்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.